டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் நடந்து வரும்
சிறுநீரக மோசடி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்களின் வறுமையை
பயன்படுத்தி சில லட்சங்களை விட்டெறிந்து சிறுநீரகங்களை பிடுங்கிக்கொள்ளும்
கொடூரம் தெரியவந்துள்ளது.
இக்குற்றச்சாட்டு தொடர்பாக அப்பல்லோவின் மூத்த சிறுநீரக பிரிவு மருத்துவர் ஒருவரின் உதவியாளர்கள் சைலேஷ் சக்சேனா, ஆதித்யா சிங் ஆகிய இருவர் மற்றும் மருத்துவமனையிலிருந்த மூன்று இடைத்தரகர்களான சிக்தர், மவுலிக், பிரகாஷ் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். சிறுநீரக பிரிவு மூத்த மருத்துவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக பத்திரிகைகள் கூறுகின்றன. இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள டெல்லி அரசு இதை விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. டெல்லியிலுள்ள மேலும் இரண்டு பெரிய தனியார் மருத்துமனைகள் மற்றும் அப்பல்லோவின் சில ஊழியர்களும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்த அநீதியை விளக்கும் வீடியோ செய்தித் தொகுப்பு vinavu.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக