மக்கள்
பலரும் வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழலில் ஆயிரம் கோடியில் தியேட்டர்
வாங்குகிறார்கள் என கார்டனை நோக்கி ஏவுகணை விட்டிருக்கிறார் எதிர்க்கட்சித்
தலைவர் விஜயகாந்த். ஜாஸ் எனப் பெயர் மாற்றப்பட்ட ஹாட் வீல்ஸ் நிறுவனம்
சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள லக்ஸ் தியேட்டரை சொந்தம் கொண்டாடி, அதன்
பெயரில் வங்கிக் கடன் பெற்றிருப்பதை ஏற்கனவே ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தது
நக்கீரன். அதே நிறுவனம், பட்டுக்கோட்டை யில் ஒரு ஏ.சி. திரையரங்கை கடந்த
ஆண்டு பத்திரப் பதிவு செய்திருப்பது இப்போது ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு
வருகிறது.
பட்டுக்கோட்டைப் பகுதியில் தி.மு.க. வில் கொடி கட்டிப் பறந்து பின்னர் ம.தி. மு.க.வுக்கு சென்றவர் எஸ்.வி. என்று அழைக் கப்பட்ட எஸ்.விஸ்வநாதன். பேருந்து நிலை யத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் செல்லும் பிரதான சாலையில் சர்வே எண் 225/5ல் 39 சென்ட் (16989 ச.அ) நிலம் தனது மனைவி ஜெயபாரதி பெயரில் வாங்கி அன்னபூர்ணா என்ற திரையரங்கம் கட்டி 26-05-1990ல் அப்போதைய முதல்வர் கலைஞரை வைத்து திறப்பு விழா நடத்தினார். 8-9-2005ல் அந்த திரையரங் கத்தை திருச்சி மாஜி எம்.பி. அடைக்கலராஜ்க்கு விற்கிறார்.
அடைக்கலராஜின் உயில்படி அவர் இறப்பிற்கு பிறகு அவரது மனைவி ராணி அடைக்கலராஜ், மகன்கள் ஜோசப் லூயிஸ், ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகியோருக்கு சொந்தமானது. இந்த திரையரங்கைத்தான் கார்டன் டீமின் ஹாட் வீல்ஸ் எஞ்சினியரிங் பிரைவேட் லிமிடெட் (தற்போது ஜாஸ்) சார்பில் சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்தி கலிய பெருமாள் மகன் கார்த்திகேயன் (இளவரசியின் மருமகன்) அரசு மதிப்பைவிட குறைவாக வாங்கி இருக்கிறார்.
அரசு வழிகாட்டும் மதிப்பு சதுர அடி ரூ. 3 ஆயிரம். ஆனால் அதற்கு குறைவாக மதிப்பிட்டு, 2 கோடியே 40 லட்சம் என்று பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் பத்திரம் 22-1-2014 ல் பதிவு எழுதிவிட்டு மதிப்பை குறைக்க மதுரையில் உள்ள பதிவுத்துறை மாற்றுப்பணி உதவிச் செயற்பொறியாளர் கந்தவேல் மதிப்பீட்டில் குறைக்கப்பட்டதுடன் தனியார் பொறியாளர் திரையரங்கத் தில் உள்ள தளவாடங்களுக்கு மதிப்பிட்டு துணை ஆட்சியர் மதிப்பை குறைத்து இப்படி பல கட்டத்திலும் குறைத்து 31.10.2014 அன்று 1514/2014 என்ற எண்ணில் பதிவு செய்து பத்திரம் வாங்கப்பட்டு, வழிகாட்டு மதிப்பைவிட குறைவாக பதிவு செய்யப்பட்டிருப்பதால் 6 கோடியே 30 லட்சத்து 6 ஆயிரத்து 166 ரூபாயும் அதற்கான 2% வட்டி யும் கட்டப்படவேண்டிய நிலை அப்போது இருந்ததும் வில்லங்க சான்றிதழ் மூலமாக நிரூபணமாகிறது.
பத்திரத்தில் சசிகலாவின் அக்கா வனிதாமணியின் கணவர் விவேகானந்தன் சாட்சி கையெழுத்திட்டு இருக்கிறார். இந்தத் திரையரங்கம் வாங்க உதவியாக இருந்தது விசுவநாதனின் அண்ணன் சு.பாஸ்கர். இவர் டாக்டர் வெங்கடேசனின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.இது தொடர்பாக விற்ற தரப்பையும், வாங்கிய தரப்பையும் தொடர்புகொள்ள முயன்றபோது, உரிய விளக்கம் கிடைக்க வில்லை. அவர்கள் தரப்பிலிருந்து விளக்கம் வந்தால் வெளியிடத் தயாராக உள்ளோம். தி.மு.க. பிரமுகரான பட்டுக்கோட்டை வீரசேனன் நம்மிடம், ""இது எங்க தலைவர் கலைஞர் திறந்து வச்ச திரையரங்கம். அதற்கானக் கல்வெட்டைக் கூட எடுத்துட் டாங்களாம்'' என்று குமுறலைக் கொட்டி னார். பொதுமக்களின் வேதனைக் குமுறல் களைக்கூட கண்டு கொள்ளாமல் புதிய சொத்துகளில் கவனம் செலுத்துபவர்கள் எதைப் பற்றித்தான் கவலைப்படப் போகி றார்கள்?
-இரா.பகத்சிங் விகடன்,com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக