வெள்ளி, 30 ஜூன், 2017

Stanley Rajan : கமலஹாசன் இலுமினாட்டி ... இது இலுமினாட்டி அது அலுமினாட்டி.. யோவ் கம்முனாட்டி ..

அவ்வப்போது வரும் புலம்பல்தான், இப்பொழுது விஜய் டிவியில்
கமலஹாசன் ஒற்றைகண் முன்னால் தோன்றுவதில் அது மறுபடியும் ஒப்பாரியாக்கபடுகின்றது,
அதேதான் இது இலுமினாட்டி சதி, விஜய் டிவி இலுமினாட்டி, கமலஹாசன் இலுமினாட்டி என சிலர் தொடங்கிவிட்டார்கள்
இந்த இலுமினாட்டி என்றால் என்ன?
அன்றைய ஐரோப்பா மக்களை சிந்திக்கவோ, யோசிக்கவோ விடவில்லை. பிரபுக்கள் ஒரு பக்கமும், அதற்கு மேல் கிறிஸ்துவ மதவாதமும் மக்களை அடக்கி வைத்தன, அவர்களை சிந்திக்கவே விடவில்லை.
இந்நிலையில்தான் அவர்களுக்கு அறிவு ஒளி கொடுக்க சிலர் ரகசியமாக இயங்கினார்கள், லத்தீன் மொழியில் இலுமினாட்டி (Illuminate) என்றால் ஒளிகொடுத்தல் என்று பொருள், ஆங்கிலத்தில் அது (Enlighten) என வரும்
புரட்சி என்பதே அர்த்தமில்லாமல் கோமாளிகளுக்கு எல்லாம் புரட்சி தலைவன் என பட்டமழிக்கும் தமிழகத்தில் , அறிவு இயக்கம் என சொல்லபடும் இலுமினாட்டி , மிக மர்மமான கும்பலானதில் என்ன ஆச்சரியம்?
உண்மையில் இலுமினாட்டி என்றால் பகுத்தறிவு இயக்கம் என பொருள், அப்படியானால் இன்றைய திமுகதான் உண்மையான இலுமினாட்டி,
இதனை சொன்னால் ஒப்புகொள்வார்களா? மாட்டார்கள், விடுங்கள் போகட்டும். இலுமினாட்டி வரலாறு இப்படி வருகின்றது
அன்றைய ஐரோப்பா இன்றைய அதிமுக போல் திருத்தமுடியாத, அறிவில்லா மக்களால் நிரம்பியிருந்தது, அவர்களுக்கு அறிவு போதித்தவர்கள் அன்றைய இலுமினாட்டிகள்

இவர்கள் பகிரங்கமாக இயங்க முடியாட்து, மிக ரகசியமாக இயங்கினார்கள், இவர்களால் மக்கள் அறிவுபெறுவது கண்டு இந்த இயக்கத்தவர்ர் மொத்தமாக ஒழிக்கபட்டதாக பிரான்ஸ் அறிவித்தது
ஆனால் அதற்கு பின்னால்தான் பிரெஞ்ச் புரட்சி ஏற்பட்டு, மதகுருமார்களும், அரசர்களும் ஒழிக்கபட்டனர். இது கண்டு அண்டை நாடுகள் எல்லாம் இலுமினாட்டிகளை அபாயகரமானவர்கள், ரகசியமானவர்கள் என தேடி பிடித்து அழித்தன‌
பிரென்ஞ் புரட்சியும் நெப்போலியன் கையில் முடியாட்சியாகி இலக்கினை தவற விட்டது, ஆனால் பின்னாளைய ரஷ்ய புரட்சிக்கு அதுதான் முன்னோடி
ரஷ்ய கதை இருக்கட்டும், பிரெஞ்ச் புரட்சிக்கு பின்னர், மக்களுக்கு சிந்திக்க சொல்லும், அரசுக்கு எதிரான கருத்தை சொல்லும் எல்லோரும் இலுமினாட்டிகள் ஆனார்கள்,
ஐரோப்பிய அரசுகளுக்கு எதிரானவர்கள் எல்லாம் இலுமினாட்டிகள், அமெரிக்காவில் மக்களாட்சி மலர்ந்தபின் அது ஐரோப்பிய முடியரசுகளுக்கு ஆபத்தாக அமைந்தது, அதனால் அரசர்களுக்கு எதிராக கருத்துக்களை சொல்லும் எல்லோரும் இலுமினாட்டி என முத்திரை குத்தபட்டார்கள்
இது ஐரோப்பாவில் பேஷன் ஆகிபோனது..
பின் அந்த கதை அப்படியே தொடர்ந்து, மர்ம நடவடிக்கைகள் எல்லாம் இலுமினாட்டி பெயரில் போடபட்டது
பின் யூதர்களை இலுமினாட்டி என்றார்கள் , அதனை தொடங்கி வைத்தது ஜெர்மனியின் நாசிக்கள், ரஷ்ய புரட்சி கூட யூத சதி என சொல்லிகொண்டிருந்த கூட்டம் அது. உண்மையில் யூதர்கள் அன்று அமெரிக்காவினை வளைத்து கொண்டிருந்தார்கள்
ஆனால் ரஷ்ய கம்யூனிஸ்டுகள் யூத உருவாக்கம், அவர்களை அழிக்கவேண்டும் என நாசிக்கள் இல்லாத கட்டு கதை எல்லாம் கட்டி, ரஷ்யா மீது படையெடுத்து அழிந்தும் போனார்கள்
நாசிக்கள் கட்டிவிட்ட கதை இன்னும் ஓயவில்லை..
இன்று உண்மையில் யூத இனம் பொருளாதார பலம் உள்ளது என்றாலும், தன் நாட்டுக்கு எதிரான சக்திகளில்தான் தலையிடும், ஜெருசலேமை காப்பாற்றுதல், இஸ்ரேலை பாதுகாத்தல் என அதன் பயணமே வேறு
இம்மாதிரி உலகம் அறிவு பெற வேண்டும் என்றோ, உலகம் குழம்ப வேண்டும் என்றோ, உலகை ஆள வேண்டும் என்றோ அது நினைக்காது, என் இஸ்ரேல் என் உரிமை என்பது அதன் நிலைப்பாடு, அதில் யாரும் குறுக்கே வந்தால் ஒழிய அதன் கண்கள் சிவக்காது
இன்றைய உலகில் இலுமினாட்டி என்றால் யார்? ஒருவரும் இல்லை, அதிகாரமும் பணமும் மக்களை மயக்கும் வித்தை தெரிந்தவன் எல்லாம் இலுமினாட்டி
உதாரணம் இப்படி சொல்லலாம்
கட்சியின் தீவிர வெறியன் அல்லது தொண்டன், கடும் உழைப்பாளி அல்லது தலைவர் மீது பக்திமான், ஆனால் கையில் ஒரு பைசா இல்லை, கட்சியின் மாவட்ட செயலாளர் பதவிக்கு வரமுடியுமா? ஒரு சக்தி தடுக்குமல்லவா? அதுதான் இலுமினாட்டி.
மணல் கடத்தல், சுரங்க மோசடி, தாதுமணல், குட்கா செய்தி எல்லாம் தமிழகத்தில் என்னாயிற்று? தடுக்கும் சக்தி எது? அதுதான் இனுமினாட்டி.
ஒரு தாழ்த்தபட்ட சாதிக்காரன் திருவிழா கூட நடத்தமுடியாமல் காதலிக்க கூட உரிமையில்லாமல் சாகின்றான் அல்லவா? அந்த சாகடிக்கும் சக்தி எது? அது இலுமினாட்டி.
சர்வ சக்தி படைத்த ஜெயலலிதா யார் கண்ணுக்கும் தெரியாமலே செத்தார் அல்லவா? அவரை ஒரு சக்தி மறைத்தது அல்லவா? அதுதான் இலுமினாட்டி
எவ்வளவோ திறமை இருந்தும், கோடம்பாக்கத்தில் வாய்ப்பு இல்லாமல் சுற்றும் கூட்டம் உண்டு, அவர்களை அப்படி அலையவிட்ட சக்தி எது?
அவ்வளவு ஏன் இத்தனை ஆயிரம் கிரிக்கெட் வீரர்கள் உள்ள இந்தியா, பாகிஸ்தானிடம் பந்துவீச ஒரு பவுலர் இல்லாமல் தடுமாறியது அல்லவா? அந்த சொத்தை அணியினை தேசிய அணியாக அறிவித்த சக்தி இலுமினாட்டி.
கருப்பு பணத்தை மீட்க முடியாமல் மோடியினை தடுக்கும் சக்தி எது? அது இலுமினாட்டி.
சுருக்கமாக சொன்னால் பணமும், அதிகாரமும் கொண்ட கூட்டம் இலுமினாட்டி, இது உள்ளூரில் செய்தால் சமார்த்திய சாலி, தந்திரக்காரன், கெட்டிக்காரன், திறமைசாலி.
கண்ணுக்கு தெரியாதவன் செய்தால் அது இலுமினாட்டி. இதுதான் இலுமினாட்டியின் எளிய தத்துவம்.
இதனை சொன்னால் புரியாது, உனக்கு உலகம் புரியாது என்பார்கள். இருந்துவிட்டு போகட்டும், பெரியார் பாணியில் சொன்னால் இலுமினாட்டி "வெங்காயம்"
ஆனால் ஈழத்தில் தமிழன் நாடு அமைந்தால் அது இஸ்ரேலை அமெரிக்காவினை விட பெரும் வல்லராகிவிடும் என்பதால் அதனை இலுமினாட்டிகள் அழித்தார்கள் என சிலர் சொன்னான் அல்லவா?
அவன் தலைதான் காலி சட்டி. அந்த இலுமினாட்டி கதையினை நம்புவன் மண்டை காலி அலுமினிய சட்டி
உண்மையில் இலுமினாட்டி என ஒன்றுமே இல்லை, எல்லாம் புரிந்தும் புரியாமலும் ஏகாதிபத்திய வியாபாரங்களுக்கு சூட்டபட்ட மர்ம பெயர், அவ்வளவுதான்
மாய்ன்களின் ஒற்றை கண் என்பது வேறு, அது அவர்கள் மத கலாச்சாரம், அமெரிக்க கண்டத்து மத கலாச்சாரம், பின் அமெரிக்கர்கள் கரன்சி அடிக்கும் பொழுது இது இந்த மண்ணின் அடையாளம் என்பது போல செய்துவிட்டார்கள், அவ்வளவுதான்.
மாயன்கள் கலாச்சாரத்தில் அவர்கள் கடவுள் ஒற்றைகண்ணோடு வருவது உண்டு, அது ஒன்றுமல்ல மாயன்கள் இந்துகலாச்சாரத்தோடு தொடர்புடையவர்கள், சிவனுக்கும் நெற்றியில் ஒரு கண் உண்டு
மதுரையில் நக்கீரனின்டம் அதை காட்டித்தான் அவர் மிரட்டினார்
மாயன்களின் ஒற்றை கண் கிட்டதட்ட சிவபெருமானின் நெற்றிகண் சாயல், இலுமினாட்டி என இவர்கள் காட்டும் அந்த கண், சிவனின் நெற்றிகண்ணே என்பதில் சந்தேகமில்லை
மாயன்கள் இந்துக்கள், சிவ அடையாளத்தை பின்பற்றினர், பின் வந்த அமெரிக்க வெள்ளையர்கள் அந்த அடையாளத்தை பிரபலமாக்கினர்
இதற்கும் இவர்கள் அள்ளிவிடும் ஒற்றைகண் இலுமினாட்டிக்கும் ஒரு மண்ணாங்கட்டி தொடர்புமில்லை, எல்லாம் கட்டுக்கதை
ஆக இலுமினாட்டி என்று அஞ்சி குழம்ப‌ ஒன்றுமே இல்லை, இது இலுமினாட்டி அது அலுமினாட்டி என எவனாவது பூச்சாண்டி காட்டுவான் என்றால் "போடா கம்முனாட்டி" என சொல்லிவிட்டு நகர்ந்துவிட வேண்டியதுதான்.
ஒற்றைகண்ணர் எல்லோரும் இலுமினாட்டி ஆக முடியுமா?
கலைஞருக்கும் ஒரு கண் சரியாக தெரியாது, அவரையும் இலுமினாட்டி ஆக்கலாமா?
நிச்சயம் ஆக்கலாம்தான் , அவரை விட பகுத்தறிவு ஓளி பாய்ச்சியது யார்?

கருத்துகள் இல்லை: