புதன், 2 ஆகஸ்ட், 2017

ஆம்புலன்ஸ் இல்லாமல் வீதியில் குழந்தை பெற்ற தாய் .. குழந்தை மரணம்

MpSamm?hc_: பாஜக ஆளும் மத்திய பிரதேசம் கட்ணி மாவட்டத்தில் ஓர் கிராமத்தில் கர்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்ல ஆம்பிலண்ஸ் வசதி இல்லாத காரணத்தினால் 20கிமீ தூரம் மருத்துவமனைக்கு நடந்தே செல்லும் போது வழியிலியே குழ்ந்தை பிறந்து உரிய பாதுகாப்பு, முதலுதவி போன்ற சிகிச்சைகள் இல்லாத காரணத்தினால் அங்கேயே அந்த குழந்தை இறந்துள்ள சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாமர ஏழைகள் அதிகம் வாழும் நம் தேசத்தின் குடிமக்களுக்கு அடிப்படை தேவையான வீடுகள், கழிப்பறைகள், மருத்துவ சேவைகள் என எதுவும் சரியான முறையில் செய்து கொடுக்க வக்கில்லாத நமது மத்திய பாஜக அரசாங்கம் தான் இது டிஜிட்டல் இந்தியா என விளம்பரப்படுத்தி மக்களை முட்டாளாக்கி தனது கொடுங்கோல் ஆட்சியை நடத்தி மக்களை வாட்டி வதைக்கிறது.
மாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாட்டு மக்களுக்கு கொடுக்க வக்கற்ற பாஜக அரசு நிச்சயமாக இந்திய தேசத்தை ஆள்வதற்கு துளியும் தகுதியற்றது என்பதில் நாட்டின் மீது அக்கறை கொண்டிருக்கும் அனைத்து மக்களின் ஒற்றைக் கருத்தாகும்..!IndiansAgainstBjp Courtesy : vadakarai nabir

கருத்துகள் இல்லை: