டாக்கா,
ஜாகிர் நாயக் பேச்சுக்களை ஆய்வு செய்யுமாறு இந்தியாவிடம் வங்காளதேசம் கோரிக்கை விடுத்து உள்ளது.
வங்காளதேசத்தின்
தலைநகரான டாக்காவில் வெளிநாட்டினர் வந்து செல்கிற பிரபல ஓட்டலில் 1–ந்
தேதி இரவு பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதிரடிப்படையினர்
வந்து அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.
இந்த தாக்குதலின்போது, பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த 22 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்நிலையில்
22 பேர்களை கொன்ற பயங்கரவாதிகளில் ஒருவனை பிரபல இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர்
நாயக்கின் பேச்சுக்கள் ஊக்குவித்ததாக செய்தி வெளியாகியது. இந்நிலையில்
அவரது பேச்சுக்களை ஆய்வுசெய்யுமாறு இந்தியாவிற்கு வங்காளதேசம் கோரிக்கை
விடுத்து உள்ளது. வங்காளதேச தகவல் தொடர்பு துறை மந்திரி ஹசானுல் ஹக்,
“ஏற்கனவே அவருடைய (ஜாகிர் நாயக்) போதனைகள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்
அடிப்படையில் இல்லை என்று புகார் உள்ளது.
நாயக்கின்
போதனைகள் எந்த அளவிற்கு யங்கரவாதிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது
தொடர்பாக விசாரிக்கப்படும். நாங்கள் முழு விவகாரத்தையும் விசாரணை செய்து
வருகிறோம்,” என்று கூறிஉள்ளார். ஜாகிர் நாயக் பேச்சுக்களை ஆய்வு செய்யுமாறு
இந்திய அரசு மற்றும் தகவல்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு
உள்ளது என்றும் ஹக் கூறிஉள்ளார்.
ஓட்டலில்
தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ரோகன் இம்தியாஸ், ஒரு அரசியல்வாதியின் மகன்
ஆவார். குறிப்பாக, வங்காளதேசத்தை ஆளும் அவாமி லீக் கட்சியின் தலைவர்களில்
ஒருவரான இம்தியாஸ் கான் பாபுல் என்பவரது மகன் என்ற தகவல் வங்காளதேசத்தில்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரோகன் இம்தியாஸ் கடந்த வருடம் இறுதியில்
ஜாகிர் நாயக் குறிப்பை மேற்கொள்காட்டி பேஸ்புக்கில் பிரசாரம் மேற்கொண்டதாக
கூறப்படுகிறது.
நாயக்கின் போதனைகள் சர்வதேச
இஸ்லாமிய சேனல் அமைதி டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது, அதில் அவர்
“அனைத்து இஸ்லாமியர்களும் பயங்கரவாதிகளாக மாறவேண்டும்,” என்று
வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சர்ச்சைக்குரிய
இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பிற மதங்கள் குறித்தான வெறுக்கத்தக்க
பேச்சு காரணமாக அவருடைய இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு இங்கிலாந்து
மற்றும் கனடா தடை விதித்து உள்ளது. மலேசியாவில் தடைசெய்யப்பட்ட 16
இஸ்லாமிக் மதபோதகர்களில் இவரும் ஒருவர். ஆனால் இவர் வங்காளதேசத்தில்
அவருடைய அமைதி டிவியின் மூலம் மிகவும் பிரபலமானவர், அவரது போதனைகள்
எப்போதும் பிறமதங்களை இழிவுபடுத்தும் விதமாகவே இருக்கும், இதில் பிற
இஸ்லாமிய உட்பிரிவுகளும் அடங்கும் என்று தகவல்கள் கூறிஉள்ளன.
இதற்கிடையே
ஓட்டல் தாக்குதலை மூளையாக இருந்து செயல்படுத்தியதாக ஜமாத்துல் முஜாகிதீன்
பங்களாதேஷ் அமைப்பை சேர்ந்த 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். dailythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக