சென்னை: அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான "நமது எம்.ஜி.ஆர்."
இணைய பக்கத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 2016-ல் தி.மு.க. கூட்டணி
வெற்றி பெறும் என 85.38% எனவும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என வெறும்
13.02% பேர் தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சமூக
வலைதளங்களில் வைரலாகப் பரவ உடனடியாக அந்த கருத்து கணிப்பை நீக்கிவிட்டது
நமது எம்.ஜி.ஆர். இணையதளம்.
சென்னை வெள்ளம் தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது அரசு
மீதும் முதல்வர் மீதும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கருதி
முன்னாள் டிஜிபி நட்ராஜ், அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
பின்னர்தான் வேறு ஒரு நட்ராஜின் பேட்டிக்கு தொலைக்காட்சி நிர்வாகம் தவறாக
முன்னாள் டிஜிபி படத்தைப் போட்டது தெரியவந்தது.
drnamathumgr
இதனைத் தொடர்ந்து நட்ராஜ் நீக்கம் உத்தரவை அதிமுக பொதுச்செயலரும்
முதல்வருமான ஜெயலலிதா ரத்து செய்திருந்தார். இது மிகக் கடுமையாக
விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான நமது எம்.ஜி.ஆர்.
நாளிதழின் இணையபக்கத்தில் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டிருந்தது.
2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி
பெறும்? என கேட்கப்பட்டிருந்தது.
அதில் அதிமுக கூட்டணிக்கு 13.02%; திமுக கூட்டணிக்கு 85.38% ; மற்றவை 1.66%
என பதிவாகி இருந்தது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையின் இணைய
தளத்திலேயே அதிமுகவுக்கு வெறும் 13.02% தான் ஆதரவு என கருத்து கணிப்பு
முடிவு வெளியாகி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அப்படியே
பிரிண்ட்ஸ்கிரீன் எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர்...
இதனால் அதிர்ச்சி அடைந்த நமது எம்ஜிஆர் தரப்பினர் உடனடியாக இணையதளத்தில்
இருந்து இந்த கருத்து கணிப்பையே நீக்கிவிட்டனர்.
அதிமுகவுக்கு கட்டம் சரியில்லை போல!
Read more at://tamil.oneindia.com
Read more at://tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக