வெள்ளி, 5 ஜனவரி, 2018

நீதிபதிகளின் சம்பளம் இரண்டு மூன்று மடங்காக உயர்வு ... .1,00,000-லிருந்து ரூ.2 ,80,000-.. நீதிபதிகள் காட்டில் மழை ! நடுத்தெருவில் மக்கள் !

விகடன் :நீதிபதிகளுக்கான 7 வது சம்பள கமிஷனின் சிபாரிசு இன்னும் அமல்படுத்தப்படவில்லை. 7வது சம்பள கமிஷனை அமல்படுத்தி, நீதிபதிகளுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான மசோதா, மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அடுத்து குடியரசுத் தலைவரின் கையெழுத்தைப் பெற்று சட்டமாகிவிடும். இந்த மசோதாவின்படி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சம்பளம், தற்போதைய ரூ.1,00,000-லிருந்து ரூ.2 ,80,000-மாக உயரும். உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சம்பளம் ரூ.90,000-லிருந்து ரூ.2,50,000-மாக உயருகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ.80,000-லிருந்து ரூ.2.25,000-மாக உயருகிறது.
2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் புதிய சம்பள உயர்வு அமலுக்கு 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு தேவை என மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியதும் குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தில் 31 நீதிபதிகளுக்குப் பதிலாக 25 பேரே பணியில் உள்ளனர். 24 உயர் நீதிமன்றங்களில் 1,095 நீதிபதிகள் தேவை. மாறாக 682 நீதிபதிகள்தான் பணியில் உள்ளனர்

கருத்துகள் இல்லை: