சிம்பு, அனிருத் இருவர் மீதும் பெண்களை அவமானப்படுத்துதல்,
இழிவுபடுத்துதல் மற்றும் இணையத்தில் ஏற்றுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ்
வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த 3 பிரிவுகளும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள்
கடந்த இரண்டு நாட்களாக வெள்ளத்தின் பாதிப்பு பரபரப்பை விட சிம்பு-அனிருத்
பாடல் குறித்த பரபரப்பு அதிகளவில் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து
கொண்டிருக்கின்றது. அனிருத் இசையில் சிம்பு பாடிய 'பீப் பாடலில் பெண்களை
அவமதிக்கும் வார்த்தைகளும், ஆபாச வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளதாக கடும்
விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.
இந்நிலையில் கோவையை சேர்ந்த பெண்கள் அமைப்பு ஒன்று போலீஸில் புகார் மனு
கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில் பெண் குலத்தையே சிம்புவும் அனிருத்தும் இழிவுபடுத்தியுள்ளதாகவும், தங்கள் மனம் புண்படும்படியான வார்த்தைகளை அந்த பாடலில் பயன்படுத்தியுள்ளதாகவும், இருவருமே தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்< மேலும் அந்த பெண் அமைப்பினர் சிம்பு-அனிருத் புகைப்படங்கள் கிழித்து தங்கள் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் கோவை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக