மின்னம்பலம் :“எழுந்து வா தலைவா! கலைஞர்
நலம்!” இப்படிச் சமூக வலைதளங்கள்
அத்தனையிலும் கலைஞர் என்பதே டிரண்டிங்கில் இருந்தது. வாட்ஸ் அப்பிலிருந்து வந்து விழுந்தது அந்த மெசேஜ்."டிஜிட்டல் திண்ணை: கருணாநிதியின் தற்போதைய மெடிக்கல் ரிப்போர்ட்! நேற்று மலை 6.15 மணியிலிருந்தே தொடங்குகிறேன்; காவேரி மருத்துவமனையில் வழக்கத்துக்கு மாறாகப் பரபரப்பு அதிகமாக இருந்தது. இரவு 7 மணி அளவில்தான் மருத்துவர்கள் ஸ்டாலினை அழைத்துப் பேசினார்கள். ‘சார், தலைவருக்கு ரத்த அழுத்தம் திடீர்னு குறைய ஆரம்பிச்சிருச்சு. அதைச் சரிசெய்வது சிரமமாக இருக்கிறது. ரத்த அழுத்தத்தின் குறைந்தபட்ச அளவு 80 ஆக இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். தலைவருக்கு இப்போது அது குறைந்துகொண்டே போகிறது. இப்படியே போனால் அதிகபட்சம் இன்னும் இரண்டு மணி நேரம் மட்டுமே தாக்குப்பிடிக்கும்.... சாரி சார்!’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதைக் கேட்டதும் ஸ்டாலின் ரொம்பவே உடைந்துவிட்டாராம். ஸ்டாலினை சமாதானம் செய்யவே அங்கிருந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். மருத்துவமனைக்குள் இருந்த உறவினர்களையும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் அழைத்தவர், ‘தலைவரோட உடல்நிலை ரொம்பவும் மோசமா இருக்கு. ரெண்டு ரெண்டு பேராக உள்ளே போய் அவரைப் பார்த்துட்டு வாங்க. யாரும் அங்கே போய் அழக் கூடாது’ என்று சொன்னபோது ஸ்டாலின் உடைந்து அழுதுவிட்டாராம்.
கட்சியின் முன்னணித் தலைவர்கள் இரண்டு இரண்டு பேராகக் கலைஞரைப் பார்த்துக் கும்பிட்டுவிட்டு வந்தார்கள். பிறகு குடும்பத்தினரும் உள்ளே சென்று கும்பிட்டபடியே இருந்தார்கள்.
அதேநேரம் மருத்துவமனை தரப்பிலிருந்து காவல் துறை உயரதிகாரிகளுக்கும் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. உளவுத் துறை தரப்பிலிருந்து சேலத்திலிருந்த முதல்வருக்கும் தகவல் சொல்லப்பட... அவர் சேலத்தில் இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு, உடனடியாகக் கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வர ஆயத்தமானார்.
இதற்கிடையில் சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் சிட்டி கமிஷனர்களும் உஷார்படுத்தப்பட்டனர். டியூட்டியிலிருந்து வீட்டுக்குப் போனவர்கள், விடுப்பில் போனவர்கள் என எல்லோரும் உடனடியாக அவரவர் ஸ்டேஷனில் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என அலர்ட் செய்யப்பட்டது. முதல்வர் எடப்படி பழனிசாமி நள்ளிரவு 1 மணிக்கே காவேரி மருத்துவமனைக்கு வரப்போகிறார் என்ற தகவல் பரவ... காவேரி மருத்துவமனை வளாகம் முழுக்க காவல் துறை கட்டுப்பாட்டில் வந்தது. அதாவது ரெட் அலர்ட் என்று சொல்லாமல் சொல்லப்படும் அளவுக்குத் தமிழ்நாடு முழுக்கவே முக்கிய இடங்களில் எல்லாம் போலீஸ் குவிக்கப்பட்டனர்.
கிராமங்களுக்குச் செல்லக்கூடிய பேருந்துகளைப் பணிமனையிலேயே நிறுத்தச் சொல்லி உத்தரவிடப்பட்டது. காவேரி மருத்துவமனைக்கு திமுகவின் முக்கிய தலைவர்கள் சிலர் வந்தபடியே இருந்தார்கள். பேராசிரியர் வந்தார்; ஆற்காடு வீராசாமி வந்தார்.
காவேரி மருத்துவமனையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே, ஏதோ நடக்கிறது என்பதை உணர்ந்த தொண்டர்கள் அங்கே குவிய ஆரம்பித்தனர். அத்தனை சேனல்களின் பார்வையும் காவேரி மருத்துவமனையில் இருக்க... டென்ஷன் இன்னும் அதிகமானது. குறிப்பாக, கலைஞர் உடல்நிலை சரியில்லாமல் போனதிலிருந்து லைவ்வாக எந்தச் செய்தியையும் காட்டாத கலைஞர் டிவி நேற்று இரவு 8 மணி அளவிலிருந்து, மூன்று கேமரா ’செட்டப்’பில் காவேரி மருத்துவமனையிலிருந்து நேரடி ஒளிபரப்பைத் தொடங்கியது.
ஆனால், மருத்துவமனை தரப்பிலிருந்தோ, திமுக தரப்பிலிருந்தோ எந்தப் பதிலும் சொல்லப்படவில்லை.
இதற்கிடையில், மறுபடியும் ஸ்டாலினை அழைத்த காவேரி மருத்துவமனை மருத்துவர்கள், ‘கவர்மெண்ட் சைடுலயும் இன்ஃபார்ம் பண்ணிட்டோம். எது நடந்தாலும் நீங்க சொல்ற நேரத்துக்குத்தான் அறிவிப்போம்..’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
அந்த நேரத்தில்தான் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கருணாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க வந்தார். அப்போது என்ன செய்யலாம் என்று கலங்கியபடி குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார் ஸ்டாலின். அதனால் சிதம்பரத்தை டி.ஆர். பாலு மட்டுமே பார்த்துப் பேசி அனுப்பிவைத்தார்.
சரியாக 8.55 மணிக்கு மறுபடியும் பதற்றத்துடன் ஓடிவந்த மருத்துவர்கள், கருணாநிதியைப் பரிசோதித்தார்கள். அவர்களுக்குள் பேசியிருக்கிறார்கள்; ஸ்டாலினிடம் வந்திருக்கிறார்கள். ‘சார் தலைவருக்கு ரத்த அழுத்தம் அதுவா அதிகமாகிட்டு இருக்கு. இப்போ கிட்டத்தட்ட நார்மலுக்கு வந்துட்டாரு... எங்களுக்கே இது ஆச்சரியமாத்தான் இருக்கு.
இப்போதைக்கு எதுவும் பிரச்சினை இல்லை. இனி நாங்க பார்த்துக்குறோம்..’ என்று சொல்ல.. அவர்களின் கைகளைப் பற்றிக் கொண்டு கலங்கிவிட்டாராம் ஸ்டாலின்.
‘வெளியில் தொண்டர்கள் மத்தியில் எப்படியோ செய்தி பரவிடுச்சு. ரொம்பவும் டென்ஷனா இருக்காங்க. உடனே நீங்க ஒரு அறிக்கை கொடுங்க..’ என ஸ்டாலின் சொல்ல, கிடு கிடுவென மருத்துவ அறிக்கை தயாரானது. சரியாக 9.58 மணிக்கு, ‘கலைஞர் உடல் நிலையில் முன்னேற்றம்’ என்ற அந்த அறிக்கையைப் பார்த்துத் தொண்டர்கள் உணர்ச்சிப் பிழம்பாக வெடித்துவிட்டார்கள்.
ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, ராசாத்தி அம்மாள் எனக் குடும்ப உறுப்பினர்கள் இரவு 11 மணிக்கு மருத்துவமனையிலிருந்து கிளம்பி வீட்டுக்குப் புறப்பட்ட பிறகுதான் கலைஞருக்கு ஆபத்து இல்லை என்பதை மீடியாவே நம்பியது.
கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது. இப்போது ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளது. இருதய ஓட்டம் சரியாகிக்கொண்டே வருகிறது. கிட்னி செயலிழந்தும், லிவர் தேவையான அளவுக்கு ஒத்துழைக்காமல் இருந்தாலும் மூச்சு சீராகிக்கொண்டே இருக்கிறது” என்ற

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக