தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் வருமான வரித்துறையினரின் சோதனையை
அடுத்து மேலும் 20 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவத்தினர்
வரவழைக்கப்பட்டுள்ளனர். By: Mayura Akilan
சென்னை:
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தலைமை செயலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனையடுத்து அங்கும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வருமான வரி அலுவலகத்திலும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
ராம மோகன் ராவ் வீடு, அவரது மகனின் வீடு, அலுவலகம் என்று தலைமைச்செயலகம் வரை சோதனை நீண்டது. அவரைத்தொடர்ந்து சேலம் கூட்டுறவு வங்கி, கடலூர் கூட்டுறவு வங்கி என்று சோதனை தொடர்கிறது.
இதனைத்தொடர்ந்து பல அரசியல் பிரமுகர்களின் வீடுகளிலும், அரசு உயர் அதிகாரிகளிடமும் சோதனை நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே தற்போது தமிழகத்திற்கு கூடுதலாக 20 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாதாரணமான முறையில் துணை ராணுவம் வரவழைக்கப்பட்டதா அல்லது தமிழகத்தில் பெரிய அளவில் வருமான வரித்துறை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ராம மோகன் ராவிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள லேப்டாப், டைரியில் இருந்து கிடைத்துள்ள முக்கிய தகவல்கள் மூலம் வருமான வரித்துறையினரின் அடுத்த நகர்வு யாரை நோக்கியதாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருவேளை பெரிய இடத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடைபெறும் பட்சத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்கவே, துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தற்போது தமிழகத்திற்கு கூடுதலாக 20 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக