நக்கீரன் :நடிகர் பிரகாஷ்ராஜ் சமீப காலமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்து தனது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதனால், பாஜகவினர் அவரை நடிப்புத்துறையில் இருந்துகொண்டு எதை வேண்டுமானாலும் பேசலாம். அரசியலுக்கு வந்தால்தான் அதன் ஆழமும், நீளமும் புரியும் என பதில் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று பெங்களூருவில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டபோது பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், ‘எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமெல்லாம் இல்லை. ஆனால், என்னிடம் தொடர்ந்து சவால் விட்டுக் கொண்டிருந்தால் நானும் அரசியலுக்கு வரத் தயாராக இருக்கிறேன். எனக்கும் பணம், புகழ், வெற்றி என எல்லாமும் கிடைத்துள்ளது. இருந்தபோதிலும், அமைதியான வாழ்க்கையை விட்டுவிட்டு ஏன் நான் அரசியல் பேச முன்வருகிறேன் என்றால், சமுதாயத்தில் உள்ள மக்கள் அரசியல், சமூக சூழ்நிலைகள் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.
மூத்த பத்திரிகையாளர்கள்தான் எனக்குள் கேள்வி கேட்கும் தைரியத்தை விதைத்தனர். அவர்களின் வழிகாட்டுதலினால்தான் நான் இன்னும் உறுதியாக வளர்கிறேன். சர்வாதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும். அதற்கு எதிரான எனது குரல் இன்னும் சத்தமாக ஒலிக்கும்’ என அவர் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக