திங்கள், 26 ஜூன், 2017

கோடிக்கணக்கில் பேரம் பேசியது உண்மைதான்’ அ.தி.மு.க எம்எல்ஏ மனோகரன் ஒப்புதல்!.. வாசுதேவநல்லூர் ..

Manoharan
இரா. குருபிரசாத் ஆர்.எம்.முத்துராஜ்:

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவிவருகிறது. குறிப்பாக, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், டி.டி.வி என்று மூன்று அணிகளாகத் தற்போது அ.தி.மு.க இயங்கிவருகிறது. இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, கூவத்தூரிலிருந்த அ.தி.மு.க எம்எல்ஏ-க்களுக்கு ஓ.பி.எஸ், சசிகலா அணியினர் கோடிகளில் பேரம் பேசிய வீடியோவை, ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டது. இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதேபோல, ஆளுநரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வாசுதேவநல்லூர் எம்எல்ஏ., மனோகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது மனோகரன் பேசும்போது, “நான் பன்னீர்செல்வம் அணிக்கு வந்ததும், சசிகலா அணியினர் என்னிடம் கோடிக் கணக்கில் பேரம் பேசியது உண்மைதான். சசிகலா அணியில் 30 கோடி ரூபாய் வரை பேரம் பேசினாலும் நாங்கள் போகப்போதில்லை. 122 எம்எல்ஏ-க்களை வைத்து நடத்தும் சசிகலா ஆட்சி, ஒரு பினாமி ஆட்சி. இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும். தேர்தல் நடந்தால், பன்னீர்செல்வம்தான் முதலமைச்சர்.  அம்மா இருக்கும்போது, சசிகலா குடும்பத்தைச் சேந்தவர்களை கட்சியிலிருந்து நீக்கியிருந்தார். ஆனால், அம்மா மறைவுக்குப் பிறகு, சசிகலா கட்சியிலிருந்து நீக்கிய அனைவரையும் மீண்டும் சேர்த்துக்கொண்டார்” என்றார்.
vikatan.com

கருத்துகள் இல்லை: