சனி, 1 ஜூலை, 2017

ஜி.எஸ்.டி; வரி விபர பட்டியல் ..என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு வரி ?

BBC :ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இன்றுமுதல் (சனிக்கிழமை) நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. சுமார் 1200க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி கவுன்சில் வரி நிர்ணயம் செய்துள்ளது. தனித்தனிப் பிரிவுகளின்கீழ் 5 முதல் 28 சதவிகித வரி வரம்புகளில் பல்வேறு பொருட்களுக்கான வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டியால் விலை உயரும் உயிர்காக்கும் மருந்துகள் - சிறு நகரங்கள், கிராமங்களில் தட்டுப்பாடு அபாயம் “திங்கட்கிழமை முதல் சினிமா காட்சிகள் ரத்து” ஜி.எஸ்.டி வரியால் சிறு தொழில்கள் பாதிப்பு - சங்கபரிவார் அமைப்பு ஆட்சேபம்
பூஜ்ஜியம் வரி (வரி விதிக்கப்படாத பொருட்கள்)
• பால்
• தானியங்கள்
• பழங்கள்
• உப்பு
• அரிசி, அப்பளம், ரொட்டி
• விலங்குகளுக்கான தீவனம்
• காண்டம்கள்
• கருத்தடை மருந்துகள்
• புத்தகங்கள்
• விறகு
• வளையல்கள் (விலைகுறைவானவை)

  • துடைப்பம்
  •  ஐந்து சதவிகித வரி வரம்பிற்குள் வரும் பொருட்கள்
    • தேநீர், காபி
    • சமையல் எண்ணெய்
    • பிராண்டட் தானியங்கள்
    • சோயாபீன்ஸ், சூரியகாந்தி விதைகள்
    • பிராண்டட் பாலாடைக்கட்டி
    • நிலக்கரி (டன் ஒன்றுக்கு ரூ 400 லெவி உடன்)
    • மண்ணெண்ணெய்
    • வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு (எல்.பி.ஜி)
    • உடலுக்கு நீர்ச்சத்து தரும் ஓ.ஆர்.டி
    • வடிவியல் பெட்டி (ஜாமெட்ரி பாக்ஸ்)
    • செயற்கை சிறுநீரகம்
    • கை பம்புகள்
    • இரும்பு, எஃகு, இரும்பு கலந்த உலோகங்கள்
    • தாமிர பாத்திரங்கள்
  • 500ரூபாய் மதிப்புக்குள்ளான ஷுக்கள்
  • 1000ரூபாய் மதிப்புக்குள்ளான ஆடைகள்
  •  12 சதவிகித வரி வரம்புக்குள் வரும் பொருட்கள்
    • உலர் பழங்கள்
    • நெய், வெண்ணெய்
    • தின்பண்டங்கள்
    • மாமிசம் மற்றும் மீன்
    • பாலால் தயாரிக்கப்பட்ட பானங்கள்
    • பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள்
    • பயோ கேஸ்
    • மெழுகுவர்த்தி
    • அனஸ்தீசியா மயக்க மருந்து
    • ஊதுபத்தி
    • பல் துலக்கும் பொடி
    • மூக்கு கண்ணாடி லென்ஸ்
    • குழந்தைகளுக்கான ஓவிய புத்தகங்கள்
    • நாட்காட்டிகள்
    • நட்டு, போல்டு, திருகுகள்
    • டிராக்டர்
    • மிதிவண்டி
    • எல்.பி.ஜி விளக்கு
    • விளையாட்டுப் பொருட்கள்
    • கலைப் பொருட்கள்
  • செல்ஃபோன்

18 சதவிகித வரி வரம்பிற்குள் வரும் பொருட்கள்
• சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை
• பதப்படுத்தப்பட்ட பால்
• உறையவைக்கப்பட்ட காய்கறிகள்
• தலையில் பூசும் எண்ணெய்
• சோப்
• ஹெல்மெட்டுகள்
• நோட்டு புத்தகங்கள்
• ஜாம்கள், ஜெல்லி
• சாஸ், சூப், ஐஸ் கிரீம், உடனடி உணவு கலவைகள்
• பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர்
  • கணினி
  • பிரிண்டர்
  • கழிவறையில் பயன்படுத்தப்படும் காகிதங்கள்

28 சதவிகித வரி வரம்புக்குள் வரும் பொருட்கள்
• கார்
• இருசக்கர வாகனங்கள்
• சாக்லேட், கோகோ வெண்ணெய், கொழுப்புகள், எண்ணெய்கள்
• பான் மசாலா
• குளிர்சாதன பெட்டி
• வாசனை திரவியங்கள், டியோடரண்ட்
• ஒப்பனை பொருட்கள்
• சுவர் பட்டி
• சுவருக்கான பெயிண்ட்
• பற்பசை
• சவர கிரீம்
• சவரம் செய்யும் ரேசர்
• திரவ சோப்
• பிளாஸ்டிக் தயாரிப்புகள்
• ரப்பர் டயர்கள்
• தோல் பைகள்
• மார்பிள், கிரானைட், பிளாஸ்டர், மைக்கா
• தடிமனான கண்ணாடி
• பாத்திரம் கழுவும் இயந்திரம் (டிஷ் வாஷர்)
• பியானோ
• கைத்துப்பாக்கி

கருத்துகள் இல்லை: