ஊடகவெளியை
தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு அர்னாப் கோஸ்வாமியை தெரிந்திருக்கும்.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர். அன்றாடம் இரவு 'இந்தியா
அறிய விரும்புகிறது' (India Wants to Know) என முழங்குபவர். தமிழ்நாட்டு
மக்களுக்கு எளிதில் புரியும்வகையில் சொல்லவேண்டும் என்றால், தந்தி
தொலைக்காட்சியின் ரங்கராஜ் பாண்டேவுக்கு 'அண்ணன்' என்று வர்ணிக்கலாம்.
அவ்வளவு தூரம் விவாதங்களில் அவரது 'சுருதி' காதைக் கிழிக்கும்.
கடந்த வாரம், பிரதமர் மோடியை நேர்காணல் செய்தார். ஆட்சியின் இரண்டாம் நிறைவு விழா முடிந்திருக்கும் நேரத்தில் கொடுக்கப்படும் நேர்காணல் என்பதால் பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தன. தலித்துக்களை பேட்டி காணும் போது நாய் மாதிரி எகிறி எகிறி குதிக்கும் இந்த பார்ப்பான்... பாருங்கள் எவ்வளவு மென்மையாக பம்மி பதுங்கி பேசுகிறான்?
இந்த இரண்டு ஆண்டுகளில் நடந்திருக்கும் மிகப்பெரும் சர்ச்சைகள், அரசின் பிழைகள், மதவாதப் பிரச்னைகள் குறித்து தனது கேள்விகளால் மோடியைத் துளைத்து எடுப்பார் என்று ஊடக வெளியிலும், பார்வையாளர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், எந்த 'சத்தமும்' இல்லாமல், ஒரேயொரு பதில் கேள்விகூட இல்லாமல் அர்னாப் கோஸ்வாமியின் நேர்காணல் முடிந்தது. இதையடுத்து, அர்னாப் கோஸ்வாமியின் நேர்காணல் கடும் விமர்சனங்களுக்கும், சர்ச்சைக்கும் உள்ளானது. குறிப்பாக, நேர்காணலுக்கான விடைகளை பிரதமர் அலுவகத்திலிருந்து முன்னரே அனுப்பிவிட்டதாகவும், அந்த விடைகளுக்கு உரிய கேள்விகளை மட்டும் தயாரித்து கேள்விகேட்டதாக சர்ச்சையானது.
பொதுவாக, அர்னாப் கோஸ்வாமிமீதான சர்ச்சைகளுக்கு டைம்ஸ் நவ் குழுமத்திலிருந்து பொதுவான விளக்கங்கள்தான் வரும். ஆனால், இம்முறை அர்னாப் கோஸ்வாமியே நேரடியாக விளக்கம் சொன்னார். தன்னுடைய விளக்கத்தில், தான் வழக்கம்போல் பேசியதாகவும், டெல்லி பத்திரிகையாளர்களின் வழக்கமான பாணியில் இல்லாமல் மிகவும் பத்திரிகைத் தொழிலின் மைய நிலையில் இருந்து கேள்விகேட்டதாகவும் சொன்னார்.
அர்னாப் கோஸ்வாமி மோடியிடம் கூச்சலிடவில்லை என்பதோ, கத்திக்கூப்பாடு போட்டு பேசவில்லை என்பதோ இல்லை நமது கேள்வி. பிரதமரிடம் மரியாதையாகவும், அதே வலிமையாகவும் கேள்வி கேட்டிருக்க முடியும் என்பதுதான் நமது எதிர்பார்ப்பு.
டைம்ஸ் நவ் பத்திரிகை, தனக்கென ஒரு உலகத்தை வைத்திருக்கிறது. அதில், டைம்ஸ் நவ் வெளியிடும் செய்திகள் மட்டும்தான் உண்மையானது, அது மட்டும்தான் எந்தவொரு 'அஜெண்டாவும்' இல்லாமல் வெளியிடப்படுவது, நேர்மையானது என்ற கொள்கையே பிரதானமாக இருக்கிறது. தாங்கள் பேசும் பிரச்னைகள் மட்டும்தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என டைம்ஸ் நவ் தீர்க்கமாக நம்புகிறது.
குறிப்பாக, இந்த நேர்காணல் விவகாரத்தில் ஒரு பத்திரிகை என்பதைத் தாண்டி 'அர்னாப் கோஸ்வாமியின்' பக்தி மடத்தைப்போல செயல்பட்டது. சமூக வலைதளங்களில் அர்னாப்பை காப்பாற்றுவதற்காக டைம்ஸ் நவ் நிருபர்களும், பணியாளர்களும் ஓடி ஓடி பதிவிட்டனர். அர்னாப் என்ற அசைக்கமுடியாத மாபெரும் ஊடக ஜாம்பவானை பிடிக்காதவர்கள், அவரை வேறு எவ்வழியிலும் வீழ்த்த முடியாதவர்கள் இப்படி அவதூறு பரப்புவதாகத் துடித்தார்கள்.
அர்னாப் கோஸ்வாமியிடம் ஒரு குணம் உண்டு. அதீத சுயப்பெருமிதம் கொண்ட ஒரு மனிதர், மிக உயர்ந்த படியேறி வந்தாலும் யாரும் தன்னை எட்டிவிட முடியாது என்ற பெருமிதத்தின் குணம். அவரது குரல், பாவனை எல்லாவற்றிலும் அது இருக்கும். அவரைப் பொறுத்தவரை அவர் உண்மையைப் பேசுகிறார், உண்மையை மட்டுமே பேசுகிறார், நினைக்கிறார், வாழ்கிறார். சொல்லப்போனால் அர்னாப்பை பொறுத்தவரை, அவர் மட்டுமே ஊடகத்தில் இதையெல்லாம் செய்துகொண்டிருப்பவர்.
அவருடைய நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களும், கலந்துகொள்பவர்களும் என்ன நினைக்கிறார்கள் என்று அவருக்குக் கவலையில்லை. எல்லாவற்றுக்கும் அப்பால் நின்று குரல்கொடுக்கும் அந்த தேவகுமாரனின் சொல் தங்களுக்கு உரியதாக, எட்டுவதாக இருக்கவேண்டும் என்பதற்காக மக்கள் அவரிடம் இறைஞ்ச வேண்டியுள்ளது. அவருடைய நேர்காணலில் பங்கேற்கும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எல்லோரும் எப்படி மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று அவருக்குக் கவலையில்லை. காரணம், அவர் உண்மையைப் பேசும் ஊடகத்தின் தெய்வம்!
ஆனால், மோடியுடனான நேர்காணலில் இது எதுவுமே இல்லை. பணிவாக, மிகப்பணிவாக, ஒரு சீடனைப்போல அரசு நிகழ்வுகளை மோடியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
இந்தியாவின் உச்ச அதிகாரத்தை கண்ணுக்கு எதிரே நேரடியாகச் சந்தித்தபோது, எப்போதும் குத்தாட்டம் போடும் சப்தநாடிகளும் மெல்லிசை வாசிக்கத் தொடங்கின.
மோடிக்கு, தன்னை கேள்விகேட்பது பிடிக்காமல் இருக்கலாம். ஏனென்றால், அதிகாரம் ஒருபோதும் கேள்விகளை விரும்புவதில்லை. அதிகாரம் எப்போதும் பணிவதில்லை. அதிகாரம் எப்போதும் தன்னை வணங்குபவர்களை மதிப்பதில்லை. அதிகாரம் எல்லோரும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடும். அது புகழ்மாலையோ, நெருப்புச்சூடோ எல்லாவற்றுக்குமே அப்படித்தான்.
அர்னாப், தான் அளித்த விளக்கத்தில்கூட அந்த நேர்காணல் மிகப்பெரும் பார்வையாளர்களை பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார். அவர் என்ன வேண்டுமானாலும் கேட்பார். ஆனால், அவரை யாரும் எதுவும் கேட்க முடியாது. ஏனென்றால், அவர் உண்மையை பேணிக்காக்கும் ஊடகத்தின் தெய்வம்!
- விவேக் செ minnambala.com
நன்றி: http://scroll.in/article/811395/britains-next-prime-minister-is-going-to-be-a-woman-and-theresa-may-will-prove-tough-to-beat

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக