புதன், 1 ஆகஸ்ட், 2018

காதல் திருமண ஜோடிக்கு சிறுநீர் குடிக்க செய்த உறவினர்...

காதல் திருமண ஜோடிக்கு சிறுநீர் விருந்து!மின்னம்பலம்: காதல் திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதியினரை கடத்திச் சென்ற உறவினர்கள், அவர்களை சிறுநீர் குடிக்கச் செய்து கொடுமைப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், ஹர்தாஸ்பூரில் குடும்பத்தினரை எதிர்த்து ஒரு இளம் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இந்த புதுமணத் தம்பதியருக்கு, அவரது குடும்பத்தினரே அதிர்ச்சியூட்டும் வகையில் கொடூர தண்டனை வழங்கியுள்ளனர்.
திருமணமாகி ஓரிரு தினங்களே ஆன நிலையில், பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று (ஜூலை 31) புதுமணத் தம்பதியினரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். அப்போது, மணப்பெண்ணின் அலங்காரம் முழுவதும் கலைத்து, அந்த பெண்ணின் தலைமுடியை வெட்டினர்.பின்னர், இளம் ஜோடி இருவரையும் சிறுநீர் குடிக்குமாறு நிர்பந்தப்படுத்தினர்.
இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட தம்பதியினர் காவல்நிலையத்தில், மணப்பெண்ணின் தந்தை, இரண்டு மாமாக்கள் மற்றும் மூன்று பேருக்கு எதிராக புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில், குற்றம்சாட்டப்பட்ட மணப்பெண்ணின் வீட்டார்களை போலீசார் விசாரித்தபோது, ‘குடும்பத்தின் பெருமைக்குத் தீங்கு விளைவித்ததால் பழி வாங்கும் நோக்கில் இதை செய்தோம் என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பாளர் விபுல் ஸ்ரீ வஸ்தவா கூறுகையில், ’குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில் இரண்டு பேரை கைது செய்துள்ளோம். மற்ற 4பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.’ என்று கூறினார். 

திருமணமா

கருத்துகள் இல்லை: