பிரிட்டனில் ஹம்ஸியார் பகுதியில் விபத்துக்குள்ளன விமானத்தில் ஒசாமா
பின்லேடனின் குடும்பத்தினர் இருந்ததாக பிரிட்டனுக்கான சவுதி தூதரகம்
கூறியுள்ளது.
வெள்ளியன்று இந்த தனியார்
விமானம் பிளக்புஸி விமானநிலையத்துக்கு அருகே விழுந்து எரிந்ததில், அதன்
விமானி உட்பட அனைத்து மூன்று பயணிகளும் கொல்லப்பட்டனர்.
சவுதி தூதர் வெளியிட்ட ஒரு டுவிட்டர் செய்தியில் அதில் கொல்லப்பட்ட பின்லேடன்குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்த பிரிட்டிஷ் புலனாய்வாளர்களை தாம் தொடர்புகொண்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த விமானம் அல்கைதாவின் முன்னாள் தலைவரான பின்லேடனின் சவுதியில் இருக்கும் குடும்பத்துக்கு இந்த விமானம் சொந்தமானதாகும்.
இத்தாலியின் மிலானில் இருந்து வந்த இந்த விமானம், விமான நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு கார் ஏல விற்பனை நிலையத்துக்கு மேலே விழுந்துள்ளது.
அது வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது.
பின்லேடனின் தந்தையார் 1910 ஏமனில் இருந்து சவுதியில் குடியேறியுள்ளார். அங்கு அவர் ஒரு கட்டிட நிர்மாண நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். பின்லேடனுக்கு பல மனைவிகள் உள்ளனர். அவர்கள் மூலம் அவருக்கு 50 பிள்ளைகள் வரை உள்ளனர்.
அவரது மூத்த மகனான சலீம் பின் லேடன் 1988இல் டெக்ஸாசில் ஒரு விமான விபத்தில் இறந்தார்bbc.com/tamil/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக