செவ்வாய், 24 நவம்பர், 2015

தந்தி டிவி ரங்கராஜ் பாண்டே சொல்வது உண்மையா? நிருபித்தால் தொழிலையே விட்டு விடுவேன் ..பாண்டே பதில்.


சென்னை: குற்றச்சாட்டை நிரூபித்தால் தொழிலைவிட்டே விலகிவிடுவேன்
என்று தந்தி டிவி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே, திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சு.ப.வீரபாண்டியனிடம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டு பத்திரிகை உலகம் இடதுசாரி கொள்கை ஆதிக்கம் கொண்டது. திராவிட சிந்தாத்தத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இதில் ஒரு சில பத்திரிகைகள் மட்டும் வேறுபட்டவை. ஒரு சில செய்தியாளர்கள் மட்டும் வலதுசாரி சிந்தனையுள்ளவர்களாக உள்ளனர்.
அதுபோன்ற வலதுசாரி சிந்தனை கொண்டவராக செயல்படுகிறார் தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக திராவிட இயக்கங்களால் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது< பாண்டே நடத்திய 'என் கேள்விக்கு என்ன பதில்?' நிகழ்ச்சியில், தி.க.தலைவர் வீரமணியிடம் தாறுமாறாக கேள்விகளை கேட்டுவிட்டார் என்பதே இந்த குற்றச்சாட்டுக்கு அடிப்படை அமைத்தது.
'பாம்பையும், பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி' என்று பெரியார் கூறியது வன்முறையை தூண்டுவதாகாதா? என பாண்டே கேட்க, வீரமணியோ, அது பெரியார் கூறிய வார்த்தையே கிடையாது என விளக்கம் கொடுத்தா
இந்நிலையில், நிகழ்ச்சி ஒளிபரப்படும்போது, இதை பெரியார்தான் கூறினார் என்று, ஒரு புத்தகத்தை மேற்கோள்காட்டினார் பாண்டே. ஆனால், வீரமணியை பேட்டியெடுக்கும்போது அதை காட்டியிருந்தால் அவர் விளக்கம் அளிக்க வசதியாக இருந்திருக்கும். பேட்டி ஒளிபரப்பாகும் நேரத்தில் புத்தகத்தை மேற்கோள்காட்டியது உள்நோக்கம் கொண்டு என திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்தது.
ஆர்.எஸ்.எஸ் அபிமானி? திராவிடர் கழக வலியுறுத்தலை தொடர்ந்து, திராவிடர் கழகம் கொடுத்த மறுப்பு வீடியோவை தந்தி டிவி மறுநாள் ஒளிபரப்ப வேண்டியதாயிற்று. இந்நிலையில், பாண்டே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் என்று கூறி, காக்கி டவுசர், துப்பாக்கியுடன் நிற்கும் ஒரு சிறுவன் படம், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
சுய விளக்கம் அந்த சிறுவனை பார்க்கும்போது, பாண்டேவின் முகச்சாயலும் தெரிந்ததால் பலரும் அது பாண்டே என நம்பினர். இந்நிலையில், 'பாண்டேவுக்கு என்ன கேள்வி' என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை தந்தி டிவி சமீபத்தில் நடத்தியது. அதில் பாண்டேவிடம், சு.ப.வீரபாண்டியன் கேள்வி கேட்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பாண்டேவின் நிலைப்பாடு விளக்கமாக கூறப்பட்டது
சுப.வீ கேள்வி இந்த நிகழ்ச்சியிலிருந்து சில கேள்விகள்: சுப.வீ: இந்து முன்னணி தலைவர் ராமகோபலனிடம் கேள்வி கேட்டபோது, குருவிடம் அமர்ந்துள்ள சிஷ்யனைபோல இருந்த நீங்கள், திராவிடர் கழகத்தினரிடம் பேசும்போது, வேறு மாதிரி மாறிவிடுகிறீர்களே?
பாண்டே பதில்: ராமகோபாலனிடம் நேர்காணல் நடத்தும்போது, நான், தொலைக்காட்சி சேனலுக்கு வந்தது புதிது என்பதால் எனது ஸ்டைல் வேறுமாதிரி இருந்தது. ஆனால் ராமகோபாலனைவிட இந்துத்துவாவை தூக்கிப்பிடித்து செயல்படும் அர்ஜுன் சம்பத் போன்றவர்களிடம் நான் வீரமணியிடம் கேட்டதைபோலத்தான் குறுக்கு கேள்விகள் கேட்டேன். பாஜக ராஜாவிடமும் அப்படித்தான் கேட்டேன். எதிரில் இருப்பவர் திமுககாரர் என்றால் நான் அதிமுககாரர் போல கேட்பேன். அவரே அதிமுககாரர் எனில், திமுககாரர் போல கேட்பேன்.
பெயர் விளக்கம் சுப.வீ: பாண்டே என்ற பெயர் தமிழ் மண்ணிற்கு அந்நியமாக தெரிகிறதே? பாண்டே: தமிழ் மண்ணிற்கு அந்நியமாக தெரிந்தாலும், இந்திய மண்ணிற்கு நெருக்கமான பெயர்தான் (சிப்பாய் கலக பேராளி). எனவே, அந்த பெயர் எனக்கு இஷ்டம். மேலும், எனது குடும்ப பூர்வீகம், பீகார். ஆனால் நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில்தான்
அது ஏன் சொத்து வழக்கு? சுப.வீ: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பற்றிய செய்தியின்போது, உங்கள் தொலைக்காட்சியில் மட்டும் சொத்து வழக்கு என்று குறிப்பிடுகிறீர்களே.. சொத்து வழக்கு என்பது, அண்ணன்-தம்பி நடுவேயான சொத்து தகராறாக இருந்தால் குறிக்கும் சொல். வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்து எனில் அதை சொத்துக்குவிப்பு வழக்கு என்றுதானே கூற வேண்டும்?
ஆங்கில ஊடகம் அப்படித்தான் பாண்டே: இனிமேல், அந்த வார்த்தையை மாற்றுவது இயலாத காரியம். எங்கள் டி.வி மட்டுமல்ல ஆங்கில ஊடகங்கள் அத்தனையும், சொத்து வழக்கு எனவே குறிப்பிடுகின்றன. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட 2ஜி வழக்கு என்றாலே எல்லோருக்கும் புரிந்திவிடுகிறது. ஒரு லட்சம் கோடி இழப்பீட்டு வழக்கு என யாரும் கூறுவது கிடையாது. மேலும், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கையும், நாங்கள் சொத்து வழக்கு என்றுதான் குறிப்பிட்டு செய்தி ஒளிபரப்புகிறோம்.
ஊடக அறமா? சுப.வீ: பெரியார் கூறாத வார்த்தையை கூறியதாக கூறி ஆதாரம் என்று யாரோ கூறியதை வெளியிட்டீர்கள். விருந்தினரிடமே கேட்டு விடைபெறுவதுதானே ஊடக அறம்?
பாண்டே: வீரமணிக்கு மட்டும் அதுபோல செய்யவில்லை. பாஜகவை சேர்ந்த பலரது நேர்காணலின்போதுகூட இதேபோல நிகழ்ச்சியின்போது சில ஆதாரங்களை இணைத்து வெளியிட்டுள்ளோம். மேலும், திராவிடர் கழகம் கொடுத்த மறுப்பையும், மறுநாளே ஒளிபரப்பியுள்ளோம். நாங்கள் ஒளிபரப்பமாட்டோம் என்று கூறவில்லை. எங்களுக்கு தேவை விடைதான். தவறு செய்திருந்தால் இருகைகளையும் உயர்த்தி தவறு செய்துள்ளேன் என்று கூறுவதில் எனக்கு தயக்கம் இல்லை.

பாண்டே: வீரமணிக்கு மட்டும் அதுபோல செய்யவில்லை. பாஜகவை சேர்ந்த பலரது நேர்காணலின்போதுகூட இதேபோல நிகழ்ச்சியின்போது சில ஆதாரங்களை இணைத்து வெளியிட்டுள்ளோம். மேலும், திராவிடர் கழகம் கொடுத்த மறுப்பையும், மறுநாளே ஒளிபரப்பியுள்ளோம். நாங்கள் ஒளிபரப்பமாட்டோம் என்று கூறவில்லை. எங்களுக்கு தேவை விடைதான். தவறு செய்திருந்தால் இருகைகளையும் உயர்த்தி தவறு செய்துள்ளேன் என்று கூறுவதில் எனக்கு தயக்கம் இல்லை.
ஆர்எஸ்எஸ் சீருடை சுப.வீ: நீங்கள் ஆர்எஸ்எஸ் சீருடை அணிந்தபடி, கையில் துப்பாக்கியுடன் திரிவதை போன்ற போட்டோ சமூக தளங்களில் கிடைக்கிறதே. அது நீங்கள்தானா
தொழிலைவிட்டு செல்வேன் பாண்டே: இந்த படத்தை பார்த்துவிட்டு எனது பேஸ்புக் பக்கத்தில், இப்படி கூறினேன் "யார் பெத்த பிள்ளையோ என் பெயரை சொல்லி திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறது". அதுதான் உண்மை. நான் எனது வாழ்க்கையில் ஒருநாள் கூட, சாக்கா எனப்படும் ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்கு ஒருநாள் கூட போகவில்லை. இந்த படம் மார்பிங் மாதிரியும் இல்லை. யாரோ ஒருத்தர், ஆசைக்காக எடுத்த படம் அது. அதை நான் என கூறி திசைதிருப்புவதற்காக இப்படி சுற்றவிட்டுள்ளனர். அது நான்தானா என விசாரிக்க கூட யாருக்கும் எண்ணம் இல்லை. அந்த படம் என்னுடையதுதான் என நிரூபித்தால் நான் இந்த தொழிலைவிட்டே வெளியேறிவிடுவேன்.
பாகுபாடு சுப.வீ: நாட்டில் நடைபெறும் சகிப்புத்தன்மை சர்ச்சை பற்றி? பாண்டே: சகிப்புத்தன்மையற்ற செயல் காலம் காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பது நிதர்சனம். ஆனால், ஒரு தரப்பு பாதிக்கப்படும்போது அது பெரிதாக்கப்படுவதும், மற்றொரு தரப்பு பாதிக்கப்படும்போது அதை கண்டுகொள்ளாமல்விடுவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. தாத்ரி கொலையைபோன்றதே, கர்நாடகாவில் இந்து அமைப்பை சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டதும் முக்கியமானதுதான். ஆனால், ஊடகங்களும், அரசியல்வாதிகளும் ஒருதரப்புக்கு மட்டுமே ஆதரவாக உள்ளனர். இவ்வாறு பாண்டே தெரிவித்தார்.
://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: