ஞாயிறு, 13 டிசம்பர், 2015

நீர்வள விபரம் தெரியாத அதிகாரியை செம்பரப்பக்க ஏரிக்கு பொறுப்பாக நியமித்த கொடுமை நிகழ்ந்துள்ளது

நீர்வளத் துறையில் அனுபவம் இல்லாத அதிகாரியை, உயர் பதவியில் பணியாற்ற வைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, பொதுப்பணித் துறை வட்டாரங்கள் கூறியதாவது:பொதுப்பணித் துறையில், நீர்வளப் பிரிவின் முதன்மை தலைமை பொறியாளராக இருந்த ஹேமராஜ், சில மாதங்களுக்கு முன், ஓய்வு பெற்றார். இவர், முக்கிய அமைச்சர் ஒருவரின் உறவினர். பணி ஓய்வு பெற்ற பின், ஹேமராஜ், துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். முதன்மை தலைமை பொறியாளராக, திருமாறன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.பொதுப்பணித் துறையின், கட்டடங்கள் பிரிவில் மட்டுமே, பல பதவிகளில் திருமாறன் பணிபுரிந்துள்ளார். இவர், நீர்வளத் துறையின் முதன்மை தலைமை பொறியாளராக நியமிக்கப்பட்டதில், மேல்மட்டத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. திருமாறன் பதவி ஏற்ற பின், நீர்வளத் துறையின் பல திட்டங்களுக்கு, உலக வங்கி மற்றும் மத்திய அரசு நிதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. நீர்வளத் துறையை நிர்வகிக்க முடியாமல், இவர் திணறினார்.
abu lukmaan - trichy,இந்தியாஅணையின் முழு கொள்ளளவில் 80% தண்ணீர் நிரம்பியதும் தானாக தண்ணீர் வழிந்தொடுமாறு சட்டரை வெட்டி சரி செய்து விட்டால் எந்த பொறியாளரும் தேவை இல்லை .அரசு உத்தரவுக்கும் காத்து இருக்க தேவை இல்லை . மக்களை விழிப்படைய செய்ய ஒரு தானியங்கி siren ,ரேடியோ , ஆகியவற்றை உபயோகித்து கொள்ளலாம் . இப்போது இருக்கும் சென்னைக்கு வழுங்கும் ஏரிகளின் கொள் ளவில் 80% தண்ணீர் ஒரு ஆண்டுக்கு போதுமானது . பத்த வில்லை என்றால் வீராணம் , ஆந்திரா தண்ணீர் உள்ளது அதை வைத்து சரி செய்து கொள்ளலாம் . ஏரிகளையும் இன்னும் 5 அடி தூர் வாரினால் போதும்



இந்நிலையில் தான், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிகப்படியான நீர் திறப்பால், சென்னையில் பெருத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. இவருக்கு கீழ் பணிபுரிந்த சென்னை மண்டல நீர்வளத்துறை அதிகாரிகளும், வெளி மாவட்டங்களில் இருந்து, புதிதாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் மூலம் வந்தவர்கள்.விபரீத நிலைமையை, முன்கூட்டியே இவர்களால் கணிக்க முடியவில்லை.

சென்னையில் அதிகப்படியான மழை பொழிவு தான், வெள்ளச் சேதத்திற்கு காரணம் என, அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், முக்கிய துறையில், அனுபவம் இல்லாத அதிகாரிகளை பணி அமர்த்தியதும், வெள்ளச் சேதத்திற்கு காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.இவ்வாறு பொதுப்பணித் துறை வட்டாரங்கள் கூறின.

-நமது நிருபர்- தினமலர்.com

கருத்துகள் இல்லை: