டிடிவி தினகரன் தொடர்பானவிமர்சனங்களுக்கு, முதலமைச்சர் பழனிசாமி நரசிம்மராவ் போல் இனியும் மௌனம் காக்க கூடாது, எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறியுள்ளார்.
அதிமுகவில் முதல்வர் எடப்பாடி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மற்றொரு அணியும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. அதேபோல், சசிகலாவுக்கு ஆதரவாக தினகரவு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தனியாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த மூன்று அணிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் முன்னாள் அமைச்சர்கள் தனித்தனியே பல்வேறு விதமான கருத்துக்களை நாள்தோறும் பேசி வருகிறார்கள். சென்னையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் பேசியதாவது:- கட்சி சசிகலாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் மோடி தம்பிதுரை மூலம் சசிகலாவிடம் ஆதரவு கேட்டது உண்மை. நன்றி மறந்துவிட்டு யாரும் பேசக்கூடாது.
கோ.அரி போன்று தவறு செய்பவர்களை கிள்ளி எரிய தெரியும். டிடிவி தினகரன் தொடர்பான விமர்சனங்களுக்கு, முதலமைச்சர் பழனிசாமி இனியும் மௌனம் காக்க கூடாது.
நரசிம்மராவ் போல் மௌனமாக இருக்கக் கூடாது: இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த அரக்கோணம் எம்.பி. அரி. ஒரு நிகழ்ச்சியில் டி.டி.வி. தினகரன் கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்று பேசினார். மேலும், அமைச்சர்கள் முதல் அடிப்படை உறுப்பினர்கள் வரை அனைவருமே தினகரன் கட்சியிலிருந்து விலக வேண்டும் என நினைக்கிறார்கள் என்றார். tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக