ஞாயிறு, 30 ஜூலை, 2017

தாமிரபரணி நாயகன் நட்டாத்தி நயினார் குலசேகரன் மரணம்

Muthalankurichi Kamarasu: நட்டாத்தி நயினார் குசேகரன் என்றாலே தாமிரபரணி நதிதான். எப்போதுமே நதி மீது அவருக்கு தீராத காதல், நதியை காப்பாற்ற வேண்டும், நதிபடும் இன்னல்களில் இருந்து நதியை மீட்க வேண்டும் என பல போரட்டம் நடத்தியவர். பல முறை இதற்காக சிறைசென்றவர். சாகும் வரை உண்ணா விரதம் இருப்பேன் என விவசாயிகள் நலனுக்கு பல முறை உண்ணாவிரதம் இருந்தவர். திங்கள் கிழமை என்றாலே மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் மக்கள் பிரதியாக பல குறைகளை பேசி வந்தவர். இன்று(30.072017) இறந்து விட்டார்.
தாமிரபரணி போராளியான இவர் தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவையை நிறுவினர். வருடந்தோறும் கிராம புற பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி, மேல்நிலைப்பள்ளயில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களை கூட்டி, மாவட்ட ஆட்சி தலைவர் மூலமாகவும் மந்திரிகள் மூலமாகவும் அவரை கௌரவித்தவர். இதற்காக கிராம வாழ் மக்கள் நலச்சங்கம் அமைத்தவர்.

இறுதி வரைபோரட்டம் நடத்திய அவர் என்னிடம் பேசும் போதெல்லாம் தாமிரபரணி நதியை பற்றியே பேசுவார். எனது பல நூல் வெளியிட்டு விழாவிற்கு வந்துள்ளார். என்னை வாழ்த்தியுள்ளர். அவரின் பொக்கிஷ நூலான “தாமிரபரணி நதியும் விவசாயிகளின் உரிமையும்” என்ற நூலை எனது பொன்சொர்ணா பதிப்பகம் மூலமாக வெளியிடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
அவர் மறைந்தாலும் அவர் விட்டு சென்ற பணிகள் பல உள்ளன. எனவே அவர் வழியில் தாமிரபரணியை காக்க சூளுரைப்போம்.
அன்னாரின் நல்லடக்கம் இன்று மாலை 5 மணிக்கு நட்டாத்தியில் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை: