சனி, 4 ஆகஸ்ட், 2018

டென்மார்க் . பொதுவெளியில் முக்காடு அணிந்த பெண்ணுக்கு அபராதம்

BBC :டென்மார்க்கில், பொதுவெளியில் முகத்தை மறைப்பது போன்று முக்காடு அணிந்த பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பெண்கள் பொது வெளியில் முகத்தை மறைப்பது போன்று உடை அணிவதற்கு அந்நாட்டில் விதிக்கப்பட்ட தடை கடந்த புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக 28 வயது பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டென்மார்க் பாராளுமன்றத்தில் தாக்கலான இந்த புதிய சட்டத்தில் புர்கா அல்லது நிக்காப் என்று குறிப்பிடப்படவில்லை என்றாலும், பொது வெளியில் முகத்தை மூடுவது போன்று உடை அணிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கு மனித உரிமை குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கருத்துகள் இல்லை: