வியாழன், 7 ஜூலை, 2016

உடல் உறுப்புகளுக்காகக் கொல்லப்படும் அகதிகள் - முன்னாள் கடத்தல்காரர்


சொந்த நாடுகளை விட்டு வெளியேறும் அகதிகள் உடல் உறுப்புகளாகக் கொல்லப்படும் அவலம் பற்றி முன்னாள் கடத்தல்காரர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். ஆப்பிரிக்காவின் பல நாடுகளில், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறும் மக்கள் வாழ இடம் தேடி நகர்கின்றனர். பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளுக்கே செல்கிறார்கள். அவர்களை அழைத்துச் செல்வதற்கு சட்டவிரோதமான வழிகள்தான் அதிகமாகக் கையாளப்படுகிறது..வ்வாறு சட்டவிரோதமாக அழைத்துச் சென்று பல நாடுகளில் விடுவதற்கு ஏராளமான பணம் செலவாகிறது. அகதிகளாக செல்வதற்குத் தர வேண்டிய பணம் இல்லை என்று கைவிரிப்பவர்களைக் கொன்று அவர்களின் உடல் உறுப்புகளை விற்று விடுவோம் என்று வெகபிரேபி அட்டா என்ற முன்னாள் கடத்தல்காரர் கூறியுள்ளார்.



பல்வேறு நபர்களைக் கடத்திய குற்றத்திற்காக ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை பெற்று தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். குறிப்பாக, எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் தங்கள் நடவடிக்கைகளின்போது பாதிக்கப்பட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்>கடத்தல் தொழிலைக் கைவிட்டு விட்டு சரணடைய தான் தீர்மானித்ததாகக் கூறியுள்ள அவர், மத்திய தரைக்கடலில் பயணம் செய்து கொண்டிருந்த படகு ஒன்று கவிழ்ந்து, 360 பேர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம்தான் தனது மனதை மாற்றிவிட்டது என்று சுட்டிக்காட்டுகிறார்  வெப்துனியா.com

கருத்துகள் இல்லை: