செவ்வாய், 31 ஜூலை, 2018

அட்டவனை ஜாதிகளிடையே ...ஆதிக்கமும் அடக்குமுறையும் எங்கே யார் நிகழ்த்தினாலும்


Murugan Kanna : ஆதிக்கமும் அடக்குமுறையும் எங்கே யார் நிகழ்த்தினாலும்
அது கண்டிக்கப்பட வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் அரும்பட்டு கிராமத்தில் பறையர் ஜாதி வீட்டு பெண்ணை அருந்ததியர் ஜாதி வீட்டு பையன் காதலித்து திருமணம் செய்ததால் பறையர் ஜாதியினர் அருந்தியர் பையனின் வீட்டில் புகுந்துதாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
ஜாதி இந்துக்களால் ஒரே நிலையில் ஜாதிய தீண்டாமை வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் இரு ஜாதிகளுக்குள்ளும் இப்படியான ஜாதிய வன்மங்கள் நிறைந்துள்ளது மிகவும் வருந்ததக்கது. அட்டவனை ஜாதிகளிடையே இது போன்று நடக்கும் நிகழ்வுகளை உட்ஜாதி முரண்கள் மோதல்கள் என்று சிலர் மூடி மறைக்க கூடும். ஆனால் இது போன்ற சம்பவங்களை எவ்வளவு மூடி மறைத்தாலும் சில கொடுரமானவைகள் அம்பலப்பட்டு சந்தி சரிக்கிறது.
தயவு கூர்ந்து இது போன்ற அட்டவனை ஜாதிகளிடையே நடக்கும் சம்பவங்களை உட்ஜாதி முரண் என்று கூறாதீர்கள். அட்டவனை ஜாதிகள் அனைத்தும் தனித் தனி ஜாதிகளாகவே உள்ளனர். ஜாதி இந்துக்களால் ஒடுக்குமுறைகளை அனுபவித்தாலும் ஒவ்வொரு ஜாதிகளும் பல்வேறு முரண்களோடும் மோல்களேடும் சில வல்லாதிக்க போக்குகளோடுமே பயனிக்கிறது என்பதை சமுகநீதி பேசும் இயக்கங்களும ஜாதி ஒழிப்பு பேசும் இயக்கங்களும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை: