மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து
நீக்கப்பட்டஸ்மிருதி இரானி, அகந்தை மற்றும் அறியாமையின் ஆபத்தான கலவை
என வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா கருத்து தெரிவித்துள்ளார்.
யேல் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் விரிவுரையாற்றியிருக்கும் ராமச்சந்திர குஹா, ஸ்மிருதி இரானி தன்னுடைய அமைச்சகத்தின் நம்பகத்தன்மையை கணிசமான அளவு சீர்குலைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். என்டிடீவி செய்தி ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.; மூத்த பேராசிரியர்களை ஸ்மிருதி இரானி நடத்திய விதம் குறித்து நினைவுகூர்ந்த குஹா, “கூட்டமொன்றில் ஐஐடி இயக்குனர்கள் ஒருவர், ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு ஸ்மிருதி இரானி என்ன சொன்னார் தெரியுமா? ‘நீங்கள் என்ன டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரா இப்படியெல்லாம் கேட்கிறீர்கள்?’ என்றார்”.
பின்விளைவுகள் குறித்து கவலைப்படாமல் இரானியை விமர்ச்சிக்கக் காரணம் தான் பெங்களூருவில் வசிப்பதும் புத்தகங்கள் எழுதுவதியும் கட்டுரைகள் எழுதியும் வாழ்க்கை நகர்த்துவமே காரணம் என தெரிவிக்கிறார் குஹா.
“இரானியின் இலாகா மாற்றத்தை கல்வித் துறையினர் வரவேற்பார்கள். ஜவடேகர் கண்ணியமானவர். குறைந்தபட்சம் அறிஞர்கள், அறிவியலாளர்களை மதிப்பார். எப்படியிருப்பினும் அவர் ஆர் எஸ் எஸ் தாக்கம் இல்லாம் விலகியிருக்க வேண்டும்” என்கிற குஹா, ஹைதராபாத் மற்றும் ஜேஎன்யூ பல்கலைக் கழக விவகாரங்களை ஸ்மிருதி இரானி கையாண்ட விதத்தை நினைவுகூர்ந்தார்.
“ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலும் ஜேஎன்யூவிலும் முதல் தரமான அறிவியல் ஆசிரியர்கள் இருக்கிறார்கள், ஆனார் இரானி கம்யூனிஸ்டுகளின் வளாகங்களாக உள்ளதாக நினைத்தார்.” என்கிறார் குஹா.
ஸ்மிருதி இரானி தற்போது மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு, ஜவுளித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவியேற்றதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார் இரானி. சென்னை ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்துக்குத் தடை, ஹைதராபாத் பல்கலையில் தலித் ஆய்வாளர் ரோஹித் வெமூலாவின் தற்கொலைக்கு தூண்டுகோளாக செயல்பட்டது, ஜேஎன்யூவில் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் உள்ளிட்ட மாணவர்கள் சிலர் மீது தேசத் துரோக குற்றம்சாட்டி நடத்தப்பட்ட கைது, அதற்குப் பிறகான ஒடுக்குமுறை, ஆர் எஸ் எஸ் கொள்கைகளை கல்வித் துறையில் திணிக்கும் முயற்சி என இரானி இரண்டு ஆண்டுகாலமும் சர்ச்சைகளுடனே கழித்தார். thetimestamil.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக