ஞாயிறு, 25 ஜூன், 2017

அரசியல் சூழ்நிலையால் பாஜகவுக்கு ஆதரவு: திண்டுக்கல் சீனிவாசன்.

அரசியல் சூழ்நிலையால் பாஜகவுக்கு ஆதரவு: திண்டுக்கல் சீனிவாசன்
மின்னம்பலம் :தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் காரணமாகத் தான் பாஜகவுக்கு ஆதரவு அளித்திருப்பதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் 19-ஆம் தேதி பாஜக தனது வேட்பாளரை அறிவித்தது. எனவே, பாஜக வேட்பாளரை ஆதரிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் அடுத்தடுத்து அறிவித்தனர். இதனால், அதிமுக பாஜகவின் பினாமி கட்சி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், பாஜகவுக்கு ஆதரவு அளித்திருப்பது மேலும், விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, வனத்துறை அமைச்சர் சீனிவாசன் திண்டுக்கல்லில் ஜூன் 24-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் தற்போது நிலவுகின்ற அரசியல் சூழ்நிலைகளின் காரணமாகவே பாஜகவோடு அனுசரித்துச் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.   ஊழல் வழக்குகள்  மற்றும் சி பி ஐ ,வருமானவரி துறை ரெயிடு போன்ற அரசியல்  சூழ்நிலை .. தேவை ஏற்பட்டால் மொத்த தமிழகத்தையும் கூட குஜராத்துக்கு விற்க ரெடி ஆகிட்டோம்ல..
பாஜக ஆதரவு தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் உள்ளது. முன்னாள் முதல்வராக ஜெயலலிதா இருந்த போது யாருடனும் கூட்டணி சேரவில்லை. தனித்து நின்றார். 37 நாடாளுமன்ற எம்.பி.க்கள், 13 மாநிலங்களவை எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பி கட்சியை இந்தியாவிலேயே மூன்றாவது இடத்திற்குக் கொண்டு வந்தார்.
ஜெயலலிதா இறந்ததற்குப் பிறகு அந்தத் துணிவு எங்களுக்கு கிடையாது. ஊரோடு ஒத்து போதுவது என்பது போல தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வதற்காக அன்புடன் இணைந்து பாஜகவோடு செயல்படுகிறோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: