ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

உபி தேர்தலில் மின்னணு இயந்திரம் மோசடி ... வலுவான ஆதாரம் கிடைத்துள்ளது?

ம.பி.யில் மின்னணு ஓட்டு எந்திரத்தில் மோசடியா?: தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்கிறது புதுடெல்லி: உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் யாருக்கு ஓட்டு போட்டாலும், அந்த ஓட்டு பா.ஜனதாவுக்கு பதிவாகிற விதத்தில் மின்னணு எந்திரங்களில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி புகார் கூறினார். இதே போன்று பஞ்சாப் சட்டசபை தேர்தலிலும் புகார் எழுந்தது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம், அட்டர் சட்டசபை தொகுதியில் 9-ந் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் ஓட்டு சரியான வேட்பாளருக்கு, உரிய சின்னத்தில் பதிவானதா என்பதை தெரிந்துகொள்வதற்காக, மின்னணு ஓட்டு எந்திரத்துடன் இணைந்த ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக அங்கு பிண்ட் நகரில் நேற்று முன்தினம் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் செய்முறை விளக்கம் அளித்தனர்.
அப்போது மின்னணு ஓட்டு எந்திரத்துடன் இணைந்த ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரத்தில் வந்த எல்லா ஒப்புகை சீட்டிலும் பா.ஜனதாவுக்குரிய தாமரை சின்னம் மட்டுமே வந்திருக்கிறது. இது அங்கு பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பிண்ட் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டுள்ளது. மேலும், தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியை டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேற்று சந்தித்து பேசினார். அப்போது மின்னணு ஓட்டு எந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார் மாலைமலர்

கருத்துகள் இல்லை: