சனி, 8 ஏப்ரல், 2017

கீதா லட்சுமி வீட்டில் 72 மணிநேர சோதனை .. எம்ஜியார் பல்கலை கழக துணைவேந்தர் ..


வருமானவரித்துறை அதிரடியாக தமிழகத்தின் பல இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. அச்சர் விஜய பாஸ்கரின் இடங்களில் மட்டும் 22 மணிநேரம் சோதனை நடத்தியிருக்கிறது. இதையும் விஞ்சும் வகையில் எம்ஜிஆர் பல்கலை கழக துணை சென்னை: எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் கீதா லட்சுமி வீட்டில் தொடர்ந்து 27 மணி நேரம் சோதனை நடத்திய வருமான வரித்துறை. அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வருமான வரித்துறையினர் இரண்டு நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என பல இடங்களில் சோதனை நடத்தினர்
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் மட்டும் 22 மணிநேரம் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் முக்கிய ஆவணங்களும் பல கோடி ரூபாய் பணமும் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இதுமட்டுமில்லாமல், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவர் வீட்டிலும் பணமும் முக்கிய ஆவணங்களும் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசியல்வாதி அல்லாத ஒருவர் வீட்டில் தற்போது சோதனை நடத்தப்பட்டது எனில் அது எம்ஜிஆர் மருத்துவ பல்கலை கழக துணைவேந்தர் கீதா லட்சுமி வீட்டில்தான். அவர் வீட்டில் வருமான வரித்துறையினர் 27 மணிநேரம், தொடர்ந்து சோதனை நடத்தியுள்ளனர்.
கீதாலட்சுமி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பல கோடி மதிப்புள்ள பணமும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகக் கூறுகின்றனர்.
இந்த அதிரடி சோதனையால் சசிகலா அணியினர் கதி கலங்கியுள்ளனர்  tamiloneindia

கருத்துகள் இல்லை: