வெள்ளி, 8 ஜூலை, 2016

விஷ்ணுப்பிரியா டி எஸ் பி ..ஒரு நிஜ ஹீரோயின் .. ஆங்கிலத்தில் அசத்தியவர்.. சகல உயிரினங்களிலும் ஆழமான அன்பு கொண்டவர்

திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கை தமிழக போலீஸ் விசாரித்தால், நியாயம் கிடைக்காது என்பதை உணர்ந்த விஷ்ணுப்ரியா குடும்பத்தினர், நீதிமன்றம் படியேறினர். அவரது மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்று தமிழகம் முழுக்க பலத்த குரல் எழுந்தது. இந்த நிலையில், வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதே நேரம், 'போலீஸ் வேலைக்கே விஷ்ணுப்ரியா லாயக்கு இல்லை, கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டார்' என்ற விமர்சனத்தையும் ஒருதரப்பினர் பரப்பினார்கள். வழக்கு விபரங்களையெல்லாம் தாண்டி, விஷ்ணுப்ரியா சக மனுஷியாக எப்படி என்பது குறித்த தகவல்கள் இங்கே... * டி.எஸ்.பி ட்ரைனிங்கில் எல்லோருக்கும் ரன்னிங் காம்படீஷன் நடப்பது வழக்கம். அதில் பெண்கள் பெண்களோடும், ஆண்கள் ஆண்களோடும் சேர்ந்து தனித்தனியாகத்தான் போட்டியில் பங்கேற்பார்கள். ஆனால், விஷ்ணுப்ரியா ஆண்களோடு மோதி வெல்வார்.
ஒருநாள் நடந்த அப்ஸ்ட்ரக்கல்ஸில் 50 மீட்டர் தூரம் செங்குத்தாக ஏற வேண்டியிருந்தது. ஆண்களே பயந்து போனார்கள் ஆனால் விஷ்ணுப்ரியா அசால்ட்டாக அதை ஏறி இறங்கி.... டி.ஐ.ஜியிடம், 'டேய் விஷ்ணுப்ரியா நீ பையனா பிறந்திருக்க வேண்டிய ஆள்டா' என்று பாராட்டு வாங்கியவர்.
 
* காலையில் 3.30 அல்லது 4.00 மணிக்கே எழுந்துவிடுவது விஷ்ணுப்ரியாவின் வழக்கம். ட்ரைனிங் பீரியடில் ப்ராக்ட்டீஸுக்கு 3.30 மணிக்கே ஆஜராகிவிடுவார்.
 
* மனிதாபிமனத்திற்கு விஷ்ணுப்ரியா சிறந்த உதாரணம். எந்த விலங்குகளாவது ரோட்டில் அடிபட்டுக் கிடந்தால், அது எவ்வளவு அழுக்காக இருந்தாலும் அறுவெறுப்பு பார்க்காது தொட்டுத் தூக்கி குளிப்பாட்டி, பிறகு ப்ளூகிராஸில் சேர்த்துவிடுவார். அப்படி கண்டெடுக்கப்பட்ட டாமி என்ற நாய்குட்டியை செல்லமாக வளர்த்து வந்தார். ட்ரைனிங்கில் ஜூ ஜூ என்ற நாய்க்குட்டியை ரொம்ப செல்லமாக வளர்த்தார். விஷ்ணுப்ரியா இல்லாத போது.  அந்த நாய்க்குட்டி மற்ற யார் அறைக்கும் போகாதாம். விஷ்ணுப்ரியா டோர் மேட்டிலேயே படுத்துக்கொள்ளுமாம்.
 
* ட்ரைனிங்கில் யார் சண்டை போட்டுக் கொண்டாலும் விஷ்ணுப்ரியாதான் சமாதானம் செய்து வைப்பார். யாரிடமும் இதுவரை சண்டை போட்டதே கிடையாது. எல்லோரிடமும் அன்பாக இருக்கும் ஆத்மா விஷ்ணுப்ரியா.
 
* விஷ்ணுப்ரியா சென்னையில் இருந்தபோது, நுங்கம்பாக்கம் பாலத்துக்கு கீழ் ஒரு ஆக்ஸிடண்ட் நடந்திருக்கிறது. அந்த வழியாக சென்ற விஷ்ணுப்ரியா அதைப் பார்த்துவிட்டு, உடனடியாக சென்று அந்த பெண்ணை தூக்கி, ரோட்டில் சென்றவர்களையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு, அந்த பெண்ணை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.
மருத்துவமனைக்கு,  தானே பில்லும் செலுத்திவிட்டு, அந்த அடிபட்ட பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தவர் விஷ்ணுப்ரியா.
 
* விஷ்ணுப்ரியா பார்க்க ஒரு சாதாரண பெண்ணாகத்தான் தெரிவார் .ஆனால் அவர் இங்கிலீஷ் அத்தனை அசத்தலாக இருக்கும். அமெரிக்கன் ஸ்கூல் ஆஃப் அகாடமியில் ஸ்காலர்ஷிப் வென்றவர் விஷ்ணுப்ரியா.
 
* அவர் நார்மலான ஆள் கிடையாது. எதையும் எக்ஸ்டார்டினரியா பண்ண வேண்டுமென நினைப்பவர். பர்ஃபெக்ட்டா வேலை பார்ப்பவர். கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட பிறகு, கோகுல்ராஜ் மண்டை ஓடு உடைந்திருக்கிறதா என தன் கையாலேயே தொட்டுப் பார்த்திருக்கிறார். அந்த அளவுக்கு போல்டான ஆள் விஷ்ணுப்ரியா.  vikatan.com

கருத்துகள் இல்லை: