கேள்வி :- “துக்ளக் தர்பார்” என்பதற்கு அண்மைக் கால நடவடிக்கை ஒன்றின்
மூலம் விளக் கம் கூறுங்களேன்!
கலைஞர் :- டி.ஜி.பி. யாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆர். நட்ராஜ். அவர் ஓய்வு பெற்ற பிறகு, அ.தி.மு.க.வில் உறுப்பினராகி, தேர்வாணைக் கழகத்தின் தலைவராகவும் அ.தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்டார். அவர் 13-12-2015 அன்று அ.தி.மு.க.விலிருந்து “டிஸ்மிஸ்” செய்யப்பட்டார். 14-12-2015 அன்று மீண்டும் கட்சியில் அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதற்கான காரணத்தைக் கேட்டால் சிரிப்புதான் வரும். தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், தொலைபேசி வாயிலாக நட்ராஜ் என்ற பத்திரிகையாளரைத் தொடர்பு கொண்டு, அவரிடம் கேள்வி கேட்டு பதிலும் பெற்று வெளியிட்டார்கள். அப்போது பத்திரிகையாளர் நடராஜின் புகைப்படத்தை வெளியிடுவதற்குப் பதிலாக, ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஆர். நடராஜின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்கள். தொலைக்காட்சி நிறுவனம் செய்த தவறு அது. அது உண்மையா இல்லையா?
உண்மையில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி தான் அந்தப் பதிலைச் சொன்னாரா என்பதைக் கூடச் சற்று ஆராய்ந்து தெரிந்து கொள்ளாமல்,
தன்னிச்சையாக அவசர அவசரமாக அவரைக் கட்சியிலிருந்து நீக்கி, அவரை அவமானப்படுத்தும் வகையில் ஜெயலலிதா அறிக்கை கொடுத்தார். உடனே அந்த அதிகாரி, நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், முதலமைச்சர் ஜெயலலிதாதான் அவருக்கு எல்லாமே கொடுத்தார் என்றும், அவர் பொறுப்பிலே இருந்த கால கட்டங்களில், எல்லா விஷயங்களிலும், முதலமைச்சர் மெச்சும்படியாகத் தான் பணியாற்றியுள்ளதாகவும் தெரிவித்த பிறகு, அவர் மீண்டும் கட்சியிலே சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். அ.தி.மு.க.வின் அண்மைக் கால “துக்ளக் தர்பார்” நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் இது!
கேள்வி :- மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் அரசு உதவிகள் வர தாமதப்பட் டாலும், தி.மு.க. போன்ற கட்சிகளும், தன்னார்வ அலுவலர்களும், நிறுவனங்களும் தாங்களாகவே முன் வந்து மனித நேய உணர்வோடு உதவியதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
கலைஞர் :- அப்படிப்பட்டவர்கள் ஆழமான மனிதாபிமான உணர்வின் காரணமாக தாங்களாக முன்வந்து வழங்கிய உதவிகளுக்காக, காலத்தால் செய்த உதவி ஞாலத்தின் மாணப் பெரிது என்பதால், இதயபூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில், வெள்ள நிவாரணப் பணிகளிலே தங்களை ஒப்படைத்துக் கொண்ட மாபெரும் சக்தி, இளைஞர்களின் எழுச்சிதான். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, இளைஞர் சமுதாயம் தாங்களாக முன்வந்து, ஆங்காங்கு வழங்கிய ஒத்துழைப்பு இருக்கிறதே, அதனை அனைவரும் மனமாரப் போற்றிப் பாராட்டிட முன்வர வேண்டும். இளைஞர்கள் தமது உயிரைத் துச்சமென எண்ணித் துணிந்து தண்ணீரிலே இறங்கித் தங்களால் முடிந்த அளவுக்கு பல உயிர்களைக் காப்பாற்றினார்கள். அதைப்போலவே மக்கள் பிரச்சினைகளிலும் இளைஞர்கள் தன்னெழுச்சியோடு முன்வந்து தீர்வு காண முயற்சி செய்திட வேண்டும்.
கேள்வி :- அனைத்துக் கட்சித் தலைவர்களும், பல முறை இதுபோன்ற பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை அழைத்து அரசு விவாதிக்க வேண்டுமென்று கூறியும், அரசு முன்வராததற்கு என்ன காரணம்?>கலைஞர் :- இதே போன்றதொரு கேள்விக்கு, “நக்கீரன்” இதழில், “மாவலி” அளித்த பதில் - “இங்கு எல்லாமும் நான். . . நான் . . . நான் . . . . . என்பதே. நான்கரை ஆண்டு கால ஆட்சியின் ஒரே கொள்கை, இடிப்பாரை இல்லா ஏமரா ராணியின் ஆட்சியில் அனைத்துக் கட்சியாவது கூட்டமாவது?” - இந்தப் பதில்தான் அனைவருக்கும் தெரிந்த பதில். ஜனநாயகப் பண்பு சிறிதேனும் இருந்தால்தானே, பிறர் சொல்வதைச் செவி மடுத்துக் கேட்க முடியும்!">கேள்வி :- வெள்ள நிவாரண உதவித் தொகை வழங்குவோரிடம் தமிழக அரசு வாங்குகின்ற நிதிக்கான காசோலையில் “முதலமைச்சர் நிவாரண நிதி” என்ற தலைப்பில் வாங்குகிறார் களே; அது முறைதானா?
கலைஞர் :- மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவு குறித்து தாமாக முன்வந்து ஒரு வழக்கை விசார ணைக்காக எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கவுல் அவர்கள் தலைமை யிலான அமர்வு, தமிழக மழை வெள்ள நிவாரண விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒருங் கிணைந்து செயல்படவில்லை என்று கூறியதோடு, “முதலமைச்சர் நிவாரண நிதி” என்ற தலைப்பில் நிதி வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு வசூலிக்கப்படாமல் “வெள்ள நிவாரண நிதி” என்று தனியாக வசூலிக் கலாம் என்று கருத்து தெரிவித்தார்கள். ஆனால் தமிழக அரசு அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
கேள்வி :- “டாஸ்மாக்” அமைச்சரின் உதவி யாளர் நீக்கப்பட்டதாக ஒரு செய்தி வந்திருக் கிறதே? கலைஞர் :- ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பார்கள்! செம்பரம்பாக்கம் ஏரித் தண்ணீரை உரிய நேரத்தில் திறக்காதது குறித்து பொதுப்பணித் துறையிலே பணியாற்றும் சில பொறி யாளர்கள் மீது பழி போட்டுத் தப்பிக்க நினைப்பதைப் போல, டாஸ்மாக் ஊழல் பிரச்சினையில் அமைச்சரின் உதவியாளரைப் பலிகடாவாக்க முயற்சிக்கிறார்கள். டாஸ்மாக் அமைச்சர், மின் துறைக்கும் அமைச்சர் என்ற முறையில் அந்த இரண்டு துறைகளிலும் நடைபெறும் ஊழல்கள் பற்றி இதுவரை எத்தனையோ குற்றச்சாட்டுகள் வந்த போதிலும், என்ன காரணத் தாலோ, முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் ஊழல் அளவுக்கு மீறிப்போய், நீதிமன்றம் வரை வழக்கு வந்த நிலையில் பழியை உதவியாளர் மீது போட எண்ணுகிறார்கள் போலும்!
இந்த உதவியாளர், அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி, நடத்தி வந்த ஊழல்கள் குறித்து வார இதழ்களில் தொடர்ந்து பக்கம் பக்கமாக செய்திகள் வந்தபோது, நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ;ஆனால் தற்போது திடீரென நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கூட, “ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி” ஆர். நட்ராஜ் அவர்களை முதல் நாள் டிஸ்மிஸ் செய்து விட்டு, மறுநாள் மீண்டும் சேர்த்துக் கொண்டதைப் போல செய்யப்படலாம். உதவியாளர், அமைச்சரின் ஆணைப்படிதான் தவறாக நடந்து கொண்டாரா என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியும்! நடப்பது பினாமி ஆட்சி; பிறர் மீது பழி போட்டுத் தப்பிக்கும் ஆட்சி; பிறரைப் பலிகடாவாக்கித் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கும் ஆட்சி; வெளியே முகம் காட்டாமல் திரை மறைவில் திசை திருப்பும் சூழ்ச்சிகளைச் செய்யும் ஆட்சி!
கேள்வி :- சென்னை-மதுரவாயல் மேம்பாலச் சாலைத் திட்டத்தை தி.மு. கழக அரசு தொடங்கியது என்பதால், அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கப் பட்டு விட்டது என்ற நிலையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியிருந்தால், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் போக்குவரத்து முற்றிலும் துண்டித்து, சென்னையில் இவ்வளவு பெரிய நாசம் ஏற்பட்டி ருக்காது என்று சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்களே?
கலைஞர் :- சென்னை தொழில் வர்த்தக சபையைச் சேர்ந்த கிருஷ்ணன், “சென்னை - மதுரவாயல் சாலை திட்டத்தைச் செயல்படுத்தியிருந்தால், பெரும் பாதிப்பைத் தவிர்த்திருக்க முடியும்” என்று கூறியிருக்கிறார். மேலும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறும் போது, மேம்பாலச் சாலைத் திட்டத்தில், கூவம் நதியைத் தூர்வாருதல்; கரையைப் பலப்படுத்துதல்; கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் குடி அமர்த்துதல் போன்றவை இடம் பெற்றிருந்தன. திட்டத்தைச் செயல்படுத்தியிருந்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தப் பணிகள் நடந்திருக்கும். கூவம் நதியைத் தூர் வாரி, கரை பலப்படுத்தப்பட்டு இருக்கும் என்பதால், கரை உடைந்து, வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. கூவத்தை ஒட்டி வாழும் 12 ஆயிரம் குடும்பங்களும் வேறு, பாதுகாப்பான இடத்திற்கு சென்றிருப்பர். வெள்ளத்தால், சாலைகளில் போக்கு வரத்து முடங்கி, சென்னை தீவாகும் நிலை வந்தி ருக்காது. சென்னை - மதுரவாயல் சாலை, போக்கு வரத்துக்கும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், வசதியாக இருந்திருக்கும். தமிழக அரசு இந்தத் திட்டத்தின் அவசியத்தை உணர்ந்து, இனியாவது தடைகளை நீக்கிச் செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.
கேள்வி :- “வீதிக்கு வாருங்கள் முதல்வரே” என்ற தலைப்பில் “ஆனந்த விகடன்” இந்த வாரம் எழுதிய தலையங்கத்தைப் படித்தீர்களா?
கலைஞர் :- நான்தான் படித்தேனே; படிக்க வேண்டியவர்கள் அல்லவா படிக்க வேண்டும். படிக் கிறார்களா? படித்து விட்டுப் பம்மாத்து வேலைகளை அல்லவா தொடர்ந்து செய்கிறார்கள்! அந்தத் தலையங்கத்தில், “இலட்சக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். குடிசையில் வசித்தோருக்கு வீடே இல்லை. வீட்டில் வசித்தோருக்கு வீட்டில் எந்தப் பொருளும் இல்லை. முதல் தலைமுறையாக நகரத் துக்கு வந்து, பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து வாழ்வைத் தொடங்கிய பல்லாயிரக்கணக்கானோர் இப்போது வீதிக்கு வந்து விட்டனர். மக்களின் அக வாழ்வும் புற வாழ்வும் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் மக்களுடன் இணைந்து நிற்க வேண்டி யது அரசின் கடமை. ஆனால் நடப்பது என்ன? அடி முதல் நுனி வரை சூறையாடப்பட் டிருக்கும் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கை குறித்து, முதலமைச்சர் ஜெயலலிதா கொஞ்சமும் கவலைப்பட்டவராகவே தெரியவில்லை. பதில் சொல்ல ஓர் அதிகாரி இல்லை; விளக்கம் கூற ஓர் அமைச்சர் இல்லை. ஊடக கேமராக்களைக் கண்டால் எல்லோரும் “அம்மாவின் ஆணைக்கிணங்க” அலறி ஓடுகின்றனர்” என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளது. இதற்கும் ஓர் “அவதூறு வழக்கு” போடப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை!
கேள்வி :- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வின் “வாட்ஸ்-அப்” பேச்சு பற்றி?
கலைஞர் :- சென்னை மாநகரிலும், அதனை யொட்டிய மாவட்டங்களிலும், மேலும் கடலூர், தூத்துக்குடி, நெல்லை போன்ற மாவட்டங்களிலும், காவேரி டெல்டா மாவட்டங்களிலும் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து, சென்னை மாநகரில் அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாகக் கோளாறு காரண மாக வெள்ளமும் ஏற்பட்டு, சுமார் 700 பேர் பலியாகி யிருக்கிறார்கள். இறந்தோரின் எண்ணிக்கையே இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. கோடிக் கணக்கான ரூபாய் அளவுக்கு மக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான மக்கள் வீடிழந்து நிற்கிறார்கள்.
இந்தத் துயரத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும், குறிப்பாக எந்தக் கட்சியிலும் இல்லாத இளைஞர்களும் பங்கேற்று, பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு தங்களால் இயன்ற நிவாரண உதவிகளைச் செய்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, “வாட்ஸ்-அப்” மூலமாக “அசரீரியாகப்” பேசுகிறார். ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதைதான்!
தமிழகத்தின் தலைநகரமே தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த போது, முதல் அமைச்சர் ஜெயலலிதா எத்தனை நாட்கள், எத்தனை மணி நேரம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்? மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த எத்தனை முகாம்களுக்கு நேரில் சென்று நிவாரணப் பொருள்களை வழங்கினார்? எத்தனை மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினார்?
மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளி மாவட்டங்களில் எந்தெந்த ஊர்களுக்குச் சென்று தவித்துக் கொண்டிருந்த மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்? பத்திரிகையாளர் களை எத்தனை முறை சந்தித்து அரசுப் பணிகளைப் பற்றிய விளக்கங்களை அளித்தார்? எத்தனை முறை அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, அமைச் சர்களோடு வெள்ள நிவாரணப் பணிகள் பற்றி கலந்தாலோசனை செய்தார்?
எந்தெந்த எதிர்க் கட்சித் தலைவர்களை, குறைந்தபட்சம் தோழமைக் கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசினார்? எத்தனை முறை டெல்லி சென்று பிரதமரையும், மற்ற அமைச்சர்களையும் சந்தித்து உதவி கோரினார்? எதிர்க்கட்சித் தலைவர்கள் அடுக்கடுக்காக அரசின் மீது சாட்டிய குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் எத்தனை முறை பதில்களை அளித்தார்? எதற்கும் “இல்லை” என்பதுதான் பதில்! இந்த இலட்சணத் தில்தான் பதினைந்து நாட்களுக்குப் பிறகு முதல மைச்சர் ஜெயலலிதா “வாட்ஸ்-அப்” மூலம் உருக்க மாகப் பேசியிருக்கிறாராம். என்ன பேசியிருக்கிறார்?
வெள்ளச் சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரத்தை நினைத்து நினைத்து நான் வருந்து கிறேன்” - சொல்வது யார்? முதலமைச்சர் ஜெயலலிதா! அதுமட்டுமா? “உங்களுக்கு வரும் துன்பங்களை எல்லாம் நானே சுமக்கிறேன். எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது. எனக்கென்று உறவினர் கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள்தான்” என்றெல்லாம் முதலமைச்சர் அந்தப் பேச்சில் சொல்லியிருக்கிறார். மக்களின் துன்பங்களைத் துடைப்பதற்காக, அவர்கள் தங்கியிருந்த முகாம் களிலே சென்று பார்த்தாரா முதலமைச்சர்? அவருக்கு என்று தனி வாழ்க்கை கிடையாதாம்!
“அம்மா என்ற ஒரு சொல்லுக்காகவே என் வாழ்நாட்களை உங்களுக்காக அர்ப்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் ஜெயலலிதா. உண்மைதான்; அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள், அம்மா விதைகள், அம்மா பேபி-கேர் கிட், அம்மா சிமெண்ட், அம்மா முழு உடல் பரிசோதனை, அம்மா மாளிகை, அம்மா இலக்கிய விருது, அம்மா விடுதிகள், அம்மா இன்சூரன்ஸ் திட்டம், அம்மா வேலைவாய்ப்புத் திறன் மற்றும் பயிற்சித் திட்டம், அம்மா திரையரங்குகள், அம்மா சிறுவர் பூங்காக்கள், அம்மா பயிற்சி வகுப்புகள், அம்மா மாணவர் ஊக்குவிப்புத் திட்டம், அம்மா அரசுப் பணித் திட்டம், அம்மா பணி பாராட்டும் திட்டம், அம்மா குடை வழங்கும் திட்டம் - என்று இப்படியெல்லாம் பெயர் வைத்துக் கொள் வதற்காகத்தான் தன்னை அர்ப்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறார்.
எப்படிப்பட்ட உழைப்பு? எத்தனை மணி நேர உழைப்பு? தனக்கென்று சுயநலம் அறவே கிடையாதாம்; தன் பெயராலும், தன் வீட்டிலேயே உடன் வாழ்ந்து வருபவர்கள் பெயராலும், பினாமிகள் பெயராலும் உள்ள போயஸ் தோட்டம், சிறுதாவூர், கொடநாடு, பல கோடி ரூபாயில் பல்வேறு திரையரங்குகள், மிடாஸ் மதுபானத் தொழிற்சாலை போன்றவை எல்லாம் பொது நலத்தின் அடையாளங்களா? எப்படியோ, 15 நாட்களாக வாய் திறக்காத முதல் அமைச்சர், வாட்ஸ்-அப் மூலமாக வாய் திறந்து விட்டார். பாதிக்கப்பட்ட, பரிதாபத்திற்குரிய தமிழ்நாட்டு மக்களே, முதல் அமைச்சர் ஜெயலலிதா “வாட்ஸ் அப்” மூலமாக உருக்கமாகப் பேசி விட்டார்! மழை வெள்ளத் துன்பத்தில் இருந்து மக்களை மீட்பதற்காக உறுதி கூறி விட்டார்! பின்னர் என்ன? கேழ்வரகில் நெய் வடிகிறதாம், கேட்ப வர்களே, நம்புங்கள், நம்ப முயற்சி செய்யுங்கள்!’ nakkheeran,in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக