டெல்லியில் நிர்பயா என்ற பெண், இளைஞர்கள் சிலரால் பாலியல் பலாத்காரத்துக்கு
உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் கொடும் காயமடைந்த அவர்
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்த கற்பழிப்பு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்கள் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்தும்,
அதன் பின்னணி குறித்தும் பி.பி.சி. டி.வி. நிறுவனத்தைச் சேர்ந்த லெஸ்லி
உட்வின் என்ற பெண் ஆவணப் படம் தயாரித்தார்.
இந்த படத்தின் ஒரு பகுதியாக, ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த, நிர்பயா
கற்பழிப்பு வழக்கின் குற்றவாளிகளை அவர் பேட்டி எடுத்தார். அதைத் தொடர்ந்து
“இந்தியாஸ் டாட்டர்” (இந்தியாவின் மகள்) என்ற பெயரில் அந்த ஆவணப்படம்
வெளியானது. ஏராளமான பாஜக தொண்டர்கள் குண்டர்கள் தற்போது ஜெயில் உள்ளார்கள் .அவர்கள் மூலம் பாஜகவின் நிர்வாணம் தெரிய கூடாது என்பதற்குதான் இந்த ஏற்பாடு!
அந்த படம் மிகப் பெரிய சலசலப்பை இந்தியாவுக்குள் ஏற்படுத்திவிட்டது. அந்த ஆவணப்படத்தில் குற்றவாளிகள் தெரிவித்திருந்த கருத்துகள், தேச அளவில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பிவிட்டது. சிறைத்துறைக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்திவிட்டது.
இதைத்தொடர்ந்து கைதிகளை சந்திக்க தரப்படும் அனுமதி உத்தரவை சுயநலனுக்காக பயன்படுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முன்வந்துள்ளது. இதற்காக புதிய விதிமுறைகள் இயற்றப்பட்டுள்ளன.
அதன்படி, முன்புபோல் சாதாரணமாக கைதி சந்திப்புக்கான அனுமதியை பெற்றுவிட முடியாது. ஆவணப்படம், பேட்டி, கட்டுரை மற்றும் ஆய்வுக்காக கைதிகளை சந்திக்க விரும்புகிறவரில் ஒருவருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.
இதற்காக விண்ணப்பிக்கவேண்டும். அந்த விண்ணப்பத்தின் மீது சம்பந்தப்பட்ட மாநில அரசு உரிய முடிவை எடுக்கும். கைதியை சந்திக்க விரும்பும் நாளுக்கு 30 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாட்டவர் என்றால் 60 நாட்களுக்குள் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். கட்டுரை எழுத விரும்பும் செய்தித்தாள் நிறுவனத்தின் பத்திரிகையாளர், 7 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பத்தை மாநில அரசுக்கு ஜெயில் சூப்பிரண்டு அனுப்புவார். இந்த விஷயத்தில் மத்திய உளவுத்துறையின் ஆலோசனையும் பெறப்படும். விண்ணப்பத்தோடு ஒரு உறுதிமொழிப் பத்திரத்தை அளித்து, ஒரு லட்சம் ரூபாயை முன்வைப்புத் தொகையாக செலுத்தவேண்டும். சிறை விதிகளில் எதையாவது மீறினால், முன்வைப்புத் தொகை திரும்ப கிடைக்காது.
சினிமா படம் எடுக்க வேண்டும் என்றால், அவரோடு கேமரா அல்லது டேப் ரெக்கார்டர் அல்லது படப்பிடிப்புக்கு தேவையான உபகரணம் மட்டும் அனுமதிக்கப்படும். டிரைபாட், செல்போன், தாள், புத்தகம், பேனா போன்றவை அனுமதிக்கப்படாது.
கைதியுடனான சந்திப்பின்போது ஜெயில் சூப்பிரண்டு உடனிருப்பார். சந்திப்பு முடிந்த பிறகு, அவர் கொண்டு வந்திருந்த கைக் கேமரா அல்லது டிக்டாபோன் அல்லது டேப் ரெக்கார்டரை ஜெயில் சூப்பிரண்டிடம் 3 நாட்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.
அவர் அந்த கேமராவில் பதிவு செய்யப்பட்டவற்றை பார்ப்பார். அதில், ஆட்சேபனைக்கு உரிய காரியங்கள் இடம்பெற்றிருந்தால் அவற்றை அவர் அழித்துவிடுவார்.
அதுமட்டுமல்ல, அந்த ஆவணப்படம் அல்லது கட்டுரை அல்லது ஆய்வு அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு மாநில அரசிடம் இருந்து தடையற்ற சான்றை சம்பந்தப்பட்டவர் பெறவேண்டும்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக