மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு!
சென்னை மூழ்க என்ன காரணம்?‘சென்னையை மூழ்கடித்தது கொட்டித் தீர்த்த பெருமழை அல்ல... திட்டமிடாமல் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் தண்ணீர் திறந்துவிட்டதுதான் காரணம். ஏரிகளின் நீர்மட்டத்தைக் கையாள்வதில் நிகழ்ந்த குளறுபடிகள் பேரழிவுக்குக் காரணமாகிவிட்டன’ எனப் பரவும் தகவல்கள் அதிர வைத்திருக்கின்றன.
சென்னை குன்றத்தூர் அருகே 6,250 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மக்களின் குடிநீர்த் தேவையையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு பகுதி விவசாயத்துக்கும் பயனளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்தான் சென்னை மக்களின் மீளாத் துயரத்துக்குக் காரணம். செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி. மொத்தமாக 3,645 மில்லியன் கன அடி நீரைத் தேக்கிவைக்கலாம். உபரிநீரை 11 மதகுகள் வழியாக வெளியேற்ற முடியும். இப்படி வெளியேற்றப்படும் நீர் குன்றத்தூர், திருநீர்மலை, அனகாபுத்தூர், மணப்பாக்கம், ராமாபுரம், ஜாஃபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், அடையாறு முகத்துவாரம் வழியாகக் கடலில் கலக்கிறது. இதில் எங்கே தவறு நடந்தது?
சென்னையை
வெள்ளம் சூழ்ந்தது டிசம்பர் 1-ம் தேதி. அதற்கு முந்தைய தினம் நவம்பர்
30-ம் தேதி ஏரியில் 3,126 மில்லியன் கன அடி நீர் இருந்தது.
செம்பரம்பாக்கத்தில் அந்த நாளில் 500 கன அடி நீர் ஏரிக்கு
வந்துகொண்டிருந்தது. வெளியேற்றப்பட்ட நீர் 600 கன அடி நீர். இதுதான் 30-ம்
தேதி நிலவரம். 1-ம் தேதி செவ்வாய்கிழமை பெருமழை பெய்தது. அன்றைய
நிலவரத்தைப் பார்ப்போம். அன்றைய தினம் 3,141 மில்லியன் கன அடி நீர்
இருந்தது. வினாடிக்கு 960 கன அடி தண்ணீர் ஏரிக்கு வந்துகொண்டிருந்தது. இதை
ஏரி தாங்காது என்று சொல்லி 2-ம் தேதியன்று வினாடிக்கு 29 ஆயிரம் கன அடி
வீதம் வெளியேற்றி விட்டார்கள். ஒரே நாளில் இவ்வளவு திறந்தால் என்ன ஆவார்கள்
மக்கள்?
பருவ மழை ஆரம்பித்த நாளில் இருந்து அதிக அளவு நீர் திறந்துவிடப்பட்டது 2-ம் தேதிதான். மறுநாள் 3-ம் தேதி வினாடிக்கு 11 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட்டிருக்கிறார்கள்.
‘டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து கனமழை பெய்யும்’ என நவம்பர் 25-ம் தேதியே அறிவித்துவிட்டது சென்னை வானிலை ஆய்வு மையம். இதுதவிர, பிறநாட்டு வானிலை ஆய்வகங்களும் சென்னையில் அதிக மழை பெய்யும் என எச்சரிக்கை செய்திருந்தன. ஆனால், இதையெல்லாம் அரசு அக்கறையோடு கவனத்தில் கொள்ளவில்லை. நவம்பர் 20-ம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியில் 3,268 மில்லியன் கன அடி நீர் இருந்தது. கிட்டத்தட்ட ஏரி நிரம்பிவிட்டது. அதன்பிறகு 10 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதற்காகத் தினமும் குறைந்தபட்சம் 500 அடியில் இருந்து அதிகபட்சம் 4 ஆயிரம் கன அடி வரையில் தினமும் தண்ணீரைத் திறந்துவிட்டார்கள். ஆனால், 1-ம் தேதி பெருமழை பெய்யும் என முன்கூட்டியே தெரிந்து அதற்கு ஏற்றார்போல தண்ணீரைத் திறந்துவிட்டிருந்தால், ஏரிக்கு வரும் நீர்வரத்தை எதிர்கொண்டிருக்க முடியும். ஏரி நிரம்பியிருந்த நிலையில், நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் ஏரியின் அளவு தாங்க முடியாத அளவுக்கு உயர என்ன செய்வது எனத் தெரியாமல் அதிகபட்சமாக வினாடிக்கு 29 ஆயிரம் கன அடியை முதல் நாளிலும், 11 ஆயிரம் கன அடியை அதற்கு அடுத்த நாளிலும் திறந்துவிட்டு பெரு வெள்ளத்துக்குக் காரணமாகிவிட்டார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. இப்படி திறந்து விடப்பட்ட நீர் அடையாற்றில் பாய்ந்து வந்து சென்னை நகருக்குள் புகுந்து, பல லட்சம் வீடுகளை துவம்சம் செய்தது.
இப்படித்தான் பூண்டி ஏரியின் நிலையும். அதையும் பார்ப்போம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. 2-ம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியைவிட, பூண்டி ஏரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு அதிகம். அதாவது வினாடிக்கு 30,200 கன அடி தண்ணீரை அன்றைய தினம் திறந்துவிட்டிருக்கிறார்கள். சென்னையில் மழை கொட்டியபோது ஆந்திராவில் மழை கொட்டியது. அந்த நீரும் பூண்டிக்கு வந்தது. எனவே, 2-ம் தேதி 30,200 கன அடி திறந்துவிட்டிருக்கிறார்கள். அதற்கு அடுத்த நாள் 3-ம் தேதி பூண்டியில் இருந்து திறந்துவிடப்பட்டது அதைவிட அதிகம் 36,484 கன அடி. செம்பரம்பாக்கமும் பூண்டியும் சேர்த்து டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் திறந்துவிட்ட அதிகாரபூர்வ மொத்த நீரின் அளவு மட்டும் வினாடிக்கு 1 லட்சத்து 6 ஆயிரத்து 684 கன அடி. இந்தத் தண்ணீர்தான் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை மூழ்கடித்தது.
அதிகாரபூர்வமற்ற முறையில் கணக்கிட்டால் இரண்டு நாட்களில் இந்த இரண்டு ஏரிகளில் இருந்து வினாடிக்கு ஒன்றரை லட்சம் கன அடிக்கும் அதிகமாகத் தண்ணீரைத் திறந்துவிட்டிருக்கிறார்கள் என்கிற பகீர் குற்றச்சாட்டை வைக்கின்றன எதிர்க் கட்சிகள். ‘‘செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் தவிர அடையாற்றுடன் இணைக்கப்பட்ட 50 ஏரிகள் நிரம்பியதால், அவற்றிலிருந்து உபரி நீர் பல ஆயிரம் கன அடி வெளியேறியது. இதனால், ஒரே நேரத்தில் 65 ஆயிரம் கன அடி உபரி நீர் அடையாற்றில் கலந்தது. இந்த நீர் அடையாற்றில் கடல்போல பெருக்கெடுத்தது. அது சென்னை நகரையும் நாசம் செய்தது. மொத்தத்தில் சொதப்பியது அரசின் பொதுப்பணித் துறைதான்’’ என்கிறார்கள். இந்தத் துறையின் அமைச்சராக இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். பொதுவாக, மழைக்காலங்களில் ஏரிகள் நிரம்பி வரும்போது கடந்த காலங்களில் துறையின் அமைச்சர் ஏரிகளுக்கு விசிட் அடித்து ஆய்வுசெய்வது வழக்கம். அப்படி மழைக்கு முன்பே பன்னீர்செல்வம் போய் பார்க்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் படிக்கப்படுகிறது.
செம்பரம்பாக்கம்
ஏரிக்கரையில் ‘பசுமை நடை’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நடராஜன்,
‘‘மக்களின் தாகம் தீர்க்க குடிநீரையும், வயிற்றுப் பசிக்கு உணவையும்
கொடுத்து வரும் ‘ஹீரோ’ செம்பரம்பாக்கம் ஏரி. ஆனால், அந்த ஏரிதான் பாதிப்பை
உண்டாக்கி விட்டது என ‘வில்லன்’போல பழி தூற்றுகிறார்கள். நீர்
போக்குவரத்துகளைச் சீர் செய்யாமல் ஆக்கிரமிப்பு செய்துவிட்டு, ஏரியைக்
குறை சொல்வதில் பயனில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல்
இருந்தால் என்ன நடக்கும் என்பதை இயற்கை நமக்குப் பாடம் புகட்டி இருக்கிறது.
மூன்று சுற்று மழை பெய்து, முதல் சுற்றிலேயே செம்பரம்பாக்கம் ஏரி
நிரம்பிவிட்டது. வரலாறு காணாத மழை பெய்யும் என்று வானிலை வல்லுநர்கள்
சொல்லியும் அரசு கவனத்தில் எடுக்காதது ஏன்? முதல் மழைக்கே விவரங்களைக்
கணக்கிட்டு அதற்கு ஏற்றாற்போல முன்கூட்டியே திட்டமிடாமல், கண்மூடிக்
கிடந்ததை என்னவென்று சொல்வது? மனித மெத்தனமே, இந்தப் பேரழிவுக்குக்
காரணம்’’ என்கிறார்.
அலட்சியமும், ஆக்கிரமிப்பும் சென்னையை மூழ்கடித்தது என்பதே உண்மை!
- எஸ்.முத்துகிருஷ்ணன், பா.ஜெயவேல், அ.சையது அபுதாஹிர்
படங்கள்: எம்.உசேன் விகடன்.com
சென்னை மூழ்க என்ன காரணம்?‘சென்னையை மூழ்கடித்தது கொட்டித் தீர்த்த பெருமழை அல்ல... திட்டமிடாமல் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் தண்ணீர் திறந்துவிட்டதுதான் காரணம். ஏரிகளின் நீர்மட்டத்தைக் கையாள்வதில் நிகழ்ந்த குளறுபடிகள் பேரழிவுக்குக் காரணமாகிவிட்டன’ எனப் பரவும் தகவல்கள் அதிர வைத்திருக்கின்றன.
சென்னை குன்றத்தூர் அருகே 6,250 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மக்களின் குடிநீர்த் தேவையையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு பகுதி விவசாயத்துக்கும் பயனளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்தான் சென்னை மக்களின் மீளாத் துயரத்துக்குக் காரணம். செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி. மொத்தமாக 3,645 மில்லியன் கன அடி நீரைத் தேக்கிவைக்கலாம். உபரிநீரை 11 மதகுகள் வழியாக வெளியேற்ற முடியும். இப்படி வெளியேற்றப்படும் நீர் குன்றத்தூர், திருநீர்மலை, அனகாபுத்தூர், மணப்பாக்கம், ராமாபுரம், ஜாஃபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், அடையாறு முகத்துவாரம் வழியாகக் கடலில் கலக்கிறது. இதில் எங்கே தவறு நடந்தது?
பருவ மழை ஆரம்பித்த நாளில் இருந்து அதிக அளவு நீர் திறந்துவிடப்பட்டது 2-ம் தேதிதான். மறுநாள் 3-ம் தேதி வினாடிக்கு 11 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட்டிருக்கிறார்கள்.
‘டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து கனமழை பெய்யும்’ என நவம்பர் 25-ம் தேதியே அறிவித்துவிட்டது சென்னை வானிலை ஆய்வு மையம். இதுதவிர, பிறநாட்டு வானிலை ஆய்வகங்களும் சென்னையில் அதிக மழை பெய்யும் என எச்சரிக்கை செய்திருந்தன. ஆனால், இதையெல்லாம் அரசு அக்கறையோடு கவனத்தில் கொள்ளவில்லை. நவம்பர் 20-ம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியில் 3,268 மில்லியன் கன அடி நீர் இருந்தது. கிட்டத்தட்ட ஏரி நிரம்பிவிட்டது. அதன்பிறகு 10 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதற்காகத் தினமும் குறைந்தபட்சம் 500 அடியில் இருந்து அதிகபட்சம் 4 ஆயிரம் கன அடி வரையில் தினமும் தண்ணீரைத் திறந்துவிட்டார்கள். ஆனால், 1-ம் தேதி பெருமழை பெய்யும் என முன்கூட்டியே தெரிந்து அதற்கு ஏற்றார்போல தண்ணீரைத் திறந்துவிட்டிருந்தால், ஏரிக்கு வரும் நீர்வரத்தை எதிர்கொண்டிருக்க முடியும். ஏரி நிரம்பியிருந்த நிலையில், நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் ஏரியின் அளவு தாங்க முடியாத அளவுக்கு உயர என்ன செய்வது எனத் தெரியாமல் அதிகபட்சமாக வினாடிக்கு 29 ஆயிரம் கன அடியை முதல் நாளிலும், 11 ஆயிரம் கன அடியை அதற்கு அடுத்த நாளிலும் திறந்துவிட்டு பெரு வெள்ளத்துக்குக் காரணமாகிவிட்டார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. இப்படி திறந்து விடப்பட்ட நீர் அடையாற்றில் பாய்ந்து வந்து சென்னை நகருக்குள் புகுந்து, பல லட்சம் வீடுகளை துவம்சம் செய்தது.
தண்ணீர் திறப்பில் அரசு காட்டிய மெத்தனத்துக்கு காரணம் ஒன்று சொல்லப்படுகிறது.
கன
மழையை எதிர்பார்த்து சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி,
‘செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் 5 ஆயிரம் கன அடி
வெளியேற்றப்படுகிறது. ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால்
வெளியேற்றப்படும் அளவு 7,500 கன அடியாக அதிகரிக்கப்படலாம். அடையாறு கரையோர
மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்’ என்பதை டிசம்பர் 1-ம்
தேதியிட்ட தன்னுடைய உத்தரவில் அவசர செய்தியாகக் கொடுத்து இருந்தார்.
சுந்தரவல்லி சொன்னதுபோல 7,500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. 2-ம்
தேதி 29 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்றியிருக்கிறார்கள். இதை சென்னை
குடிநீர் வழங்குதல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் வாரியமே தனது இணைய
தளத்தில் சொல்லியிருக்கிறது. கலெக்டர் சுந்தரவல்லி அறிவிப்பது ஒன்று
என்றால், அரசின் பொதுப்பணித் துறை செய்தது வேறு. இப்படி அரசுத் துறைகளுக்கு
இடையே ஒருங்கிணைப்புக்கூட இல்லாமல், உயிர்களோடும் உடமைகளோடும்
விளையாடியிருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்து நிற்கிறது. இங்கே
சொன்னது எல்லாம் அரசின் கணக்குகளை வைத்து. ஆனால், செம்பரம்பாக்கம்
ஏரியில் இருந்து 29 ஆயிரம் கன அடியைத் தாண்டி அதிகளவில் திறந்துவிட்டதாக
அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.இப்படித்தான் பூண்டி ஏரியின் நிலையும். அதையும் பார்ப்போம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. 2-ம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியைவிட, பூண்டி ஏரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு அதிகம். அதாவது வினாடிக்கு 30,200 கன அடி தண்ணீரை அன்றைய தினம் திறந்துவிட்டிருக்கிறார்கள். சென்னையில் மழை கொட்டியபோது ஆந்திராவில் மழை கொட்டியது. அந்த நீரும் பூண்டிக்கு வந்தது. எனவே, 2-ம் தேதி 30,200 கன அடி திறந்துவிட்டிருக்கிறார்கள். அதற்கு அடுத்த நாள் 3-ம் தேதி பூண்டியில் இருந்து திறந்துவிடப்பட்டது அதைவிட அதிகம் 36,484 கன அடி. செம்பரம்பாக்கமும் பூண்டியும் சேர்த்து டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் திறந்துவிட்ட அதிகாரபூர்வ மொத்த நீரின் அளவு மட்டும் வினாடிக்கு 1 லட்சத்து 6 ஆயிரத்து 684 கன அடி. இந்தத் தண்ணீர்தான் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை மூழ்கடித்தது.
அதிகாரபூர்வமற்ற முறையில் கணக்கிட்டால் இரண்டு நாட்களில் இந்த இரண்டு ஏரிகளில் இருந்து வினாடிக்கு ஒன்றரை லட்சம் கன அடிக்கும் அதிகமாகத் தண்ணீரைத் திறந்துவிட்டிருக்கிறார்கள் என்கிற பகீர் குற்றச்சாட்டை வைக்கின்றன எதிர்க் கட்சிகள். ‘‘செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் தவிர அடையாற்றுடன் இணைக்கப்பட்ட 50 ஏரிகள் நிரம்பியதால், அவற்றிலிருந்து உபரி நீர் பல ஆயிரம் கன அடி வெளியேறியது. இதனால், ஒரே நேரத்தில் 65 ஆயிரம் கன அடி உபரி நீர் அடையாற்றில் கலந்தது. இந்த நீர் அடையாற்றில் கடல்போல பெருக்கெடுத்தது. அது சென்னை நகரையும் நாசம் செய்தது. மொத்தத்தில் சொதப்பியது அரசின் பொதுப்பணித் துறைதான்’’ என்கிறார்கள். இந்தத் துறையின் அமைச்சராக இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். பொதுவாக, மழைக்காலங்களில் ஏரிகள் நிரம்பி வரும்போது கடந்த காலங்களில் துறையின் அமைச்சர் ஏரிகளுக்கு விசிட் அடித்து ஆய்வுசெய்வது வழக்கம். அப்படி மழைக்கு முன்பே பன்னீர்செல்வம் போய் பார்க்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் படிக்கப்படுகிறது.
அலட்சியமும், ஆக்கிரமிப்பும் சென்னையை மூழ்கடித்தது என்பதே உண்மை!
- எஸ்.முத்துகிருஷ்ணன், பா.ஜெயவேல், அ.சையது அபுதாஹிர்
படங்கள்: எம்.உசேன் விகடன்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக