புதன், 25 நவம்பர், 2015

இன்னும் 3 நாளைக்கு மழை.. 27முதல் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க! - ரமணன் எச்சரிக்கை

சென்னை: கடலோர மாவட்டங்களில் மீண்டும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நவம்பர் 27 முதல் 29 வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு என மீண்டும் ரமணன் எச்சரித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்தது. கடந்த 15 தினங்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெய்த கனமழை கடலூரையும், சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. மழை சற்றே ஓய்ந்து வெயில் தலைகாட்டியுள்ள நிலையில், மீண்டும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் எச்சரித்துள்ளார்.  சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், தெற்கு அந்தமான் கடற்பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இந்த மேலடுக்கு சுழற்சி 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று கூறினார். தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திர கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார். அடுத்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 10 செ.மீ., அம்பாசமுத்திரம் மற்றும் மணிமுத்தாறில் 3 செ.மீ., மழை அளவு பதிவாகியுள்ளது.

Read more at: amil.oneindia.com

கருத்துகள் இல்லை: