tamil.news18.com :சென்னை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மூத்த தலைவர் தா.பாண்டியனை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து விசாரித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழ் மாநில செயலரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான தா.பாண்டியன் உடல் நலக்குறைவு காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இன்னும் சில நாட்களுக்கு மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற ஸ்டாலின், தா.பாண்யனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
அவரைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா மருத்துவமனைக்கு வந்தார். தொடர்ந்து, அவர் தா.பாண்டியனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக