பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130
பேர் கொல்லப்பட்டனர். 350 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் மொத்தம்
9 தற்கொலை படை தீவிரவாதிகள் ஈடுபட்டனர்.
அவர்களில் 7 பேரை பிரான்ஸ் போலீசார் சுட்டுக்கொன்றனர். 2 பேர் தப்பி விட்டனர். மேலும் இந்த தாக்குதலுக்கு பெல்ஜியத்தைச் சேர்ந்த அப்துல் ஹமீத் அபாவுத் (27) என்பவன் மூளையாக செயல்பட்டான். அவன் சிரியாவில் அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சில் பலியானான்.
கிரீஸ் வழியாக அகதிகளுடன் புகுந்த தீவிரவாதிகள் பெல்ஜியத்தில் இருந்து பிரான்ஸ் வந்து தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. எனவே அங்கு தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் பாரீஸ் போன்று பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் தொடர் தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். அதை முறியடிக்க பெல்ஜியம் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது.
பிரசல்ஸ் நகரம் கடந்த 3 நாட்களாக முழுவதும் மூடி சீல் வைக்கப்பட்டது. மெட்ரோ ரெயில் சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. கடைகள் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவத்து நிறுத்தப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூட பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைகேல் உத்தரவிட்டார்.
இதனால் அங்கு மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றன. எனவே அவர்களது இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே பாரீஸ் நகரில் இருந்து தப்பித்த முக்கிய தீவிரவாதி சலே அப்தெஸ்லாம் தலைமையில் பலர் பெல்ஜியத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நேற்று பிரசல்ஸ், சார்லெரோய் ஆகிய நகரங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அதில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் முக்கிய குற்றவாளி சலே அப்தெஸ்லாம் இன்னும் கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்களோ, வெடி பொருட்களோ கைப்பற்றப்படவில்லை. மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக