சிரியாவில் மோதலை முடிவிற்கு கொண்டுவரும் முயற்சிகளில், சிரியாவிற்கான ஐநாவின் திட்டம் `ஒரு மைல்கல்' என, அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம், யுத்தம் மற்றும் சமாதானம் ஆகியவற்றுக்கிடையே ஒரு உண்மையான தெரிவை சிரியர்களுக்கு கொடுத்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆறு மாதங்களுள், முறையான பேச்சுக்களை நடத்துவது மற்றும் ஒற்றுமை அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்கு ஒரு நேர அட்டவணையை முன்மொழிந்த குறித்த திட்டத்தை, ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சிரிய அதிபர் பஸார் அல் அஸ்ஸாத்தின் எதிர்கால நிலை குறித்து, தீர்மானத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. சமாதானப் பேச்சுக்களின் முன் நிபந்தனைகளில் ஒன்றாக, சிரிய அதிபர் பதவியிலிருந்து விலகும்படி கோரக் கூடாது என, ரஷ்யாவும் சீனாவும் தெரிவிக்கின்றன. ஆனால், அவர் பதவி விலக வேண்டும் என மேற்கத்தேய நாடுகள் வலியுறுத்துகின்றன. நாட்டினை ஒருமைப்படுத்தும் தகமையை அஸ்ஸாத் இழந்துவிட்டார் என தெரிவித்த கெர்ரி, அவரை உடனடியாக பதவி விலக கோருவது யுத்தத்தை நீடிப்பதாக அமையும் என தெரிவித்தார் bbc.தமிழ்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக