தம்பி தங்கைகளா இதற்குள் ஒளிஞ்சு கொள்ளுங்க... இனி நிறைய சல்மான்கான்கள் கேட்பார் யாருமில்லாமல் வேண்டுமென்றே நம்மேல வண்டிய ஏற்றுவாங்க.. அப்புறம் எதுக்கு வண்டிக்கு முன்னாடி வந்து படுத்தாய் என நம்ம மேல தான் வழக்குகளை போட்டு உள்ளே தள்ளி வேணுமுன்னா போட்டும் தள்ளுவாங்க...
நமக்கு ஒண்ணுனா நீதித் துறையும் கேட்காது..காவல்துறையும் கேட்காது... அரசும் கூட கேட்காது..
ஆமா நாங்களும் இந்த நாட்டு குடிகள் என நாமே நம்மைப் பத்தி சொல்லிக்க வேண்டியது தான்... நாய்க்கு இருக்கிற மரியாதை கூட நம்மள மாதிரி ஏழைங்களுக்கு இல்லையே!!!!
ஏழைக்கு ஒரு நீதி.. செல்வந்தனுக்கு ஒரு நீதி!!!!
இது தான் நியதி. இது தான் இங்கு எழுதாத சட்டம்!
மொத்ததில இது நீதி செத்த தேசம் தம்பி தங்கைகளா...!!! நாம தான் நாய் நரியிட்ட இருந்து நம்மளை காப்பாத்தி பார்த்து நடக்கணும்டா!"
இப்படிக்கு
இந்தியாவின் தெருவோர குடி மக்கள்!< ஒரு நெட்டீஸன் கருத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக