வெள்ளி, 5 ஜனவரி, 2018

Good , bad , ugly ,,, திராவிடத்தால் வாழ்ந்தோமா? வீழ்ந்தோமா? அதுவும் தெரியாதா?

Shalin Maria Lawrence : ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார் !!!
திரு . ரஜினிகாந்த் அவர்கள் முதன் முதலில் எப்போது தேர்தலில் தன் வாக்கை பதிவு செய்தாரோ அன்றே அவர் அரசியலில் குதித்து விட்டார் .
ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு வேட்பாளரை முன்மொழிந்த இயக்கத்தின் அரசியல் சித்தாந்தத்தை ஆதரித்து ஏற்றுக் கொண்டும், ​தேர்தல் அரசியலை ஆதரித்து ஏற்றுக் கொண்டும் அந்த வேட்பாளருக்கு வாக்களித்ததன் மூலம் அரசியலில் பங்கெடுத்துக்​ கொண்டதன் மூலம் என்றைக்கோ அரசியலில் நுழைந்துவிட்டார் 18 வயதை கடந்த வாக்காளர் ரஜினிகாந்த் .
வாக்களித்த ஒவ்வொரு குடிமகனும் அரசியல்வாதி தான். அரசியலில் ஈடுபடும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு .
இதுநாள் வரை passive அரசியல்வாதியாக இருந்த ரஜினிகாந்த் active அரசியல்வாதியாக மாறுவாரா இல்லையா என்பதே நிதர்சனம். அது அவரது தனிப்பட்ட விருப்பமும் கூட .
ஒருவேளை active அரசியல்வாதியாக மாறினால் எந்த அரசியல் சித்தாந்தத்தை முன்மொழிவார் என்று வேண்டுமானால் கேள்வி எழுப்பலாம்
ஒருவேளை பாஜக ஆர்எஸ்எஸ் போல் தீவிர மக்கள் விரோத வலதுசாரி(Right) சித்தாந்தமா.!?
காங்கிரஸ் அதிமுக போல் மையவாத (centrist) சித்தாந்தமா.!?
இந்திய கம்யூனிஸ்ட்கள் திமுக போல் இடதுசாரி மையவாத (left centrist) சித்தாந்தமா.!?
அம்பேத்கர் பெரியார் போல் தீவிர சமூக நீதி பொருளாதார அரசியலை முன்னெடுக்கும் இடதுசாரி (Left) சித்தாந்தமா.!?

இதில் எந்த அரசியல் சித்தாந்தத்தை முன்மொழிவார்.!? என்று கேட்கலாம்
ஆனால் நாமோ, ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் , அரசியலுக்கு வர வேண்டுமா வேண்டாமா என்று தற்குறித்தனமாக விவாதம் செய்து கொண்டிருக்கிறோம் .
இந்த நேரத்தில் நாம் விவாதம் செய்ய
வேண்டியது வாக்காளர்களாகிய நம் அரசியல் அறிவை .
ரஜினியோ இல்லை வேறொரு நபரோ இப்போதைக்கு யார் அரசியலில் வேட்பாளராக நின்றாலும் முழு தெளிவோடு ஓட்டளிக்கும் திறன் நம்மிடம் உள்ளதா ?
Good , bad , ugly என்று ஒரு விஷயம் இருக்கிறது . Good என்கிற விஷயம் இந்தியாவில் தற்போதைக்கு கிடைக்காது . Bad and ugly இந்த இரண்டுக்கும் இடையில் சாமர்த்தியமாக வாழ வேண்டிய கட்டாயத்தில் இந்திய பிரஜைகள் இருக்கிறார்கள் . சற்றே மோசமான ஆட்சியை எதிர்க்கிறேன் பேர்வழி என்று அதை விட படு மோசமான ஒரு ஆட்சியை கொண்டுவருபவர்கள் .
திராவிட அரசியலை பற்றி ஒன்றும் தெரியாமல் திராவிட அரசியலால் கிடைத்த பலன்களை அனுபவித்து கொண்டு 'திராவிடத்தால் வீழ்ந்தோம் ' என்று உளறுபவர்கள் .
ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையினருக்கு என்ன நடந்தால் எனக்கென்ன என்று எண்ணி பாஜகவுக்கு வாக்களித்து இன்று வாழ்வின் அத்தனை நிம்மதியையும் பெரும்பான்மையாக இழந்தவர்கள் .
பெரும் வெள்ளத்திற்கு பின்பு உடனே வந்த தேர்தலில் மொத்தமாக தோற்கடித்திருக்க வேண்டிய ஜெயலலிதாவை மக்கள் நல கூட்டணிக்கு சில்லறையாக கொடுத்து தமிழ்நாட்டை மீண்டும் அதலபாதாளத்தில் தள்ளி இன்றுவரை முதல்வர் யார் என்று தெரியாமல் சித்தம் கலங்கியவர்கள் .
நவீன நாஜியை முற்போக்குவாதி என்று தூக்கிப்பிடிக்கும் உறவுகள் .
ஆக அடிப்படை அரசியல் அறிவு இல்லாமல் , என் ஜாதிக்காரன் , நல்ல பேச்சுக்காரன் , என் உணர்ச்சியை தூண்டுகின்றவன் , சினிமாவில் பஞ்ச் பேசுகிறவன் , குவார்ட்டரும் கோழிபிரியாணியும் வாங்கி தந்தவன் என்கிற அடிப்படையில் நாம் வேட்பாளர்களை வெற்றிபெற வைத்துக்கொண்டிருந்தால் .... 'கண்ணா... தமிழ்நாட்ட அந்த ஆண்டவனாலேயே காப்பாத்த முடியாது !!!
Shalin .

கருத்துகள் இல்லை: