சென்னையில் திங்கள்கிழமை மாலை கனமழை பெய்தது. இதனால்
சென்னையில் முக்கிய சாலைகளில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு புரசைவாக்கம், ராதாகிருஷ்ணன் சாலை, தி.நகர், வடபழனி, அண்ணசாலை, எழும்பூர், கிண்டி, ராயப்பேட்டை, டிடிகே சலை, சென்ட்ரல், கோடம்பாக்கம் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வடபழனியில் இருந்து போரூர் செல்லும் ஆற்காடு சாலையில் கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பேருந்து மற்றும் மற்ற வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனிடையே தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் இரண்டு அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பள்ளம் குளம் நிரம்பியது.
காளங்கரை உள்ள பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டதால் முள்ளுக்காடு, முத்தையாபுரம், வீரநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகயில் வெள்ள நீர் புகுந்துள்ளது. அந்தப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தட்டப்பாறை பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை என்ற பகுதி அருகே சாலை துண்டிக்கப்பட்டு, நீர் வெளியேறி வருகிறது. இதனால் தூத்துக்குடி நெல்லை இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.nakkheeran,in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக