முகமது முஹாடீன் சர்னாஸ் நிலாம் எனப்படும் நிலாம் டீன் என்கின்ற இலங்கை
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி தனது விருப்பதுடனே தங்கள் இயக்கத்தில் இணைந்து
கொண்டுள்ளதாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினால் வெளியிடப்படும் டாபிக் பத்திரிகை
எனப்படும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
முகமது முஹாடீன் சர்னாஸ் நிலாம் எனப்படும் நிலாம் டீன் என்கின்ற இலங்கை
நபர் குடும்ப உறுப்பினர்கள் 16 பேருடன் அந்த இயக்கத்தில்
இணைந்துள்ளதாகவும், அவர்களில் 6 பிள்ளைகளும் உள்ளடக்கப்படுவதாக அந்த
பத்திரிகையில் சுட்டிக்காட்டப்ட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் மீது விமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட
சந்தர்ப்பத்தில் தாக்குதலில் காயமடைந்தவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்ற
போது மேலும் ஒரு விமான தாக்குதலில் முகமது முஹாடீன் சர்னாஸ் நிலாம்
எனப்படும் நிலாம் டீன் உயிரிழந்துள்ளதாக அந்த பத்திரிகையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் ஐ.எஸ் இயக்கத்தினால் அபு சுரே சய்லான் என அடையாளப்படுத்தப்பட்ட குறித்த இலங்கையர் கண்டி, வெரலகம பிரதேசத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான முகமது முஹாடீன் சர்னாஸ் நிலாம் எனப்படும் நிலாம் டீன் என பொலிஸாரினால் கண்டு பிடிக்கப்பட்டன.
அடையாள அட்டை இலக்கம் 7735881070 V என பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர் 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து 2014ம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலப்பகுதியினுள் கலேவெல பிரதேச சர்வதேச பாடசாலை ஒன்றில் அதிபராக கடமையாற்றியுள்ளார். அந்த காலப்பகுதியில் அவர் கலேவெல பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார்.
இரண்டு வருட காலப்பகுதியில் அவர் எளிய வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்ததாக குறித்த சர்வதேச பாடசாலையின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் பாடசாலை விடுமுறை நிறைவடைந்து பாடசாலை ஆரம்பமாகவிருந்த சந்தர்ப்பத்தில் அவர் மக்கா செல்வதாக கூறிவிட்டு சென்றதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த நபருக்கு ஆறு பிள்ளைகள் உள்ளதாகவும் இளைய குழந்தை கிடைக்கவிருந்த சந்தர்ப்பத்தில் அவர் மக்கா சென்றதாகவும், அவர் அநேக சந்தர்ப்பங்களில் தனது மடிக்கணினி பயன்படுத்தி கொண்டிருந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் பாக்கிஸ்தான், இஸ்லாமாபாத் நகர சட்டம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஒருவராகும். அத்துடன் அவருக்கு சிங்களம், தமிழ், ஆங்கிலம், அரபு, உருது மொழிகள் தொடர்பில் சிறப்பான அறிவுத்திறன் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. elukathir.lk/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக