செவ்வாய், 4 ஏப்ரல், 2017

கேடி ஜக்கி வாசுதேவ் நட்ட மரங்கள் எங்கே? ஆதாரத்துடன் கேள்வி எழுப்பும் பியூஷ் மானுஷ்

112 அடி ஆதியோகி சிலை, காடுகளை அழித்து கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கு, ஈஷாவைச் சுற்றி 10 லட்சம் மரங்கள் நட்டதாக ஜக்கி தெரிவித்தார். அவர் நட்ட 10 லட்சம் மரங்கள் எங்கே என்ற கேள்வியை சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் வீடியோ ஆதாரத்துடன் முன்வைத்துள்ளார். ஜக்கி வாசுதேவ் 112 அடி ஆதியோகி சிலை திறந்ததை அடுத்து அவர் மீது பல குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக எழுந்துள்ளது. காடுகளை அழித்து ஈஷா யோகா மையத்தை விரிவாக்கம் செய்து வருகிறார். ஆதியோகி சிலை கூட காடுகளை அழித்து கட்டப்பட்டதுதான் என பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆதியோகி சர்ச்சையை தொடர்ந்து ஊடகளுக்கு பேட்டி அளித்த ஜக்கி, தான் ஈஷாவைச் சுற்றி 10 லட்சம் மரங்கள் நட்டதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:- எனக்கெதிராக குற்றம் சுமத்துபவர்கள் வாருங்கள். கேமராவைக் கொண்டு வந்து படம் பிடித்து பாருங்கள். இங்கு தவறு ஏதேனும் நடந்திருக்கிறதா என்பதை சொல்லுங்கள்.
ஈஷாவுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டை நிரூபியுங்கள். நான் இந்த இடத்தைவிட்டே போய்விடுகிறேன், என்றார் இந்நிலையில் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் ஈஷாவிற்கு சென்று ஜக்கி வாசுதேவிற்கு எதிராக சில ஆதாரங்களை திரட்டியுள்ளார். அதை கேமிராவில் வீடியோ பதிவு செய்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- ஜக்கி வாசுதேவ் ஈஷாவைச் சுற்றி 10 லட்சம் மரங்கள் நட்டிருப்பதாகச் கூறினார். ஆனால், நிச்சயம் அங்கு அவ்வளவு மரங்கள் இல்லை. வெள்ளிங்கிரி மலையில் 60 லட்சம் மரங்களை நட்டதாகச் சொல்கிறார். வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இவர் எப்படி மரங்கள் நட்டார் என்ற கேள்வி எழுகிறது.

அதே மாதிரி, காப்புக் காட்டின் எல்லையிலிருந்து 50 மீட்டர் தூரத்திற்கு எந்த கட்டுமானமும் இல்லை என ஜக்கி கூறினார். அதற்கான அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் தற்போது முன்வைத்துள்ளோம். அவர் எந்தளவிற்கு காடுகளை அழித்திருக்கிறார் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது, என்றார் வெப்துனியா.com

கருத்துகள் இல்லை: