புதன், 1 ஆகஸ்ட், 2018

கலைஞர் பற்றி மார்கண்டேய கட்ஜுவின் தரங்கெட்ட பதிவுக்கு திமுக பதிலளித்துள்ளது.

tamil.news18.com : திமுக தலைவர் கலைஞர்  குறித்து மார்கண்டேய கட்ஜுவின்
ட்விட்டர் பதிவுக்கு திமுக-வின் சமூக வலைத்தளப் பிரிவு பதிலளித்துள்ளது.</ இதனைத் தொடர்ந்து, மொத்தம் 7 ட்வீட்களில் மார்கண்டேய கட்ஜுவின் பதிவுக்கு திமுக-வின் சமூக வலைத்தளப் பிரிவு பதிலளித்துள்ளது. அந்த பதிலின் சாரம்சம் பின் வருமாறு:
 Mr.@mkatju You seem to be suffering from a disease of the Sanghis that is lying through nose. Thalaivar #Kalaignar had started Murasoli as a weekly when he was 18.(addition to Murasoli, Kungumam, Muththaram, Vannathirai &Rising Sun in English were founded by MK)

கட்ஜு நீங்கள் சங் பரிவார் ஆட்களை போல் வடிக்கட்டிய பொய் சொல்லும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். கலைஞர் கருணாநிதி 18 வயதானபோது, முரசொலியை வார இதழாக தொடங்கினார். அது மட்டுமில்லாமல் குங்குமம், முத்தாரம், வண்ணத்திரை மற்றும் ரைசிங் சன் (ஆங்கில இதழ்) ஆகியவையும் அவரால் தொடங்கபட்டது.

 #DMK4TN : Mr.@mkatju You seem to be suffering from a disease of the Sanghis that is lying through nose. Thalaivar #Kalaignar had started Murasoli as a weekly when he was 18.(addition to Murasoli, Kungumam, Muththaram, Vannathirai &Rising Sun in English were founded by MK)


அதே 18 வயதில் கருணாநிதி நாடகங்களும் எழுதத் தொடங்கியிருந்தார். திராவிடர் கழகத்தின் கொள்கை விளக்கக் கூட்டங்களிலும் பங்குபெற்று வந்தார். அவர் 1949-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த 2 ஆண்டுகளில் மாடர்ன் தியேட்டர்ஸில் கதாசிரியராக மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் பணியில் இணைந்தார்.
@DMK4TN At by the same year, on Sep17, Thalaivar #Kalaignar was part of the meeting that signalled the inauguration of Dravida Munnetra Kazhagam (#DMK) in Robinson Park,amidst rains!

அதே வருடத்தில் செப்டம்பர் 17-ம் தேதி கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் நடந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் தொடக்க விழாவில் பங்குபெற்றார்.

 @DMK4TN Thalaivar #Kalaignar was involved in attempts to write plays at that age while at the same time started attending propaganda meetings of Dravidar Kazhagam(DK). Just 2yrs after Independence,in 1949, MK joined Modern Theatres as a Writer,for a princely sum of Rs.500/m

உங்களுடைய சினிமா ரசனையை வைத்து பார்க்கும்போது, உங்களுக்கு(கட்ஜு) தமிழ் சினிமாவின் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்ணனைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த காலகட்டத்தில் ‘மணமகள்’ படத்திற்கு திரைக்கதை எழுதியதற்காக என்.எஸ்.கே-வால் கருணாநிதிக்கு 10,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது.

@DMK4TN Mr. @mkatju . Given your tastes, We ain't sure whether you know about the stalwart humourist of Tamil Cinema, Kalaivanar N.S.Krishnan. At that time, Thalaivar #Kalaignar was paid by NSK, a sum of Rs.10,000 for the screenplay of 'Manamagal' in 1951!!! THREAD 4/n

தென் இந்தியாவின் மற்றொரு முதுபெரும் சினிமா தயாரிப்பாளர் எல்.வி.பிரசாத், ‘இருவர் உள்ளம்’ திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியதற்காக 10,000 ரூபாய் கருணாநிதிக்கு சம்பளமாக வழங்கினார். அந்த படம் ஹிட் அடித்ததால் மேலும் ஒரு 10,000 ரூபாயும் கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.

DMK4TN The house that he is living now, was a home that he had bought for Rs.45,000 before Thalaivar #Kalaignar M.K assumed Minister position. A house, that's willed to be a hospital after his demise.

கருணாநிதி தற்போது குடியிருக்கும் வீடு 45,000 ரூபாய்க்கு அவர் அமைச்சர் ஆவதற்கு முன்பே வாங்கப்பட்டது. அது அவருடைய இறப்பிற்குப் பின் மருத்துவமனையாக மாற உள்ளது.
 1 கருணாநிதி முதன்முதலாக 1957-ல் தேர்தலில் நின்றார். ஆனால் அதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பே கோபாலபுரம் இல்லம் வாங்கப்பட்டுவிட்டது. மேலும், அந்த சமயத்திலேயே கருணாநிதியிடம் கார் இருந்தது. அவர் அப்போது சிவாஜி கணேசனை விட இரண்டு மடங்கு சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார்.

DMK4TN · Mr. @mkatju. The first election that Thalaivar #Kalaignar M.K contested was in 1957, while his Gopalapuram home was purchased in 1955. He nor only owned a car then but also was getting twice the amount of salary that #SivajiGanesan was receiving then. #DMK4TN @DMK4TN Mr.@mkatju As your mind seems to be clouded by unrequited love for select few and gross ignorance, We would like to suggest these article to enlighten your mind. h

உங்களுடைய மனம் அறியாமையால் சூழப்பட்டிருப்பதால். உங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள இந்தப் பத்திரிக்கை செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம் என்று கருணாநிதி 2010-ல் வெளியிட்டுள்ள சொத்து விவரங்களையும் அந்த ட்விட்டர் பதிவில் பகிரப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: