ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

சசிகலாவுக்கு ஆதரவாக ஜனாதிபதி கவர்னருக்கு போட்ட உத்தரவு! நடராசன் நல்ல வியாபாரி ?


மின்னம்பலம் :அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலா இன்று நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்னும் ஓரிரு நாட்களில் சசிகலா பதவியேற்கக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சசிகலாவுக்கு முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு ஆளுநர் தேவை. ஆனால் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மகனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு 7.3௦ மணிக்கு கோவையிலிருந்து நேராக டெல்லி செல்கிறார். இதனால் பதவியேற்பதில் காலதாமதம் ஆகக்கூடும் என்றும் இந்த காலதாமதத்தினை பாஜகவினர் திட்டமிட்டு ஏற்படுத்துவதாகவும் சசிகலா தரப்பினர் கருதுகின்றனர்.

முன்னதாக தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முக்கியமானவர்களின் ஆலோசனையின் பேரில்தான் சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கு தாமதம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டை சசிகலா கணவர் நடராஜன் ஜனாதிபதி பிராணப் முகர்ஜியிடம் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே ஜெயலலிதா மீது தனி பாசம் கொண்டவர் பிரணாப் முகர்ஜி ஜெயலலிதாவின் மறைவுக்கு டெல்லியிலிருந்து கிளம்பி வந்த பிரணாப் கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லிக்கு மீண்டும் திரும்ப நேரிட்டது. இருந்தாலும் டெல்லி விமான நிலையத்திலேயே காத்திருந்து பனி மூட்டம் விலகிய பிறகு மீண்டும் சென்னைக்கு அவசர அவசரமாக வந்து ஜெயலலிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்படிப்பட்ட பிரணாப் ஜெயலலிதாவின் கட்சியான அதிமுகவிற்கு எந்தவித பிரச்னையும் வரக்கூடாதென்று விரும்புகிறாராம். இதை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையிலிருந்து கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கு எந்தவித காலதாமதமும் ஆகக்கூடாது என்று உத்தரவு வந்திருக்கிறதாம்.

கருத்துகள் இல்லை: