நியுஸ் 18 :கோவையில், சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மீது, அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
கோவை சுந்தராபுரம் பெரியார் சிலை பகுதி அருகே, பேருந்துக்காக சாலையோரம் பொதுமக்கள் நின்றிருந்தனர். அப்போது, பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி, அதிவேகமாக வந்த ஆடி சொகுசு கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.
இங்கும் அங்குமாக சீறிப்பாய்ந்த அந்த கார், சாலையோரத்தில் நின்றிருந்த மக்களின் மீது மோதியது. சாலையோர பூக்கடை மற்றும் ஆட்டோவின் மீதும் கார் மோதியதில், மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.
5 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் காவல்துறை துணை ஆணையர் லட்சுமி உடனடியாக விரைந்து, விசாரணை மேற்கொண்டார். அப்போது சொகுசு காரை ஓட்டி வந்த ஜெகதீசனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக