தினத்தந்தி :உள்நாட்டு போர் வெடிக்கும்” என பேசிய விவகாரம்: வன்முறையை தூண்டுவதாக மம்தா பானர்ஜிக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா, அசாம் மாநிலத்தில் வசிப்போர் குறித்த தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பதிவேடு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இதுபற்றி மோடி அரசை கடுமையாக விமர்சித்து உள்ளார்.
அவர் கூறுகையில், “தனது அரசியல் லாபங்களுக்காக மோடி அரசு லட்சக்கணக்கானவர்களை நாடு இல்லாதவர்களாக ஆக்க முயற்சி செய்கிறது. நாட்டு மக்களை இரண்டாக பிளக்க சதி செய்கிறது. இது நாட்டில், உள்நாட்டு போருக்கும், ரத்தகளரிக்கும் வழி வகுக்கும்.
இதேபோல் தேசிய குடிமக்கள் பதிவேட்டை மேற்கு வங்காளத்தில் உங்களால் வெளியிட முடியுமா?... அப்படி செய்தால் உங்களால் ஒரு போதும் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது” என்று சாடினார்.
இந்த நிலையில், சமூகத்தினர் மத்தியில் வெறுப்புணர்வு மற்றும் பதட்டமான சூழலை ஏற்படுத்தும் வகையில் பேசுவதாக, அசாம் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் மூன்று பேர், அம்மாநில காவல்துறையில் புகார் அளித்துள்ளன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக