ஞாயிறு, 31 டிசம்பர், 2017

பொங்கல் வெல்லம் கிடையாது ,, அஸ்கா கம்பனிகளிடம் கமிஷன் ... வெல்ல உற்பத்தியாளர வயிற்றில் அடி

சர்க்கரைக்குப் பதில் வெல்லம்!மின்னம்பலம் ::‘கரும்பு விவசாயிகள் வளம்பெறவும், சிறு தொழிலான வெல்ல உற்பத்தி மேம்படவும் தமிழக அரசின் பொங்கல் பரிசில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் வழங்க வேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு அறிவித்துவருகிறது. அதன்படி வரும் பொங்கல் பண்டிகைக்காக ஒரு கோடியே 84 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை இடம்பெற்றுள்ளது. ரேஷன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்படும் இந்தப் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை வரும் ஜனவரி 5ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கரும்பு விவசாயிகள் வாழ்வில் வளம் பெறவும், கிராமங்களில் சிறு தொழிலாக செய்யப்படும் வெல்ல உற்பத்தி மேம்படவும், இந்த வருடம் பொங்கல் பரிசாகத் தமிழக அரசு அறிவித்துள்ள பொருள்களில் சர்க்கரைக்குப் பதில் திமுகழக ஆட்சியில் வழங்கப்பட்டதுபோல் வெல்லம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.

கருத்துகள் இல்லை: