உச்சநீதி மன்றத்தின் அநீதியான தீர்ப்பை கண்டித்து சென்னை, திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள்.
சென்னையில் பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதனுடன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே உச்சிக் குடுமி நீதிமன்றத்தை கண்டித்தும், பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தும், அதற்கு துணை போகும் பாசிச ஜெயா அரசைக் கண்டித்தும் விண்ணதிர முழக்கங்கள் முழங்கின.
ஆர்ப்பாட்டத்தின் முத்தாய்ப்பாக அர்ச்சக மாணவர் ரங்கநாதன் பெரியார் சாலைக்கு மாலை அணிவித்து பின்னர் தனது உருத்ராட்சக் கொட்டை மாலை, தீட்சை ஆகியவற்றை துறந்து இனி பார்ப்பன ஆதிக்கத்தை முறியடிக்கும் சுயமரியாதை போராட்டங்களில் ஈடுபடுவதாக உரையாற்றினார். அதன் பிறகு தோழர் ராஜூ உச்சநீதிமன்றத்தின் அயோக்கியத் தீர்ப்பை விளக்கி உரையாற்றினார். அனவரையும் கைது செய்து கொண்டு சென்ற போலீசு மாலையில் விடுவித்தது. நீதித்துறை ஆண்டாண்டு காலமாக பார்ப்பனீயத்துக்கு பாத சேவை செய்வதைதான் நாடு பார்க்கிறதே?
இது தொடர்பான வீடியோவை வெகு விரைவில் வெளியிடுகிறோம்.
உச்சநீதி மன்ற தீர்ப்பை கண்டித்து சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
சென்னை
அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாத மாணவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்வது, அரசியல் சட்டத்தின் பிரிவு 25, 26 க்கு விரோதமானது என்றும், இந்து மத நம்பிக்கைக்கும், மரபுகளுக்கும் எதிரானது என்றும் கூறி மேற்படி மாணவர்களின் நியமனத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றார்கள் மதுரை அர்ச்சகர்கள்.
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் சார்பில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும், மக்கள் கலை இலக்கியக் கழகமும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் தலையிட்டு நடத்தினர். அந்த வழக்கு இத்தனை ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு இப்போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருகிறது.
இந்த அநீதியான தீர்ப்பை கண்டித்து 17-12-2015 திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலர் தோழர் ஜீவா தலைமையில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்திய தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
சென்னையில் பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதனுடன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே உச்சிக் குடுமி நீதிமன்றத்தை கண்டித்தும், பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தும், அதற்கு துணை போகும் பாசிச ஜெயா அரசைக் கண்டித்தும் விண்ணதிர முழக்கங்கள் முழங்கின.
ஆர்ப்பாட்டத்தின் முத்தாய்ப்பாக அர்ச்சக மாணவர் ரங்கநாதன் பெரியார் சாலைக்கு மாலை அணிவித்து பின்னர் தனது உருத்ராட்சக் கொட்டை மாலை, தீட்சை ஆகியவற்றை துறந்து இனி பார்ப்பன ஆதிக்கத்தை முறியடிக்கும் சுயமரியாதை போராட்டங்களில் ஈடுபடுவதாக உரையாற்றினார். அதன் பிறகு தோழர் ராஜூ உச்சநீதிமன்றத்தின் அயோக்கியத் தீர்ப்பை விளக்கி உரையாற்றினார். அனவரையும் கைது செய்து கொண்டு சென்ற போலீசு மாலையில் விடுவித்தது. நீதித்துறை ஆண்டாண்டு காலமாக பார்ப்பனீயத்துக்கு பாத சேவை செய்வதைதான் நாடு பார்க்கிறதே?
இது தொடர்பான வீடியோவை வெகு விரைவில் வெளியிடுகிறோம்.
உச்சநீதி மன்ற தீர்ப்பை கண்டித்து சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்!
தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
சென்னை
திருச்சி
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2006-ல் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக மதுரை மீனாட்சி கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கில், பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் பாதுகாக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாத மாணவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்வது, அரசியல் சட்டத்தின் பிரிவு 25, 26 க்கு விரோதமானது என்றும், இந்து மத நம்பிக்கைக்கும், மரபுகளுக்கும் எதிரானது என்றும் கூறி மேற்படி மாணவர்களின் நியமனத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றார்கள் மதுரை அர்ச்சகர்கள்.
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் சார்பில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும், மக்கள் கலை இலக்கியக் கழகமும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் தலையிட்டு நடத்தினர். அந்த வழக்கு இத்தனை ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு இப்போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருகிறது.
இந்த அநீதியான தீர்ப்பை கண்டித்து 17-12-2015 திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலர் தோழர் ஜீவா தலைமையில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்திய தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி. வினவு.com
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி. வினவு.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக