புதன், 2 ஆகஸ்ட், 2017

Karthikeyan Fastura: விக்கிபீடியா தமிழ் கட்டுரைகள் ... செய்வீர்களா? செய்வீர்களா?

இந்திய மொழிகளில் இரண்டு மொழிகள் மட்டுமே ஒரு லட்சத்திற்கு அதிகமான கட்டுரைகளை கொண்டு விளங்குகிறது. அதில் இந்திக்கு அடுத்து தமிழ் மொழி தான் அதிக கட்டுரைகளை கொண்டு விளங்குகிறது. தமிழ் மொழிக்கு இன்னும் நிறை கட்டுரையாளர்கள் தேவைப்படுகிறார்கள். விக்கிபீடியாவில் யார் வேண்டுமென்றாலும் கணக்கை தொடங்கி கட்டுரையை பதிப்பிக்கலாம். நிறைய தலைப்புகளில் தமிழில் கட்டுரைகள் எழுதப்படவில்லை. நீங்கள் நினைத்தால் தமிழுக்கு பெருமை சேர்க்க முடியும். வெறும் 2 கோடி பேர்கள் கொண்ட பிலிப்பைன்ஸ் மக்கள் ஆங்கிலத்திற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்கள். தினம் தினம் கட்டுரைகளை எழுதிக் குவித்தவண்ணம் இருக்கிறார்கள். நமது கல்லூரிகளும், பல்கலைகழகங்களும், அரசும் கூட இதில் கொஞ்சம் கவனம் செலுத்துவது தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும். செய்வீர்களா செய்வீர்களா?
மணிவண்ணன் கு மணியன் Boxer rebellion பற்றிய கட்டுரை பதித்து முடித்த 3வது மணி நேரத்தில் என்னால் புரிந்து கொள்ள முடியாத மிகவும் குறுகிய வாக்கியத்தில் காரணம் சொல்லி என்னுடைய அந்த கட்டுரையை அழித்து விட்டனர் தாலிபானிய தமிழ் விக்கிப்பீடிய Moderators.
Immanuvel David விக்கிப்பீடியாவில் மாதத்துக்கு ஒரு அறிவியல் கட்டுரையாவது எழுதுவது தமிழனின் கடமை ...சமுகவலையில்

கருத்துகள் இல்லை: