லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாடு மக்கள் தொடர்பகம் அமைப்பு இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் ரஜினியை விட ஓபிஉஎஸ்க்கு அதிகம் செல்வாக்கு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் நிலவரம் குறித்து லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாடு மக்கள் தொடர்பகம் அமைப்பு இணைந்து தமிழகம் முழுவதும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. தற்போது இந்த கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டுள்ளனர்.
இதில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராவதற்கு 59% மக்கள் ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இரண்டாவது இடத்தில் ஓபிஎஸ். இவருக்கு 13% மக்கள் அதரவு அளித்துள்ளனர். ரஜினிக்கு மூன்றாவது இடம். இவருக்கு 11% மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
தற்போது தேர்தல் நடந்தால் திமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு 47% உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. மேலும் 2019 ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தலும் வர வாய்ப்புள்ளது என 58.8% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள்
மற்றும் பண்பாடு மக்கள் தொடர்பகம் அமைப்பு இணைந்து நடத்திய கருத்துக்
கணிப்பில் ரஜினியை விட ஓபிஉஎஸ்க்கு அதிகம் செல்வாக்கு உள்ளது என
தெரிவிக்கப்பட்டுள்ளது வெப்துனியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக