ஞாயிறு, 26 ஜூலை, 2015

லிட்டர் தண்ணீருக்கு 500 கிலோ மீட்டர் ஓடும் பைக் Brazil This motorbike runs on WATER

பிரேசில்: ''ஐம்பது ரூபாய்க்கு போடுங்க, 30 ரூபாய்க்கு போடுங்க, 20 ரூபாய் தான் இருக்கு,'' என்று, பெட்ரோல் பங்க்கில் சற்று கூச்சத்துடன் பெட்ரோல்போடும் இருசக்கர வாகன ஓட்டிகளே... இதோ உங்களை ரட்சிக்க ஒருவர் வந்து விட்டார்.'சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே பெட்ரோல் காலியாகி விட்டதா? பையிலும் 10 பைசா கூட இல்லையா? அதற்காக கவலைப்பட வேண்டாம். அருகில் ஏதாவது குளம், குட்டை இருக்கிறதா என்று தேடுங்கள். இல்லையென்றால், சாலையில் எங்காவது தண்ணீர் தேங்கிக் கிடக்கிறதா என்று பாருங்கள்,'' என்கிறார், ரிக்கார்டோ ஆஸேவெடோ.நபரின் பெயரைப் படித்தவுடனேயே வெளிநாட்டு சங்கதி தானே என்று புலம்பாமல் தொடர்ந்து படித்தால், சுவாரசியம் கூடும்!


பிரேசில் நாட்டின் பாலோ நகரில் வசிப்பவர், ரிக்கார்டோ ஆஸேவெடோ. நிறைய ஆராய்ச்சிகள் செய்பவர். 'பெட்ரோலுக்காக, மக்கள் போராடுகின்றனர். ஒவ்வொரு நாடும், அடுத்த நாடு மீது போர் தொடுக்கும் அளவுக்குச் செல்கிறது' என்று கவலைப்பட்டிருக்கிறார். உடனே, இதற்காக ஒரு ஆராய்ச்சியைத் துவங்கி இருக்கிறார்.எத்தனை ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தாரோ தெரியவில்லை. கடந்த வாரம், ஒரு 'பைக்' மற்றும் ஒரு லிட்டர்தண்ணீர் பாட்டிலுடன், நகரின் பிரதான சாலைக்கு வந்தார், ரிக்கார்டோ ஆஸேவெடோ.

'எல்லாரும் இங்கே வாருங்கள்; என் வண்டியை சோதனை செய்து கொள்ளுங்கள். இந்த வண்டியில் பெட்ரோலுக்குப் பதிலாக, தண்ணீர் ஊற்றி ஓட்டப் போகிறேன்' என்று அறிவித்தார். மக்கள் திரண்டனர். பெட்ரோல் டேங்க், வண்டி இன்ஜின் மற்றும் சில பாகங்களில் சோதனை செய்தனர்.பெட்ரோல் டேங்க் காலியாகத்தான் இருந்தது. மக்கள் முன்னிலையிலேயே, ஒரு லிட்டர் தண்ணீரை, டேங்கில் ஊற்றினார். அடுத்த நிமிடம், பைக்கை ஸ்டார்ட் செய்தார்; பைக் இயங்கத் துவங்கியது. கூடியிருந்த மக்கள், கைதட்டி ஆரவாரம் செய்தனர். பின்னால் ஒருவரை ஏற்றி, வண்டியை ஓட்ட ஆரம்பித்தார்.

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 500 கிலோ மீட்டர் ஓடும் என்று, ரிக்கார்டோ கூறியிருக்கிறார். ஆனால், தண்ணீரில் வண்டி ஓடுவதை நம்பினாலும், ஒரு லிட்டருக்கு, 500 கி.மீ., என்பதை யாரும் நம்பவில்லை. 490 கி.மீ., ஓட்டிக் காட்டி, அசத்தினார் ரிக்கார்டோ.

தண்ணீரில் எப்படி பைக் ஓடுகிறது? இதோ, ரிக்கார்டோ ஆஸேவெடோ சொல்கிறார்: பெட்ரோலில் ஓடும் பைக்கில் இருந்து வெளியேறுவது போல, இதில் இருந்து, கார்பன் மோனாக்சைடு வெளியேறாது.இந்த இன்ஜினில் இருந்து, நீராவி மட்டும் தான் வரும். இந்த இன்ஜினுக்கு, 'டி பவர் ஹெச்20' என்று பெயர் வைத்திருக்கிறேன்.இந்த பைக்கில், காருக்கான ஒரு பேட்டரி பொருத்தியிருக்கிறேன். அந்த பேட்டரியில் இருந்து மின்சாரம், டேங்கில் இருக்கும் தண்ணீரில் பாய்ச்சப்படுகிறது. அப்போது, தண்ணீரில் இருக்கும் ஹைட்ரஜன் சக்தி எழுந்து, பைக்கின் இன்ஜினை இயக்குகிறது. சுத்தமான தண்ணீர் மட்டுமின்றி, குளம் குட்டைகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரையும் கூட பயன்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

பொதுவாகவே, வெளிநாடுகளில் எதைக் கண்டுபிடித்தாலும், அது பயன்பாட்டுக்கு வந்து விடும் என்ற நம்பிக்கையும் நமக்கு உண்டு. அதுபோல இதுவும்பயன்பாட்டுக்கு வந்துவிட்டால்...உங்கள் கற்பனை குதிரை ஓட ஆரம்பித்திருக்குமே! ஓடட்டும்... ஓடட்டும்! dinamalar.com

கருத்துகள் இல்லை: