சனி, 9 ஜூலை, 2016

பாரி(விக்)வேந்தர் பச்சைமுத்து வேந்தர் மூவீஸ் மதனை போட்டு தள்ளி விட்டாரா? வியாபம் ஊழல் கொலைகள் போல SRM ஊழல்.....?

நன்கொடை, கட்டணக் கொள்ளை வழியாகக் கிடைத்த கருப்புப் பணத்தைக் கொண்டு வளர்ந்து நிற்கும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்.பாரி வேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி பாரதிய ஜனதாவின் உறுதியான கூட்டாளியாகையால், வியாபம் ஊழல் விவகாரத்தில் சம்பந்தம் உள்ளவர்களுக்கெல்லாம் என்ன நடந்து வருகிறதோ, அதுதான் மதனுக்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது
நன்கொடை, கட்டணக் கொள்ளை வழியாகக் கிடைத்த கருப்புப் பணத்தைக் கொண்டு வளர்ந்து நிற்கும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்.ம் வாரிசுகளை மருத்துவர்களாக்கிப் பார்த்து விடுவதென்கிற லட்சியவெறியோடு வாழ்ந்துவரும் திடீர்ப் பணக்காரர்களும், அரசு உயரதிகாரிகளும் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். எஸ்.ஆர்.எம். முதலாளி ‘பாரிவேந்தர்’ பச்சமுத்து தனக்கும் வேந்தர் மூவீஸ் மதனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்திருப்பதால், அடுத்த ஆண்டு தம் பிள்ளைக்கு மெடிக்கல் சீட் வாங்க யாரிடம் இலட்சங்களைக் கொடுப்பது என்பதே அவர்களுடைய கவலை.
இந்த ஆண்டு மதனிடம் துண்டு சீட்டு வாங்கியவர்களின் கதை கந்தலாகிவிட்டது. 102 பேரிடம் வாங்கிய பணத்தை வேந்தரிடம் ஒப்படைத்து விட்டதாகக் கடிதத்தில் எழுதியிருக்கிறார் மதன். பணம் கொடுத்தவர்கள் பச்சமுத்துவின் வீட்டு வாசலில் நின்று சத்தம் போடவே, அவர்களிடமிருந்து பாரி வேந்தரைக் காப்பாற்ற அவருடைய வீட்டுக்கு மட்டுமின்றி, தெருவுக்கே காவல் நிற்கிறது புரட்சித் தலைவியின் காவல்துறை.

பாவத்தைத் தொலைப்பதற்கு காசிக்கு போவது என்பதற்குப் பதிலாகப் பணத்தைத் தொலைத்தவர்களெல்லாம் மதனைத் தேடி காசிக்குக் கிளம்பி விட்டார்கள்.
< தனக்கும் வேந்தருக்குமிடையிலான கூட்டை விளக்கமாக விவரித்துள்ள மதன், கடந்த 8 ஆண்டுகளாகத் தன்னால்தான் எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் இருக்கைகள் நிரம்பியது என்பதாகவும், அவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவர் பட்டியலை வேந்தருக்கு அனுப்பியிருப்பதாகவும் தனது ‘தலைமறைவு’க் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய ஜனநாயகக் கட்சி பிகாரில் போட்டியிடுவதற்கும், தமிழகத்தில் பா.ஜ.க. மாநாட்டை பாரி வேந்தர் நடத்திக் கொடுத்ததற்கும் எங்கிருந்து பணம் வந்தது என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார். வேந்தரின் பல்வேறு ’தொழில்’களுக்கு வலக்கரமும் இடக்கரமும் மதன் தான் என்பதை அவரது கடிதம் தெளிவாக்குகிறது.
“மதன் தற்போது எழுதியிருக்கும் கடிதத்தை நம்ப வேண்டாம்” என்றும், “வேந்தர் மூவீஸுக்கும் பாரி வேந்தருக்கும் தொடர்பில்லை” என்று சிறிது காலத்துக்கு முன்னர் மதனே வெளியிட்டிருக்கும் அறிக்கையை நம்புமாறும் மக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் பாரி வேந்தர் என்று கூறப்படும் பச்சமுத்து.
பச்சமுத்துவுக்கும் மதனுக்கும் இடையிலான உறவு என்ன என்பது புலனாய்வு செய்து கண்டுபிடிக்கும் அளவுக்குக் கடினமானதல்ல. இந்த தொழிலின் நெளிவு சுளிவுகளை அறிந்தவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரின் தந்தையுமான பா.ம.க. ராமதாஸ், வேந்தரை நோக்கி ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.
“எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 2005-ஆம் ஆண்டு முதல் எந்த அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது? இதற்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகளின் விடைத்தாட்கள், சேர்க்கப்பட்ட மாணவர்கள் 12-ஆம் வகுப்பில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றை வெளியிட பச்சமுத்து தயாரா?”
கல்விக் கொள்ளையன் பச்சமுத்துவின் 'உண்மையை' உடனுக்குடன் தரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி.
கல்விக் கொள்ளையன் பச்சமுத்துவின் ‘உண்மையை’ உடனுக்குடன் தரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி.
இந்த எளிய கேள்விக்கு ஒருக்காலும் பச்சமுத்துவால் பதிலளிக்க முடியாது. கல்வித் தகுதியோ திறமையோ இல்லாத ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பல்வேறு முறைகேடான வழிகளில் சொத்து சேர்த்த திடீர் பணக்காரர்கள் போன்றோரின் குலக்கொழுந்துகளுக்கு எஞ்சினீயர் என்றும் டாக்டர் என்றும் பட்டம் கட்டி சமூகத்தில் இறக்கி விடுவதுதான் பச்சமுத்து போன்றோர் ஆற்றிவரும் சமூகத்தொண்டு. ஆம்னி பேருந்துகளுக்கு டிக்கெட் ஏற்றும் புரோக்கர்களைப் போல, சுயநிதிக் கல்லூரிகளுகளுக்கு மாணவர்களைச் சேர்த்து விடுவதையும் புரோக்கர்கள்தான் செய்கிறார்கள்.
மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வி வழங்கும் தனியார் நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் இவ்வாறான ஏஜெண்டுகள் தாம் முக்கிய பங்காற்றுகின்றனர் என்பது யாரும் அறியாத இரகசியம் அல்ல. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் வடநாட்டில் இருந்து ஆள் பிடிக்கும் ஏஜெண்டுகளிடையே நடந்த மோதல், கொலை வரை சென்ற விவகாரம் ஊடகங்களில் அம்பலமாகியுள்ளது.
தமது பிள்ளைகளுக்கு இடம் பிடிக்க பெற்றோர்கள் மதனைப் போன்ற ஏஜெண்டுகளிடம் இலட்சங்களையும், கோடிகளையும் கொட்டித் துண்டுச் சீட்டு வாங்குவதும், அந்தத் துண்டுச் சீட்டின் அடிப்படையில் கல்லூரியில் இடங்களைப் பிடிப்பதும் எல்லோரும் அறிந்த உண்மைகள் தாம். அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரியல் எஸ்டேட் தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட்டிருந்த மதன், தனது ‘தொழிலின்’ இன்னொரு பகுதியாக கல்லூரிகளுக்கு மாணவர்களைப் பிடித்துக் கொடுக்கும் ஏஜெண்டாக செயல்பட்டு வந்திருக்கிறார். சீட்டுகளை நிரப்பும் கலையில் மதன் கைதேர்ந்தவராக இருந்த காரணத்தினால்தான் பச்சமுத்து தன் இதயத்திலேயே அவருக்கு சீட்டு போட்டுக் கொடுத்திருக்கிறார்.
ஜூன் 2013-இல் மருத்துவ மாணவரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பச்சமுத்துவின் வீடு, மகன்கள், மருமகன்களின் வீடு, கல்லூரிகள், வேந்தர் மூவிஸ், புதிய தலைமுறை தொலைக்காட்சி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. ‘’அது கல்லூரியே அல்ல, மீன் மார்க்கெட். ஒவ்வொரு கோர்ஸையும் கூவிக்கூவி விற்கிறார்கள்” என்று அன்றைய நாளேடுகளில் பெற்றோர்கள் பலர் காறி உமிழ்ந்திருக்கிறார்கள்.
ஆனால் திருவாளர் பச்சமுத்துவோ, “எங்கள் கட்டணங்கள் வங்கி மூலம் மட்டுமே வசூலிக்கப்படுகின்றன. பணமாக எந்தத் தொகையும் வசூலிக்கப்படுவதில்லை. எஸ்.ஆர்.எம். கல்லூரி பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, என்னைப்போல் கையெழுத்திட்டு மதன் மோசடி செய்துள்ளார். இந்த மோசடியில் இருந்து தப்பிக்கவே மதன் தற்போது தற்கொலை நாடகம் ஆடுகிறார்” என்று ஒரு அறிக்கை விட்டு, அதை உலகம் நம்பிவிடும் என்று எதிர்பார்க்கிறார்.
தமிழகத்தின் மூ...த்த பத்திரிகையாளரான மாலன்தான் கருப்புப்பண கிரிமினல் பேர்வழியான பச்சமுத்து நடத்தும் புதிய தலைமுறை வாராந்திர பத்திரிகையின் ஆசிரியர்.
தமிழகத்தின் மூ…த்த பத்திரிகையாளரான மாலன்தான் கருப்புப்பண கிரிமினல் பேர்வழியான பச்சமுத்து நடத்தும் புதிய தலைமுறை வாராந்திர பத்திரிகையின் ஆசிரியர்.
“எங்கள் கல்வி நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்தி, முறைகேடான முறையில் அப்பாவி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களையும் ஏமாற்றி சுமார் பல கோடி ரூபாய் பெற்றுள்ளார். அவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால், கட்சியிலிருந்து கடந்த 25.2.2016 அன்றிலிருந்து விலக்கப்பட்டு விட்டார்” என்கிறார் பச்சமுத்து.
மதனுக்கும், எஸ்.ஆர்.எம். குழுமத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறும் பச்சமுத்து, எஸ்.ஆர்.எம். குழுமத்தின் பணம் ரூ.200 கோடியை மதன் மோசடி செய்துவிட்டதாக புகார் செய்திருக்கிறாரே, அந்த ரூ.200 கோடி பணம் எங்கிருந்து வந்தது? பிப்ரவரி 25-ஆம் தேதிக்குப் பின்னர்தான் அத்தனை பணமும் மதனால் வசூலிக்கப்பட்டதா? இப்படியொரு மோசடியில் ஈடுபட்ட காரணத்துக்காகத்தான் மதன் நீக்கப்பட்டார் என்றால், அதனை அன்றைக்கே பகிரங்கமாக அறிவிக்காதது ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கு பச்சமுத்துவால் ஒருபோதும் பதிலளிக்க முடியாது.
***
மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட 22 கல்வி நிறுவனங்கள் கொண்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காட்டாங்கொளத்தூரில் ஏரிகளையும், புறம்போக்கையும் வளைத்து 250 ஏக்கர் பரப்பளவில் வளைக்கப்பட்டிருக்கும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகம்,  டில்லி, அரியானா, சிக்கிம், இலங்கை என விரிந்திருக்கும் கிளைகள், 500-க்கும் மேற்பட்ட எஸ்.ஆர்.எம். ஆம்னி பேருந்துகள், கருப்புப் பணத்தைப் புரட்டுவதற்குத் தோதாக வேந்தர் மூவீஸ் – என விரிந்துள்ளது பச்சமுத்துவின் சாம்ராச்சியம். பா.ம.க. ராமதாசின் கணக்குப்படி, இந்த சாம்ராச்சியத்தின் மதிப்பு ரூ.20,000 கோடி. இந்த சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி, விரிவுபடுத்திக் கொள்ள இந்திய ஜனநாயகக் கட்சி.
பாரி வேந்தர் என்ற பச்சமுத்துவின் வலது, இடது கரமாக இருந்த மதன்.
பாரி வேந்தர் என்ற பச்சமுத்துவின் வலது, இடது கரமாக இருந்த மதன்.
கடந்த இருபது ஆண்டுகளில் தனியார்மயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கியதற்குப் பின்னால் தங்களது கள்ளப்பணம் அல்லது கருப்புப் பணத்தை முடக்குவதற்கும் பெருக்குவதற்கும், யாரும் நெருங்கி விட முடியாத சில சுவிஸ் வங்கிகளை இந்த திடீர்ப் பண முதலைகள் உள்நாட்டிலேயே உருவாக்கியிருக்கிறார்கள். மடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் ஆகியவைதான் அத்தகைய சுவிஸ் வங்கிகள்.
பிறக்கும்போதே வாயில் சில்வர் ஸ்பூனுடன் பிறந்தவர் வேந்தர். அதாவது, கல்விக் கொள்ளையைத் தொடங்கும்போதே அதனை எதிர்த்து யாரும் குரல் எழுப்பத் தயங்கும் வண்ணம் புதிய தலைமுறை தொலைக்காட்சியையும் களத்தில் இறக்கியவர். மதன் பச்சமுத்துவின் வணிகத்துக்கு அடியாள் என்றால், புதிய தலைமுறை என்பது கருத்துலகின் அடியாள். அந்தத் தொலைக்காட்சி ஊழலில் ஈடுபட்டுக்கொண்டே நல்லொழுக்கம் பேசுவதை, ஒரு நுண்கலையாகவே வளர்த்து, அதற்கு நடுத்தர வர்க்கத்தை ரசிகர்களாகவும் ஆக்கியிருக்கிறது.
மதன் விவகாரம் வெடித்தவுடன், நல்லொழுக்கத்தின் உறைவிடமாக நடுத்தர வர்க்கத்தினரால் நம்பப்படுகின்ற புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முதலாளி பச்சமுத்துவா இப்படி என்று அதிர்ச்சியுற்றவர்கள் எத்தனை பேர்? தரமான கல்வி நிறுவனமாகத் தன்னைக் காட்டிக்கொண்ட எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியிலா 62 இலட்சம் ரூபாய்க்கு மெடிக்கல் சீட் விற்கப்பட்டது என்று கொதித்து எழுந்தவர்கள் எத்தனை பேர்?
2013-இல் பச்சமுத்துவின் வீடு, கல்லூரிகள், வேந்தர் மூவிஸ், புதிய தலைமுறை தொலைக்காட்சி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது. அச்சமயத்தில், ‘’அது கல்லூரியே அல்ல, மீன் மார்க்கெட். ஒவ்வொரு கோர்ஸையும் கூவிக்கூவி விற்கிறார்கள்” என்று அன்றைய நாளேடுகளில் பெற்றோர்கள் பலர் காறி உமிழ்ந்தார்கள்.
2013-இல் பச்சமுத்துவின் வீடு, கல்லூரிகள், வேந்தர் மூவிஸ், புதிய தலைமுறை தொலைக்காட்சி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது. அச்சமயத்தில், ‘’அது கல்லூரியே அல்ல, மீன் மார்க்கெட். ஒவ்வொரு கோர்ஸையும் கூவிக்கூவி விற்கிறார்கள்” என்று அன்றைய நாளேடுகளில் பெற்றோர்கள் பலர் காறி உமிழ்ந்தார்கள்.
மதன் வழியாக வேந்தருக்குப் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள்தான் கொதித்து எழுந்தார்களேயன்றி, மருத்துவக் கல்வியின் தரம் வீழ்ந்துபட்டதே என்று யாரும் கொதித்தெழவில்லை. கோடிக்கணக்கில் கருப்புப் பணத்தை வாங்கிக் கொண்டு டாக்டர் பட்டத்தை விற்பனை செய்த பச்சமுத்துவை எந்தக் கட்சியும் (பா.ம.க. தனது சொந்த நோக்கத்துக்காகக் குற்றம் சாட்டியதைத் தவிர) குற்றம் சாட்டவில்லை. இட ஒதுக்கீட்டினால் மருத்துவக் கல்வியின் தரம் வீழ்ச்சியடைவது குறித்து அங்கலாய்க்கும் அவாள்கள் யாரும் இவாளைப் பற்றி மூச்சு விடவில்லை. ஊடக உலகில் புதிய தலைமுறையின் போட்டி தொலைக்காட்சிகளும் கூட, பச்சமுத்துவைத் தீண்டவில்லை. பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மட்டும்தான் குமுறினர். அவர்கள் யாரும் மதன் வீட்டைத் தேடிப் போகவில்லை, பச்சமுத்து வீட்டு வாசலில்தான் குவிந்தனர்; என்ற போதிலும் பச்சமுத்துவின் மீது போலீசு வழக்கு பதிவு செய்யவில்லை, கைது செய்யவுமில்லை.
இதற்கெல்லாம் என்ன பொருள்? நடுத்தர வர்க்கம் அதிர்ச்சியடையும்படி எதுவும் நடந்துவிடவில்லை என்பதுதான் பொருள். மருத்துவப் படிப்பு விற்கப்படுவது நடுத்தர வர்க்கத்துக்குத் தெரியும். அது அவர்களுக்குப் பிரச்சினையில்லை. கல்வியோ, மருத்துவமோ, குடி தண்ணீரோ காசு கொடுத்து வாங்குவதில் தவறில்லை; ஆனால், அது தரமாக இருக்கவேண்டும், தங்களுக்குக் கட்டுப்படியாகிற விலையில் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கவலை. ஏழைகளுக்கு அது கட்டுப்படியாகாதே என்பது குறித்து அவர்களுக்குக் கவலை இல்லை. உயர்நிலைப் பள்ளி முதல் மெடிக்கல் சீட் வரை இட ஒதுக்கீடு காரணமாகத் தரம் வீழ்ச்சியடைவது மட்டும்தான் பார்ப்பன ‘உயர்’சாதியினரின் கவலையேயன்றி, பணத்தினால் தரம் வீழ்ச்சியடைவது பற்றியோ, அறம் வீழ்ச்சியடைவது பற்றியோ அவர்களுக்குக் கவலை இல்லை.
பாரி வேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி பாரதிய ஜனதாவின் உறுதியான கூட்டாளியாகையால், வியாபம் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கெல்லாம் என்ன நடந்து வருகிறதோ, அதுதான் மதனுக்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது
பாரி வேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி பாரதிய ஜனதாவின் உறுதியான கூட்டாளியாகையால், வியாபம் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கெல்லாம் என்ன நடந்து வருகிறதோ, அதுதான் மதனுக்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது
கட்சிகள் இந்த விவகாரத்தைப் பேசாமலிருக்க காரணம், கல்வி வள்ளல்கள்  எல்லா கட்சிகளிலும் நிறைந்திருக்கிறார்கள் என்பதுதான். வலது, இடது கம்யூனிஸ்டு கட்சிகளைப் போன்றோர், தொலைக்காட்சி ஸ்டுடியோ விளக்கொளியில்தான் உயிர் தரித்திருக்கின்றனர் என்பதால், அவர்கள் பச்சமுத்துவை விமரிசிப்பது என்ற தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதில்லை.
மற்றபடி, அ.தி.மு.க. அரசு பச்சமுத்துவைப் பாதுகாப்பது குறித்து நாம் வியப்படைய ஏதுமில்லை.  அமைச்சர்களும், அல்லக்கை அதிகாரிகளுமே யோசிக்க முடியாத கோணத்திலிருந்தெல்லாம் ஜெயலலிதாவுக்கு முட்டுக் கொடுப்பது, ஜெயலலிதாவுக்கு எதிரான குறிப்பான குற்றச்சாட்டுகள் வரும்போதெல்லாம் அவற்றைப் பொதுவான தத்துவஞான பிரச்சினையாக மாற்றி, நடுநிலையில் நின்று அம்மாவுக்குச் சொம்படிப்பது, தமிழகத்தின் பொதுவெளியில் வெறுத்து ஒதுக்கப்பட்டிருந்த பார்ப்பனிய சிந்தனையையும் நபர்களையும் குளிப்பாட்டி நடுவீட்டில் அமரவைத்து, அவர்களை மதிக்கத்தக்கவர்களாக மாற்றுவது போன்ற நயமான நடவடிக்கைகள் காரணமாகவும், உரியவர்களுக்கு உரிய முறையில் சீட் ஒதுக்கித் தரும் பச்சையான நடவடிக்கைகள் காரணமாகவும் பச்சமுத்து ஜெயா அரசால் பாதுகாக்கப்படுகிறார்.
அச்சு ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளோ இப்படி ஒரு பிரச்சினை நடந்தது போலவே காட்டிக் கொள்ளாமல் தொழில் தருமம் காத்து வருகின்றன. சாதிக்கட்டுப்பாட்டை விட உறுதியான கட்டுப்பாடு இது. போலியான ஆவேசம் காட்டிய ஊடகங்களும், “மதனின் கள்ளக்காதல் தொடர்புகள், நடிகைகளுடனான கிசுகிசுக்கள்” என்று பிரச்சினையைக் கிளுகிளுப்பான திசைக்கு மாற்றிவிட்டன.
மதன் தலைமறைவு என்ற செய்தியே பொய்யானது என்றும், அவர் கொல்லப்பட்டிருக்க கூடும் என்றும் ஒரு செய்தி உலவுகிறது. பாரி வேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, பாரதிய ஜனதாவின் உறுதியான கூட்டாளியாகையால், வியாபம் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கெல்லாம் என்ன நடந்து வருகிறதோ அதுதான் மதனுக்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது.
ரவுடிகள் வள்ளல்கள் ஆவதைப் போல, பச்சமுத்து கருப்புப் பணம் சேர்ந்தவுடன் பாரி வேந்தர் ஆனால்.
ரவுடிகள் வள்ளல்கள் ஆவதைப் போல, பச்சமுத்து கருப்புப் பணம் சேர்ந்தவுடன் பாரி வேந்தர் ஆனால்.
மதன், கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கு பாரி வேந்தருக்குப் பயன்பட்ட ஒரு அடியாள். தொழில் முறையில் பார்த்தால் வேண்டியபடி காரியத்தை முடித்துக் கொடுக்கும் ஒரு தரகன். இதே வேலையைக் கருத்துலகில் செய்வதற்கு, அதாவது ஒழுக்கக்கேட்டை ஒழுக்கமாகச் சித்தரிப்பது, திருட்டைத் திறமையாக காட்டுவது, விவாதத்தில் உள்ள பிரச்சினையின் மையப்பொருளைத் திசை திருப்புவது போன்ற கருப்பை வெள்ளையாகக் காட்டும் வேலைகளைச் செய்வதற்குத்தான் கொழுத்த ஊதியத்தில் அறிவுத்துறை அடியாட்களைத் தமது ஊடகங்களில் நியமித்திருக்கிறார் வேந்தர்.
இந்த ஊடக அடியாட்கள் கழுத்தில் தாம்புக்கயிறு சங்கிலியும் பிரேஸ்லெட்டும் அணிந்து, மதனைப் போல ஆபாசமாகத் தோன்றுவதில்லை. மதனிடம் பணம் கொடுத்து துண்டு சீட்டில் ரசீது வாங்கி வந்த அறவுணர்ச்சிமிக்க, யோக்கிய நடுத்தர வர்க்கத்தினரைப் போலத் தோற்றம் தருகிறார்கள். அந்த வர்க்கத்தின் அசட்டுத்தனமான அறச்சீற்றத்தையும், சாமர்த்தியமான இரட்டை வேடத்தையும் அறிவுபூர்வமான மொழிக்கு மாற்றி விவாதம் நடத்துகிறார்கள்.
இந்த நெறியாளர்கள் தங்களுடைய வாய் சாமர்த்தியத்தின் மூலம் ஜெயலலிதாவின் கண்டெயினரையே மறைக்கும் மாஜிக் நிபுணர்கள். தரகனின் முதல் தகுதியே வாய் சாமர்த்தியம்தானே ! மதனும்கூட சாமர்த்தியசாலிதான். ஆந்திராக்காரனையும், அசாம்காரனையும் ஒரு துண்டு சீட்டை நம்பி 62 இலட்சத்தை கொடுக்க வைத்திருக்கிறாரே! அப்படிப்பார்த்தால் அவரை விடத் திறமைசாலிகள் ஊடக அடியாட்கள்.  62 இலட்சத்துக்கு மெடிக்கல் சீட்டை விற்பனை செய்யும் ஒரு நபரை யோக்கியன் என்றும், அவருக்கு யோக்கியப் பட்டம் கொடுக்கும் தங்களை நடுநிலையாளர்கள் என்றும் மக்களை நம்ப வைத்திருக்கிறார்களே!
***
குறிப்பு:
இக்கட்டுரை அச்சுக்குப் போகும்போது மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, சத்யசாயி மருத்துவக் கல்லூரி போன்ற நிறுவனங்களில் ரெய்டு நடத்திய வருமான வரித்துறையினர், சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் கைப்பற்றியிருப்பதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் “நீட்” தேர்வு உத்தரவு காரணமாக மெடிக்கல் சீட் கிடைக்காத மாணவனின் தந்தை ஒருவர் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு நிர்வாகத்திடம் கேட்டு, பணம் கிடைக்காத காரணத்தினால் புகார் செய்ததைத் தொடர்ந்துதான் இந்த ரெய்டு நடந்திருப்பதாகச் செய்தி கூறுகிறது.
எஸ்.ஆர்.எம். மெடிக்கல் சீட்டுக்குப் பணம் கொடுத்து ஏமாந்ததாக அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதன்படி பச்சமுத்துவின் வீட்டில் தொடங்கி கல்லூரி, தொலைக்காட்சி உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ரெய்டு நடந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதிலிருந்தே தெரியவில்லையா, வேந்தர் ரொம்ம்ம்ப நல்லவர் என்று!
– தமிழரசன்  வினவு.com

கருத்துகள் இல்லை: